Noorian's10 - Class of 2K10 O/L & 2013 A/L Batch

Noorian's10 - Class of 2K10 O/L & 2013 A/L Batch The club of Class of 2010 O/L Batch & 2013 A/L Batch of BT/BC/Valaichenai An-Noor National School.

🏆 எமது வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலை மாணவர் முஸ்ஹப் அஹமட் ஆல் உருவாக்கிய “சக்கரக் கனவு” குறும்படம் தேசிய ரீதியில் மூ...
28/08/2025

🏆 எமது வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலை மாணவர் முஸ்ஹப் அஹமட் ஆல் உருவாக்கிய “சக்கரக் கனவு” குறும்படம் தேசிய ரீதியில் மூன்றாம் இடம்!
பேராதனைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் ஒன்றியம் “ எமது தேசத்தை விழிப்படையச் செய்வோம்” என்ற தொனிப்பொருளில் தேசியரீதியில் நடாத்திய குறும்பட போட்டியில் எமது பாடசாலையின் சார்பில் மாணவன் முஸ்ஹப் அஹமட் ஆல் சமர்ப்பிக்கபட்ட “சக்கரக் கனவு” எனும் தலைப்பை உடைய குறும்படம் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இத் தயாரிப்பு ஆசிரியர் ஜெ. சேஷயன்
அவர்களின் நெறியாள்கையில் பிரதி அதிபர் M. A. அபூதாஹிர் மற்றும் ஆசிரியர் N. M. இல்யாஸ் அவர்களின் நடிப்பில் மற்றும் ஆசிரியர் திரு. R. ஆலோஜிதன் அவர்களின் ஆலோசனையிலும் சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பங்குபற்றிய மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

🏆 எமது மாணவர் முஸ்ஹப் அஹமட் ஆல் உருவாக்கிய “சக்கரக் கனவு” குறும்படம் தேசிய ரீதியில் மூன்றாம் இடம்!

பேராதனைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் ஒன்றியம் “ எமது தேசத்தை விழிப்படையச் செய்வோம்” என்ற தொனிப்பொருளில் தேசியரீதியில் நடாத்திய குறும்பட போட்டியில் எமது பாடசாலையின் சார்பில் மாணவன் முஸ்ஹப் அஹமட் ஆல் சமர்ப்பிக்கபட்ட “சக்கரக் கனவு” எனும் தலைப்பை உடைய குறும்படம் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இத் தயாரிப்பு ஆசிரியர் ஜெ. சேஷயன்
அவர்களின் நெறியாள்கையில் பிரதி அதிபர் M. A. அபூதாஹிர் மற்றும் ஆசிரியர் N. M. இல்யாஸ் அவர்களின் நடிப்பில் மற்றும் ஆசிரியர் திரு. R. ஆலோஜிதன் அவர்களின் ஆலோசனையிலும் சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பங்குபற்றிய மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Annoor Ns

அஸ்ஸலாமு அலைக்கும். எமது அந்நூர் தேசிய பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் இருவர் மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை கணக்காய்வு சேவை ...
23/12/2024

அஸ்ஸலாமு அலைக்கும்.

எமது அந்நூர் தேசிய பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் இருவர் மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை கணக்காய்வு சேவை (SLAUS) Srilanka Auditing Service போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

எமது Noorian's10 - Class of 2K10 O/L & 2013 A/L Batch அமைப்பின் உறுப்பினரும் விவசாயத் திணைக்களத்தில் பணிபுரியும் MIM. தில்வான் அவர்களுக்கு எங்களது குழுமம் சார்பாக வாழ்த்துக்களையும் துவாக்களையும் சேர்த்துக்கொள்கிண்றோம்.

💐 MIM. Thilwan
📚 (2010 O/L & 2013 A/L வணிகப் பிரிவு)

💐 YM. Riskan
📚 (2015 A/L வணிகப் பிரிவு)

அவர்களின் எதிர்காலம் மேலும் வெற்றிகள் நிறைந்ததாக அமைய பழைய மாணவர்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துகொள்கின்றோம்.

மாவட்ட மட்ட அறிவுக் களஞ்சியம் நிகழ்ச்சியில் முதலிடம்இன்று 13.07.2024 சனிக்கிழமை இடம்பெற்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாப...
14/07/2024

மாவட்ட மட்ட அறிவுக் களஞ்சியம் நிகழ்ச்சியில் முதலிடம்

இன்று 13.07.2024 சனிக்கிழமை இடம்பெற்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மாவட்ட மட்ட அறிவுக் களஞ்சியம் நிகழ்ச்சியில் பங்குபற்றிய எமது பாடசாலை அணி இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று, மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பாடசாலை சமூகம் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.

வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கிய அதிபர், மாணவர்களை வழிப்படுத்திய கலாசாரக்குழு ஆசிரியர்கள், விசேடமாக மாணவர்களுக்கு பக்கபலமாக இருந்து மாணவர்களை தயார்படுத்திய தரம் 06 பகுதித் தலைவர் ஆசிரியை ஹெஸ்மிலா நௌபர் அவர்களுக்கும் பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

மாவட்ட மட்ட அறிவுக் களஞ்சியம் நிகழ்ச்சியில் வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை முதலிடம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில் 13.07.2024ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற மாவட்ட மட்ட அறிவுக் களஞ்சியம் நிகழ்ச்சியில் பங்குபற்றிய எமது பாடசாலை அணி இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று, மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கிய அதிபர், மாணவர்களை வழிப்படுத்திய கலாசாரக்குழு ஆசிரியர்கள், விசேடமாக மாணவர்களுக்கு பக்கபலமாக இருந்து மாணவர்களை தயார்படுத்திய தரம் 06 பகுதித் தலைவர் ஆசிரியை ஹெஸ்மிலா நௌபர் அவர்களுக்கும் பழைய மாணவர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

A tremendous effort from our colleague  Azarudeen Mohamed
19/05/2024

A tremendous effort from our colleague Azarudeen Mohamed

🏆Inter-house Sports Meet - 2024
09/03/2024

🏆Inter-house Sports Meet - 2024


வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலையின் 2023 ஆண்டு பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிஎமது கல்குடா பி...
29/12/2023

வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலையின் 2023 ஆண்டு பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி
எமது கல்குடா பிரதேச மாணவர்களின் நலன் கருதி O/L & A/L பெறுபேறுகளில் சித்தி அடைந்த, அடையாத உயர் கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்காக நாளை 30ம் திகதி (சனிக்கிழமை) காலை 08:30 தொடக்கம் 12:00 மணி வரை எமது அந் நூர் தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சிறந்த வளவாளர்களைக்கொண்டு 'உயர் கல்வி மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி தொடர்பான வழிகாட்டல் செயலமர்வு' ஏற்பாடு செயப்படுள்ளது.
🎯 NVQ பயிற்சிநெறிகள் மற்றும் தொழில்சார் தகைமை தொடர்பான அறிமுகம்.
🎯 Goal setting & தொழில் வழிகாட்டுதல்.
🎯A /L இல் மாணவர்கள் பாடத்தை தெரிவு செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்.
🎯அத்தோடு, மாணவர்களின் ஐயங்களுக்கான துறைசார்ந்த நிபுணர்களால் தெளிவுகளும் வழங்கப்படும்.
கலந்துகொண்டு பயனடையுமாறு மாணவர்களை கேட்டுக்கொள்கின்றோம்.

Congratulation Champions 🎉🏆🥇🎉Alighar Central College-EravurYou re-create the History
11/12/2023

Congratulation Champions 🎉🏆🥇🎉

Alighar Central College-Eravur

You re-create the History

வாழ்த்துக்கள் 🎉

All Island School Football Championship (Div - I) - 2023 தொடரின் இறுதி போட்டியில் கொழும்பு ஸாஹிரா கல்லூரியினை வெற்றி கொண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்ட ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரிக்கு, வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது...

Get together Team Noorians 10 கடந்த 30/08/2023 விடுமுறையை முன்னிட்டு எமது ATM சப்ரான் அவர்களின் தலைமையில் நாவலடி யில் உள...
11/09/2023

Get together Team Noorians 10

கடந்த 30/08/2023 விடுமுறையை முன்னிட்டு எமது ATM சப்ரான் அவர்களின் தலைமையில் நாவலடி யில் உள்ள அவரது தோட்டத்தில் மாலை 6pm தொடக்கம் 12 AM வரை ஒன்றுகூடல் உடன் இராவிருந்தும் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் எமது குழுவினர் குடும்ப சகிதம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Match Update: அஸ்ஸலாமு அலைக்கும்! Ameeninan Cricket Blast 2023போட்டி -NOORIANS’10 VS 2016 AMEENIANSதிகதி      -  02/09/2...
06/09/2023

Match Update:

அஸ்ஸலாமு அலைக்கும்!

Ameeninan Cricket Blast 2023

போட்டி -NOORIANS’10 VS 2016 AMEENIANS

திகதி - 02/09/2023
இடம் - காவத்தமுனை பொது மைதாணம், காவத்தமுனை

போட்டித்தொடறில் இரண்டாவது போட்டியாக எமது NOORIANS’10 மற்றும் 2016 AMEENIANS அணிகளுக்கிடையில் இடம்பெற்றது.

நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடிய NOORIANS’10 அணியினர் 4.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 27 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர், அணிக்காக ரிபான் 4 பந்துகளில் 14 ஓட்டங்களை அதிரடியாக பெற்றார்.

இருந்தும் பதிலிற்கு துடுப்பாடிய 2016 Ameeninan அணியினர் 2.4 ஓவரில் 2 விக்கட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை இலகுவாக அடைந்தனர்.

மேலும் குழு நிலையில் 2ம் இடத்துடன் விளகல் முறையிலான Round of 16 போட்டிக்கு எமது அணியினர் தெறிவு செய்யப்பட்டனர்.

Media_Noorians’10
04/09/2023

Address

BT/BC/Valaichenai An-Noor National School
Valaichenai
30400

Alerts

Be the first to know and let us send you an email when Noorian's10 - Class of 2K10 O/L & 2013 A/L Batch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Noorian's10 - Class of 2K10 O/L & 2013 A/L Batch:

Shortcuts

Share

Category