Subramaniam Sivakumar

Subramaniam Sivakumar Senior Academic

தொழில்வல்லுநர்களின் மாபியாவா?×××××××××××××××××××××××××××⚫️🔴🟢இலங்கையின் 22 வது அரசியலமைப்பு சட்டமும் திருத்தமும் …🔴ஏன் இந...
24/09/2026

தொழில்வல்லுநர்களின் மாபியாவா?
×××××××××××××××××××××××××××
⚫️🔴🟢இலங்கையின்
22 வது அரசியலமைப்பு சட்டமும் திருத்தமும் …

🔴ஏன் இந்த கதறல்கள், எதிர்ப்புகள்.

இது நீதித்துறைச் சீர்திருத்தமா
அல்லது அரசியல் அலப்பறையா?
அல்லது வழமை போன்ற குறிப்பிட்ட
தொழில்வல்லுநர்களின் மாபியாவா?

✅✅ஓர் ஆழமான பகுப்பாய்வு.

ஒரு ஜனநாயக நாட்டின் தூணாக
விளங்குவது அதன் நீதித்துறையாகும்.

ஊழல்வாதிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்காமல் இருப்பதற்கும், விளிம்புநிலை மக்களுக்கு விரைவான நீதி கிடைப்பதற்கும் தூய்மையான, நடுநிலையான நீதித்துறை மிக மிக அவசியமானது.

♦️இலங்கையில் அண்மைக்காலமாகப் பேசப்பட்டு வரும் 22 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதித்துறையின் ஓய்வுபெறும் வயதை நீதிமன்ற செயல்திறனுக்காக மாற்றுவதை முதன்மையாகக் கொண்டுள்ளதால், அது நாட்டின் அரசியல் அரங்கில் மிகப்பெரிய விவாதத்தையும் "அலப்பறையையும்" கிளப்பியுள்ளது.

🟢வயது நீடிப்பு ஏன் இப்போது அவசியமாகிறது?

✅உயர் நீதிமன்றம் அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு ஒரு நீதிபதி பதவி உயர்வு பெற்று வரும்போது, அவர் பல வருட அனுபவத்திற்குப் பிறகே அந்தப் பதவியை அடைகிறார்.

✅அப்போது அவருக்கு 60 வயதிற்கு மேல் ஆகிவிடுகிறது. துரதிர்ஷ்டவசமாக, அவர் ஒரு பெரிய ஊழல் வழக்கு அல்லது சிக்கலான வழக்கை விசாரித்து இறுதித் தீர்ப்பு எழுதும் உச்சகட்ட நிலைக்கு வரும்போது, அவரது ஓய்வு காலம் (65 வயது) வந்துவிடுகிறது.

அதன் பிறகு வரும் புதிய நீதிபதி அந்த பொறுப்பை ஏற்கும்போது, அவர் ஆரம்பத்தில் இருந்து அனைத்து சாட்சியங்களையும் ஆவணங்களையும் மீண்டும் படித்துப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

✅இந்தக் காலதாமதத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகள் வழக்கை திட்டமிட்டு இழுத்தடிக்கிறார்கள், ஆட்சி மாறும்போது தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தப்பிக்கப் பார்க்கிறார்கள் என்பதே ஆழமான உண்மை.

✅இந்த முடக்கத்தைத் தவிர்த்து, குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனை பெற்றுத்தரவே இந்த வயது நீடிப்பு (67 ஆக) கொண்டுவரப்படுகிறது.

இதனால் அரசியல்வாதிகள் ஏன் கத்துகிறார்கள், பொதுமக்கள் ஏன் குழம்புகிறார்கள்?

⚫️இந்த வயது நீடிப்பு என்பது ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் நன்மை பயக்கும் என்றாலும், தற்போதைய அரசாங்கம் தங்களுக்கு நெருக்கமான சில குறிப்பிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளை இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் வைத்திருக்கவே இந்த அவசரத் திருத்தத்தைக் கொண்டுவருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

🔴இது உண்மையான சட்ட அக்கறையால் அல்லாமல், அரசியல் இலாபத்திற்காகவே பரப்பப்படுகிறது.

நாட்டின் பொதுமக்களுக்கு நீதிமன்றத்தின் உள்நாட்டு நடைமுறைகள் மற்றும் வழக்குத் தேக்கங்கள் பற்றிய விரிவான புரிதல் இருப்பதில்லை.

ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்படும் எதிர்மறை செய்திகளாலும், அரசியல்வாதிகள் மீதான பொதுவான அவநம்பிக்கையினாலும் மக்கள் உண்மையான நிர்வாகப் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் குழப்பமடைகிறார்கள்.

⚫️🔴"அரசு எந்த அநியாயத்தையும் செய்யவே இந்தச் சட்டம்" என்ற வாதம் வெறும் அரசியல் ஊகமே தவிர அதில் சட்டபூர்வ உண்மை இல்லை.

