Church of Ceylon Tamil Mixed School Vavuniya

Church of Ceylon Tamil Mixed School Vavuniya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Church of Ceylon Tamil Mixed School Vavuniya, School, Kudiruppu, Vavuniya Town.

இது வவுனியாவில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை ஆகும். திரு.அருட்பிரகாசம் மத்தாயஸ் என்பவரால் குடியிருப்பு பகுதியில் ஒரு சிறு கொட்டில் அமைத்து ஓர் திண்ணைப் பாடசாலையாக 1878ல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எமது பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாராட்டு விழா 18.09.2026 அன்று காலை பிரார்த்தனையில் ...
20/09/2026

எமது பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாராட்டு விழா 18.09.2026 அன்று காலை பிரார்த்தனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.மதியழகன் ( பிரதிக் கல்விப்பணிப்பாளர் - கல்வி) அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி.விஜயகாந்தன் (ஆசிரிய ஆலோசகர் - ஆரம்ப பிரிவு )அவர்களும் கலந்து சிறப்பித்தனர். எமது பாடசாலையில் செல்வி.லக்சனா, செல்வன். கவின் ஆகிய இரு மாணவர்களும் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளனர். ​
சாதனை படைத்த மாணவச் செல்வங்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளையும், அவர்களைச் சிறப்பாக வழிநடத்திய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எமது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
/cctms

இன்றைய (31.07.2026) காலை பிரார்த்தனையில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
31/07/2026

இன்றைய (31.07.2026) காலை பிரார்த்தனையில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் ...
28/07/2026

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 2026 ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை "நேர்மை வாரம்" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய காலைப் பிரார்த்தனையில் அதிபரின் தலைமையில் ஆசிரியர்கள் அனைவரும் நேர்மை சத்தியப் பிரமாணம் செய்தனர். தொடர்ந்து மாணவர்கள் சிரமதானத்தில் ஈடுபட்டனர்

#நேர்மை-கலாசாரம்

2ஆம் தவணைப் பரீட்சையில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகள் (Progress Reports) வழங்கும் நிகழ...
26/07/2026

2ஆம் தவணைப் பரீட்சையில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகள் (Progress Reports) வழங்கும் நிகழ்வு ​கடந்த 24.07.2026 வெள்ளிக்கிழமை அன்று பாடசாலையின் காலைப் பிரார்த்தனைக் கூட்டத்தின் போது நடைபெற்றது.

வட மாகாணக் கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட பாடசாலை விளையாட்டுப் போட்டி - 2026 இல் எமது பாடசாலையைச் சேர்ந்த மாணவன் பி...
22/07/2026

வட மாகாணக் கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட பாடசாலை விளையாட்டுப் போட்டி - 2026 இல் எமது பாடசாலையைச் சேர்ந்த மாணவன் பி. ரதுக்சன் Boxing (குத்துச்சண்டை)
​வயது பிரிவு / எடைப் பிரிவு: Under - 20 [60 - 64 kg) வயதிற்குட்பட்டோர் [60 - 64 கிகிராம்) முதலாம் இடத்தினைப் பெற்றார். இவரை பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

எமது பாடசாலையில் நீண்ட காலம் ஆசிரியர்களாகப் பணியாற்றி, ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்ற திருமதி. தயனந்தராசா மற...
12/07/2026

எமது பாடசாலையில் நீண்ட காலம் ஆசிரியர்களாகப் பணியாற்றி, ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்ற திருமதி. தயனந்தராசா மற்றும் திரு. சுந்தரசர்மா ஆகிய ஆசிரியர்களுக்கான சேவை நலன் பாராட்டும் கௌரவிப்பு நிகழ்வும், கடந்த 08.07.2026 அன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
​பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கும், மாணவர்களின் நல்வாழ்வுக்கும் தங்களை அர்ப்பணித்துச் சேவையாற்றிய இவ்விரு ஆசிரியர்களின் பணிகளைப் போற்றும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
​இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் தமது கௌரவிப்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
​தங்களின் நீண்ட கால சேவையினை நிறைவு செய்து ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு, பாடசாலை சமூகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

க.பொ.த (சாதாரண தர) பரீட்சை 2025 (2026) இல் தோற்றிச் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் பாராட்டு விழா ஜூலை மாதம் 8ஆம் த...
11/07/2026

க.பொ.த (சாதாரண தர) பரீட்சை 2025 (2026) இல் தோற்றிச் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் பாராட்டு விழா ஜூலை மாதம் 8ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 12.00 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திரு. மா. அரிபூரணநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு. த. மதியழகன் (கோட்டக் கல்விப் பணிப்பாளர், வவுனியா நகரம்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
Church of Ceylon Tamil Mixed School Vavuniya

2025 ம் ஆண்டு க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றி, சிறந்த முறையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் வெற்றி...
22/06/2026

2025 ம் ஆண்டு க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றி, சிறந்த முறையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் வெற்றிக்குப் பின்னால் நின்ற அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்!
​- பாடசாலைச் சமூகம்
​ CCTMS V/cctms Old Student’s Association

நாடெங்கும் அதிகரித்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்...
18/06/2026

நாடெங்கும் அதிகரித்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, இன்றைய தினம் (18.06.2026) எமது பாடசாலையில் விசேட டெங்கு ஒழிப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.
"சுற்றுச் சூழலை சுத்தமாகப் பேணுவோம் - டெங்கு அற்ற வலயத்தை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளின் கீழ், பாடசாலைக் கட்டடங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நுளம்புகள் பெருகும் இடங்களை சிரமதானம் மூலம் மாணவர்கள் துப்பரவு செய்தனர்.
#டெங்கு #டெங்குஒழிப்புவாரம்

வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "மாகாண மட்ட ரோபோ மற்றும் கண்டுபிடிப்புப் போட்டி - 2025" (Provincia...
16/06/2026

வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "மாகாண மட்ட ரோபோ மற்றும் கண்டுபிடிப்புப் போட்டி - 2025" (Provincial Robot and Invention Competition - 2025) அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் எமது பாடசாலையைச் சேர்ந்த வி. திஷிகேஷன் என்ற மாணவன் பங்கேற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் ரோபோ தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான பிரிவில், "பொழுதுபோக்கு" (Entertainment) என்ற கருப்பொருளின் கீழ் (Theme) தனது திறமைகளை வெளிப்படுத்தி இப்போட்டியில் பங்கெடுத்துள்ளார்.
புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தடம் பதித்து, வலய மட்டத்தில் வெற்றி பெற்று மாகாண மட்டம் வரை சென்று திறமைகளை வௌிப்படுத்திய மாணவன் வி. திஷிகேஷனுக்கு பாடசாலைச் சமூகம் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

Address

Kudiruppu
Vavuniya Town
40000

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 01:30

Telephone

+94242223057

Alerts

Be the first to know and let us send you an email when Church of Ceylon Tamil Mixed School Vavuniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Church of Ceylon Tamil Mixed School Vavuniya:

Shortcuts

Share

Category