24/12/2023
அகில இலங்கை பரதநாட்டிய போட்டி 2023
(301 - 1000 க்கு இடைப்பட்ட மாணவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கான பிரிவில்) புத்தாக்க நடனம்
போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் பல சவால்களின் மத்தியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள்.
காலை மாலை நேரம் பாராது நெறியாள்கை செய்த நடன ஆசிரியர்களான திருமதி. பாமினி ரமேஷ்குமார் (நட்டுவாங்கம்) திருமதி. நந்தினி றுக்ஷான்
அவர்களுக்கும், நடனத்தினை முழுமையடைய இசை ஒத்துழைப்பு வழங்கிய எம் கல்லூரியின் சங்கீத ஆசிரியர்களான
திருமதி.பவானி குருபரன்
திருமதி.கஜேந்திரா பிரபாகரன்
அவர்களுக்கும்
பக்கவாத்திய இசை மூலம் நடனத்தினை மெருகூட்டிய
மிருதங்க வித்துவான்
திரு.நி.மதிரூபன் (ஆசிரியர் - யா/கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி) அவர்களுக்கும் மற்றும் வயலின் இசை வழங்கிய
திரு.ரமேஷ் துரைசிங்கம் (ஆசிரியர் - வ/இந்துக்கல்லூரி) அவர்களுக்கும்
எமது நடனத்திற்கு பல வழிகளிலும் ஊக்கமும் ஒத்துழைப்பும் வழங்கியதோடு நடனத்திற்கான பாடல் வரிகளினை எழுதித்தந்த எமது வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் நடன ஆசிரிய ஆலோசகர் திருமதி.வீ.சூரியயாழினி அவர்களுக்கும்
வெற்றியீட்டிய மாணவ செல்வங்களான
செல்வி.க.அபிநயா
செல்வி.சு.கீர்த்தனா
செல்வி.ர.லிதிக்ஷா
செல்வி.செ.கனிஷ்கா
செல்வி.மு.சைந்தவி
செல்வி.ர.ஹரினி
செல்வி.ஶ்ரீ.யதுர்ஷிகா
செல்வி.வை.அஷ்மிதா
செல்வி.கீ.ஷபிசனா
செல்வி.ஜெ.சுபனயா
அனைத்துள்ளங்களுக்கும்
எமது பாடசாலை சமூகத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்🤝
Vavuniya V/Saivapragasa ladies college