🟢இந்தத் திருத்தம் தற்காலிகமானதோ அல்லது தனிநபருக்கானதோ இல்லை. இது எதிர்காலத்தில் வரவிருக்கும் அனைத்து நீதிபதிகளுக்கும் பொதுவான ஒரு நிரந்தரச் சட்டம் ஆகும்.

🟢இலங்கையின் உயர் நீதிமன்றம் இந்தச் சட்டத்தை ஆராய்ந்து, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையுடன் இதை நிறைவேற்ற முடியும் என்று பச்சைக்கொடி காட்டியுள்ளது.

அமெரிக்கா, இந்தியா, ஐக்கிய ராச்சியம் (UK) போன்ற முன்னணி ஜனநாயக நாடுகளில் நீதிபதிகள் 65 முதல் 70 வயது வரை, அல்லது வாழ்நாள் முழுவதும் பணியாற்றுகிறார்கள்.

அங்கெல்லாம் இது நீதித்துறையை வலுப்படுத்தவே உதவியுள்ளது.

🟢உண்மையான நீதித்துறைச் சீர்திருத்தத்திற்கான பிற தேவைகள்
வயது நீடிப்பு என்பது காலதாமதத்தைத் தடுக்கும் ஒரு மிகச்சிறந்த தற்காலிக நிர்வாக நகர்வாகும்.

🟢எனினும், நாட்டில் ஊழலற்ற மற்றும் வேகமான நீதித்துறையை உருவாக வேண்டுமானால் இவைகளும் அவசியமாகின்றன.

மக்கள் தொகைக்கு ஏற்ப கீழ்மட்ட நீதிமன்றங்கள் முதல் மேல் நீதிமன்றங்கள் வரை உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, நீதிபதிகளின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த வேண்டும்.

நீதிமன்ற நடைமுறைகளை 'இ-கோர்ட்ஸ்' (E-Courts) மூலம் கணினிமயமாக்குவது ஆவணங்கள் காணாமல் போவதைத் தடுத்து, வெளிப்படைத்தன்மையை உருவாக்கும்.

பெரிய அளவிலான நிதி மோசடிகள் மற்றும் அரசியல் ஊழல் வழக்குகளை விசாரிக்க பிரத்தியேக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, அவற்றுக்கு ஓராண்டு காலக்கெடு விதிக்கப்பட வேண்டும்.

✅அரசியலில் கற்பனைக் கதைகளையும் ஊகங்களையும் பேசக் கூடாது. ஒரு சட்டத்தைக் கொண்டுவரும் போது அதன் நடைமுறை நன்மைகளைப் பார்க்க வேண்டும்.

✅✅வழக்குகள் இழுத்தடிக்கப்படாமல், குற்றவாளிகள் தப்பிக்காமல் இருக்க இந்த வயது நீடிப்புச் சட்டம் நிச்சயம் சரியானது; அதை நாம் ஆதரிக்க வேண்டும்.

✅✅அதேவேளை, எதிர்காலத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தை அரசு ஏதேனும் ஒரு தருணத்தில் தவறாகப் பயன்படுத்த முயன்றால், அப்போது மக்கள் விழிப்போடு இருந்து அந்தப் பிழையை துணிவோடு எதிர்க்க வேண்டும். அதுவே உண்மையான ஜனநாயகப் பண்பாகும்.

🟢ஊகங்களை கடந்து உண்மைகளைப் அறிவதற்கு நாட்டுமக்களாகிய நாம் என்ன நடக்கிறது என தெளிவு பெறவேண்டும்.

🔴⚫️இவளவு காலமும் அரசுகள் தமக்கு சார்பாக சட்டங்களை மாற்றியதால் இப்போதும் அதுதான் காரணம் என மக்கள் மத்தியில் எதிர்கட்சிகள் தவறாக பரப்புரை செய்கின்றனர் செய்யப்படுகிறது என்பதே உண்மையாகும்.

✅✅நாட்டின் நீதித்துறை ஒழுங்காக இல்லாவிட்டால் எதையுமே சரியாக
கொண்டு செல்ல முடியாது.

✅✅ஏன்என்றால் அநியாயக்காரர்களும் நீதியையே நாடுகிறார்கள், ஞாயம் தேடுபவர்களும் நீதித்துறையையே நாடுகிறார்கள்.

✅எனவே நீதித்துறையை சீர்செய்யும் நடவடிக்கையாகவே
இதை பார்க்கவேண்டியிருக்கிறது.
அவ்வளவு தான்.

