01/09/2026
📚 குச்சவெளி தி/அந் நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயம் – மாணவர்களின் பிரச்சினைக்கான உடனடி தீர்வினை பெற்றுக்கொள்ளல்
குச்சவெளி தி/அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் 2025.12.31 அன்று இடமாற்றம் பெற்றுச் சென்றார். 1C தரத்தைச் சேர்ந்த இப்பாடசாலைக்கு, சுமார் 8 மாதங்கள் கடந்தும் இதுவரை புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.
இதன் காரணமாக பாடசாலையின் நிர்வாக நடவடிக்கைகள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளன.
🔹 வங்கிக் கணக்கு பெயர் மாற்றம் இடம்பெறாமை
🔹 பொருட்கள் பதிவேடு முறையாகக் கையளிக்கப்படாமை
🔹 பாடசாலை நிர்வாக நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற நிலை
🔹 பாடசாலை திருத்தப் பணிகளுக்கான ஒப்பந்தம் மற்றும் நிதிப் பரிமாற்றம் நிறைவு பெறாமை
🔹 பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை
🔹 மேலும், 14 ஆசிரியர் பற்றாக்குறை
இவை அனைத்திற்கும் மத்தியில், மிகப் பெரிதும் பாதிக்கப்படுவது எமது மாணவர்களின் கல்வியே! 🎓
இந்த நிலைமை தொடர்பாக பாடசாலை அபிவிருத்திக் குழு (SDC) மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து, இப்பகுதியில் இன, மத, மொழி பேதமின்றி சேவையாற்றி வரும் சாகரபுர விகாராதிபதி சாசனவம்ச ஹிமி அவர்களின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்றனர்.
இதனையடுத்து, 2026.08.31 அன்று சாசனவம்ச ஹிமி அவர்கள், கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு இப்பிரச்சினையை கொண்டு சென்றதுடன், தொடர்ந்து மாகாண கல்விப் பணிப்பாளரை சந்தித்து, அதிபர் நியமனம், 14 ஆசிரியர் பற்றாக்குறை, அதி கஷ்டப் பிரதேசக் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் எடுத்துரைத்தார்.
🤝 இதன்போது, முன்வைக்கப்பட்ட முக்கிய விடயங்களுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயமாக எம்மோடு இணைந்த செயற்பட்ட சாகரபுர விகாராதிபதி சாசனவம்ச ஹிமி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்