Chemistry

Chemistry Education for All

14/07/2026
08/05/2026

சேதனச் சேர்வை ஒன்றிற்கான IUPAC பெயரீடு எழுதும் போது அதில் ஒரு கூட்டம் மாத்திரம் காணப்படுமாயின் அது பிரதான தொழிற்பாட்டுக் கூட்டமாகும். More Details Click Here
http://www.padippu.lk/2026/05/iupac.html

08/05/2026

காபனை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இரசாயனமே சேதன இரசாயனவியல் ஆகும். More Detail Click Here
http://www.padippu.lk/2026/05/organic-chemistry.html

With padippu.lk – I just got recognized as one of their top fans! 🎉
27/02/2026

With padippu.lk – I just got recognized as one of their top fans! 🎉

http://www.padippu.lk/2025/11/blog-post.htmlஅமோனியா உற்பத்தி (ஏபர் - பொஷ் முறை)மூலப்பொருட்கள் - N2, H2திரவ வளியை பகுதிபட...
25/02/2026

http://www.padippu.lk/2025/11/blog-post.html
அமோனியா உற்பத்தி (ஏபர் - பொஷ் முறை)
மூலப்பொருட்கள் - N2, H2
திரவ வளியை பகுதிபடக் காய்ச்சி வடிப்பதன் மூலம் N2 பெறப்படும்.
இயற்கை வாயு (CH4), நப்தா (C6H14) போன்றவற்றை O2 உடன் அல்லது நீராவியுடன் பகுதியாக ஒட்சியேற்றி H2 பெறப்படும்.

O2 உடன் பகுதி ஒட்சியேற்றம்
நீராவி H2O(g) உடன் பகுதி ஒட்சியேற்றம்

1. மெதேன்
2. நப்தா

N2 இற்கும் H2 இற்கும் இடையிலான தாக்கம் பின்வருமாறு நடைபெறும்.

1. ஊக்கி - நுண்துளையாக்கப்பட்ட Fe
2. தூண்டி - K2O / Al2O3
3. அமுக்கம் - (250 - 300 atm)
4. வெப்பநிலை - (450 - 500 'C)

இங்கு உயர் அமுக்கமும், தாழ் வெப்பநிலையும் பேணப்படல் வேண்டும்.

வெப்பநிலையை மேலும் குறைக்கும் போது தாக்க ஏவற்சக்தியை மீற சக்தி போதாமையினால் சிறப்பு வெப்பநிலையாக 450 - 500 'C பேணப்படுறது.

இங்கு Fe இன் தாக்க மேற்பரப்பை அதிகரிப்பதன் மூலம் தாக்கவீதம் அதிகரிக்கப்படும்.

மேற்படி தாக்கம் புறவெப்பத்தாக்கம் ஆதலால் தொகுதியை குளிர்வித்தல் வேண்டும்.

இத்தொகுதியிலிருந்து விளைவாக பெறப்படும் NH3 ஐ அகற்றுவதன் மூலம் முற்தாக்கத்தை சாதகமாக்கலாம்.

உயரமுக்கம் காரணமாக உபகரண பராமரிப்பு செலவு அதிகமாகும்.

NH3 இன் பயன்கள்
1. HNO3 தயாரிப்பில் பயன்படும்.
2. யூரியா தயாரிப்பு
3. இறப்பர் பால் திரளள் அடைவதைத் தடுத்தல்.
4. பண்படுத்தா எண்ணெயிலுள்ள அமிலத்தை நடுநிலையாக்க பயன்படும்.
5. வளமாக்கி தயாரிப்பு

http://www.padippu.lk/2025/11/blog-post_33.htmlமூலப்பொருட்கள் - கந்தகம் (S), கந்தக தாதுக்கள் (PbS, CuS, ZnS), வளி, நீர்1...
05/11/2025

http://www.padippu.lk/2025/11/blog-post_33.html
மூலப்பொருட்கள் - கந்தகம் (S), கந்தக தாதுக்கள் (PbS, CuS, ZnS), வளி, நீர்
1. ஊக்கி - V₂O₅ (வனேடியம் ஐ ஒட்சைட்டு)
2. தூண்டி - K₂SO₄
3. அமுக்கம் - (1 atm)
4. வெப்பநிலை - (450 ℃)

மேற்படி நிபந்தனைகள் பிரயோகிக்கப்படுகையிலே 96% - 98% விளைவு தோன்றுகிறது.

உயர் வெப்பநிலையில் உலோக அரண்கள் அரிப்பிற்குள்ளாகும்.

உயர் அமுக்கத்தை ஏற்படுத்துவதற்கான செலவு அதிகமானதாகையால் 1 atm அமுக்கம் பொதுமானது.

தொகுதியை குளிர்த்தும் போது நீராவியை பயன்படுத்தி மின் பிறப்பிக்க பயன்படும்.

SO₃ ஐ நீரில் கரைக்காமல் செறிந்த H₂SO₄ அமிலத்தில் கரைப்பதற்குக் காரணம் நீரில் கரைத்தால் அடர்வு கூடிய மூடுபனி உருவாகும்.

SO₃ ஆனது செறிந்த H₂SO₄ இல் கரைக்கப்படுவதால் H₂S₂O₇(ஓலியம்) உருவாக்கப்படும்.

H₂SO₄ இன் பயன்கள்
1. பொசுபேற்று உரங்களின் பரும்படி தயாரிப்பு
Ca₃(PO₄)₂ இலிருந்து Super Phosphate ஐ தயாரித்து குறுகிய காலத்தாவரங்களுக்கு உரமாக பயன்படுத்த முடியும்.
2. அரசநீர் தயாரிப்பு
3. நீரகற்றும் கருவியாகப் பயன்படும்.
4. வாயுக்களை உலர்த்துதல்
5. பற்றரி அமிலத் தயாரிப்பு
6. சாய வகை பொருள்கள், வெடிபொருள்கள் மற்றும் ஒளடங்கள் உற்பத்தி
7. அமோனியம் சல்பேற்று ((NH₄)₂SO₄) பசளை உற்பத்தி
8. ரெயோன் உட்பட செயற்கை நார் மற்றும் பிளாத்திக்கு உற்பத்தி

Science, Chemistry, Physics, SFT

22/05/2025

A/L 2025 & 2026 batch மாணவர்களுக்கான Chemistry Paper (Exam & Discussion) class சனிக்கிழமைகளில் மாத்திரம் நடைபெறுகின்றது.
✔️ One hour ▶️ Exam
✔️One hour ▶️ Discussion
மாணவர்கள் வாராந்தம் தாங்கள் பெறும் புள்ளிகள் அடிப்படையில் தங்களை மதிப்பிட்டு கொள்ள முடியும் 🎯

Address

Trincomalee
31000

Alerts

Be the first to know and let us send you an email when Chemistry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category