01/12/2025
வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலர் உணவுப் பொருட்கள் சேகரிப்பு!
நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண மற்றும் சீரற்ற காலநிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்களைச் சேகரிக்கும் மாபெரும் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த மனிதாபிமான நடவடிக்கையானது வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் சம்மேளனம், வாழைச்சேனை வர்த்தக சங்கம், மற்றும் வாழைச்சேனை மீனவ அமைப்புக்கள் ஆகியன ஒன்றிணைந்து கூட்டு முயற்சியாக மேற்கொள்ள இருக்கின்றன.
உலர் உணவுப் பொருட்கள் சேகரிப்பு நடவடிக்கையின் பிரதான மையமாக வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் செயற்படவுள்ளது. அத்துடன், இப்பள்ளிவாயல் நிர்வாகத்தின் கீழுள்ள ஏனைய 08 பள்ளிவாயல்களும் இந்தப் புனிதமான சேவையில் தீவிரமாகப் பங்காற்ற இருக்கின்றன.
மூன்று நாட்கள் சேகரிக்கப்படும் இந்தப் பொருட்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் பின்னர் பாதிக்கப்பட்ட அவசியமுள்ள இடங்களுக்குக் கொண்டு சென்று விநியோகிக்கப்படவுள்ளன.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், தங்களால் இயன்ற அத்தியாவசியப் பொருட்களை (அரிசி, பருப்பு, மா, சர்க்கரை, தேயிலை, டின் உணவுப் பொருட்கள் போன்ற உலர் உணவுப் பொருட்கள்) வழங்கி உதவ முன்வருமாறு அனைத்து தயாள மனம் படைத்தவர்களிடமும் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தயவுசெய்து உங்கள் உதவிகளை பிரதான மையமான வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் அல்லது அதன் நிர்வாகத்தின் கீழுள்ள 08 பள்ளிவாயல்களிலும் விரைந்து ஒப்படையுங்கள்.
தொடர்புகளுக்கு:
ஐயூப் ஹாஜியார் - 0772291356
மீரா முஹைதீன் சேர் - 0777033217
ரஹீஸ் நளீமி - 0779845208
தில்வான் - 0756748776