⚫️🔴அது தவிர்ந்த மற்றைய அலப்பறைகள் எல்லாம் தத்தமது சுயநல நடவடிக்கைகளாகவே பார்க்கவேண்டும்.
Thanks Kalaichelvi Paskaran

🌾 அரசாங்க வேலைவாய்ப்பு | இலங்கைக் கமத்தொழிற் சேவை — தரம் IIIமட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை 2024 (2026)அரச சேவை ஆணை...
21/09/2026

🌾 அரசாங்க வேலைவாய்ப்பு | இலங்கைக் கமத்தொழிற் சேவை — தரம் III
மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை 2024 (2026)

அரச சேவை ஆணைக்குழு | கமத்தொழில், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

📌 வெற்றிடங்கள் — மொத்தம் 125
• உதவிக் கமத்தொழிற் பணிப்பாளர் (கமத்தொழில் அபிவிருத்தி) — 75
• உதவிக் கமத்தொழிற் பணிப்பாளர் (கமத்தொழில் ஆராய்ச்சி) — 44
• உதவிக் கமத்தொழிற் பணிப்பாளர் (கமத்தொழில் பொருளியல்) — 06
⚠️ ஒரு விண்ணப்பதாரர் ஒரு நீரோட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

👤 யார் விண்ணப்பிக்கலாம்? (இது Limited பரீட்சை — அரச உத்தியோகத்தர்களுக்கு மட்டும்)

• இலங்கைத் தொழில்நுட்பச் சேவை / மாகாணத் தொழில்நுட்பச் சேவையின் விஷேட தரப் பதவி — அல்லது அப்பதவிகளில் 10 வருட சுறுசுறுப்பான திருப்திகரமான சேவை (கமத்தொழில் ஆலோசகர், ஆராய்ச்சி உதவியாளர், மண் சர்வேயர், காணி மதிப்பீட்டு உத்தியோகத்தர்)

• 4 வருட கமத்தொழிற் பட்டம் (ஆராய்ச்சி நீரோட்டத்துக்கு தாவரவியல் / இரசாயனவியல் / விலங்கியல் 4 வருட விஷேட பட்டமும் ஏற்கத்தக்கது) + கமத்தொழில் திணைக்களம்/மாகாண கமத்தொழில் திணைக்களத்தின் கீழ் 5 வருட சேவையுள்ள அநுசார உத்தியோகத்தர்

• பொருளியலாளர் உதவியாளர் 5 வருட சேவை · தோட்ட உதவியாளர் 10 வருட சேவை · கமத்தொழில் விஞ்ஞான/விஞ்ஞானப் பட்டத்துடன் 5 வருட சேவை

✅ 2009.11.04 அன்று கமத்தொழில் செயற்பாட்டு உத்தியோகத்தர் / நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் (கமத்தொழில்) பதவி வகித்து 5 வருட சேவை நிறைவு செய்தவர்களும் தகுதியுடையவர்கள்.

📝 பரீட்சை முறை

• தாள் I — அறிவுத்திறன் பரீட்சை | 1¼ மணி | 100 புள்ளி | சித்தி 40
• தாள் II — விடயத்துறை அறிவு | 2 மணி | 100 புள்ளி | சித்தி 40

➡️ இரு பரீட்சைகளிலும் தனித்தனியாக 40% பெற வேண்டும் → கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை

➡️ சிரேஷ்டத்துவம்: ஒரு வருடத்திற்கு 2 புள்ளி, 180 நாட்களுக்கு 1 புள்ளி (அதிகூடியது 30)

🗓️ பரீட்சை: 2027 ஜனவரி — கொழும்பில் மட்டும் | மொழி: தமிழ் / சிங்களம் / ஆங்கிலம்

💰 சம்பளம்: SL-01-2025 — ரூ. 82,150 – 2,400×10 – 2,940×8 – 3,900×17 – ரூ. 195,970
(நிரந்தர, ஓய்வூதிய உரித்துப் பதவி | 1 வருட பரிவீட்சைக் காலம் | 3 வருடங்களுக்குள் முதலாம் திறமைக்காண் தடைப் பரீட்சை)

🗓️ விண்ணப்பக் காலம்
• ஆரம்பம்: 21.09.2026 மு.ப. 9.00
• இறுதித் திகதி: 16.10.2026 பி.ப. 9.00

💻 நிகழ்நிலையில் (Online) மட்டும் | விண்ணப்பம் ஆங்கிலத்தில் மட்டும் பூர்த்தி செய்யவும்

💳 கட்டணம்: ரூ. 1,200 (Credit Card / Internet Debit Card / BOC Online-Flex / BOC கிளை)

🔗 applications.doenets.lk/exams
📄 வர்த்தமானி: 2026.09.18 — பகுதி I, பிரிவு II (අ)

⚠️ விண்ணப்பிக்கும் முன் வர்த்தமானியை முழுமையாகப் படிக்கவும். இறுதி நாள் வரை காத்திருக்க வேண்டாம். தகைமைகள் அனைத்தும் 16.10.2026 அன்று பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

👥 தகுதியான நண்பர்களுக்கு Share பண்ணுங்கள்!
📲 மேலும் அரச வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு Mindgrid பக்கத்தை Follow பண்ணுங்கள்.

