10/12/2025
● பிள்ளை நாளொன்றில் விழித்திருக்கும் எல்லா நேரங்களிலும் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, குறைந்தது நாளொன்றுக்கு 3 மணித்தியாலங்களேனும் சுறுசுறுப்புடன் செயற்படல் வேண்டும்.
● சுறுசுறுப்புடன் செயற்படும் குறிப்பிட்ட மூன்று மணித்தியாலங்களுள், குறைந்த பட்சம் ஒரு மணித்தியாலமேனும் இளைப்பு வாங்கும் விதத்திலான செயற்பாடுகளை செய்விக்கவும். (ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், முயல் போல் துள்ளுதல்) மீதமுள்ள இரு மணித்தியாலங்களில் கண்ணாமூச்சி விளையாட்டு, குழு விளையாட்டுக்கள் முதலிய மத்திம விளையாட்டுகளில் ஈடுபடுத்தவும்.
● சுறுசுறுப்புடன் இருத்தல் போலவே விளையாடுவதற்கு இடமளிப்பதன் மூலம், தசைகள் மற்றும் என்புகள் வளர்ச்சியடைந்து அதன் மூலம் உடல் வலிமை பெறும். அவ்வாறே, மூளையின் வளர்ச்சியும் அபிவிருத்தியும் நிகழும். உடல் வலிமை மற்றும் மூளையின் தொழிற்பாடும் அதிகரித்து நன்கு கல்வி கற்றல் மற்றும் தீர்மானங்களை எடுத்தல் போன்ற வாழ்க்கைத் திறன்கள் மேம்படும்.
● பாலர் பள்ளிக்குள் கற்றல் பிரதேசங்களுக்கிடையில் குழந்தைகள் நடமாடும் போது அவர்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
● குழந்தைகளை உட்கார்ந்த நிலையிலே இருக்க விடாமல் குறைந்தது ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறையாவது சுறுசுறுப்பாக வைத்திருப்பது அவசியமாகும். குழந்தைகள் ஒரே இடத்தில் ஒரே மாதிரியாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருப்பது அவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
● இயலுமான ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தம்மால் இயன்றளவு தூரத்தை நடந்து செல்ல ஊக்குவித்தலானது அவர்களின் உடலுக்கும், பொருளாதாரத்திற்கும் நன்மை பயக்கும்.
● அவ்வாறே, விசேட தேவையுள்ள குழந்தைகளுக்கும் அவர்களால் இயன்றளவு செயற்பாடுகளில் பங்கேற்க ஊக்குவிப்பதும் அவர்கள் தங்கள் நாளை சுறுசுறுப்பாகக் கழிக்க இடமளிப்பதும் மிகவும் முக்கியமாகும்.