#அரசவேலை #கமத்தொழிற்சேவை

21/09/2026
Sri Lanka Agricultural Service Limited Exam - 2026Limited Competitive Exam for Recruitment to Grade III of Sri Lanka Agr...
20/09/2026

Sri Lanka Agricultural Service Limited Exam - 2026

Limited Competitive Exam for Recruitment to Grade III of Sri Lanka Agricultural Service - 2024 (2026)

ශ්‍රී ලංකා කෘෂිකාර්මික සේවයේ III ශ්‍රේණියට බඳවා ගැනීමේ සීමිත තරග විභාගය

இலங்கை விவசாய சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை

Total Vacancies: 125

Closing Date: 2026.10.16

Details: https://tamilguru.lk/sri-lanka-agricultural-service-limited-exam-2026/

📲 Follow TamilGuru for Daily Updates: https://whatsapp.com/channel/0029Vb6wipo4o7qIy8bEUm3k/

Calling for Applications - Limited Competitive Examination for Recruitment to Grade III of Sri Lanka Agricultural Service - 2024 (2026)

With reservations நம்மில் யார் விரும்புகின்றோமோ இல்லையோ, நமது நாட்டில் புதியதொரு அரசியல் சக்தி விஸ்வரூபம் எடுத்து உள்ளது...
11/09/2026

With reservations
நம்மில் யார் விரும்புகின்றோமோ இல்லையோ, நமது நாட்டில் புதியதொரு அரசியல் சக்தி விஸ்வரூபம் எடுத்து உள்ளது
தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக 'தேசிய மக்கள் சக்தி' வளர்ந்து வருகிறது. இந்த சக்தியை விடுத்து எதிர்காலத்தில் இலங்கையின் அரசியலை நாம் யாருமே பேச முடியாது.

1971 மற்றும் 1988, 89 களில் இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சிகள் மூலம் ஆட்சியை கவிழ்த்து, புதியதொரு புரட்சிகர ஆட்சியை ஏற்படுத்த முனைந்து படுதோல்வி கண்ட 'மக்கள் விடுதலை முன்னணியின்' புதிய வடிவமே இந்த புதிய சக்தி.

ஆனால், 2022 இல் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் ஏற்பட்ட அமைதியான மக்கள் புரட்சி என்பது, இவர்களுக்கு பாரியதொரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்தது எனலாம்.
வரலாற்றில் முதல் தடவையாக இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகள் மறக்கப்பட்டு மக்கள் ஒன்றாக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, இளைஞர்களும் யுவதிகளும் இந்தக் கிளர்ச்சியில் காட்டிய ஆர்வத்தினை சரியான முதலீடாகப் பயன்படுத்தியது இந்த புதிய சக்தி.

இனவாதத்தினால் மிகவும் பயங்கரமாக பாதிக்கப்பட்டிருந்த சிறுபான்மை சமூகங்களின் இளம் வயதினர், தூர நோக்கற்ற தங்களது தலைமைகளின் சுயநல நோக்கத்தாலும் இவர்களை நோக்கி மிகவும் கவரப்பட்டுள்ளனர்.

கடந்தகால ஊழல் நிறைந்த ஆட்சிகள், இலஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், வீண்விரயம் காலதாமதம், விலைவாசி கூடியமை, வாழ்க்கைச் செலவு அதிகரித்தமை, வறுமை, வேலையின்மை, அதிகரித்த வருமான இடைவெளி, தொடர் ஏமாற்றம், விரக்தி, சமூக வலைத்தளங்களின் பாவனை என பல பின்னணிக் காரணிகள் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன.

அவர்களை வளர்த்து விட்ட பெருமையில் பெரும் பங்கு, 2005 தொடக்கம் 2022 வரை ஆட்சியில் இருந்தவர்களுக்கு உண்டு எனலாம். காரணம் ஊழல் உச்சம் தொட்ட காலமாக இந்தக் காலப்பகுதிதான் இருந்தது என்பதுதான் உண்மை.

ஆனால், இத்தனை போராட்டங்கள், இழப்புகள், வலிகள் என அத்தனையையும் அனுபவித்த பின்னர் அதிகாரம் கைகளுக்கு கிடைத்ததால், அதனை இலகுவில் அவர்கள் கைவிட மாட்டார்கள் என மக்களில் ஒரு சிலர் மிக ஆழமாக நம்புகின்றனர். Copied from Dr Allas Senior Academic

Address

Vavuniya Town
43000

Alerts

Be the first to know and let us send you an email when Subramaniam Sivakumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Subramaniam Sivakumar:

Shortcuts

Share