Madeena Updates

Madeena Updates This is the official page of Madeena National School, Siyambalagaskotuwa

🌟 BEST WISHES FOR YOUR A/L EXAM! 🌟To all our dear students sitting for the G.C.E. Advanced Level Examination, we wish yo...
09/08/2026

🌟 BEST WISHES FOR YOUR A/L EXAM! 🌟

To all our dear students sitting for the G.C.E. Advanced Level Examination, we wish you success and excellence in every step of your journey. 📚✨

Stay focused, confident and determined. Believe in yourself, trust your hard work, and most importantly, put your faith in Allah. 🤲

May Allah make your examination easy, bless your efforts, and grant you success in this world and the Hereafter. Ameen. 🤍

📖 “And my success is only by Allah.”
— Qur’an 11:88

💫 ALL THE BEST! 💫

With heartfelt wishes from,
Principal, Teachers, Staff & Students
Madeena National School
Siyambalagaskotuwa

   !ZONAL LEVEL ENGLISH DAY COMPETITION 2026 We are immensely proud to announce that our students have brought great hon...
09/08/2026

!

ZONAL LEVEL ENGLISH DAY COMPETITION 2026

We are immensely proud to announce that our students have brought great honor to our school!

TOTAL 27 PLACES
1st Places: 8
2nd Places: 9
3rd Places: 10
17 Students Selected to PROVINCIAL LEVEL🏆

To all our brilliant students:
Your dedication, hard work and talent have made us all proud!
Keep shining and reaching greater heights!

A SPECIAL THANK YOU
To our respected Dedicated English Teachers, Principal, Deputy Principals & Staff.

Your guidance, training and unwavering support made this success possible.
May Allah reward you abundantly.

-Madeena Media-

 #தரம்5  #புலமைப்பரிசில்  #பரீட்சைஅன்பான மாணவர்களே,நாளை நீங்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்றீர்க...
08/08/2026

#தரம்5 #புலமைப்பரிசில் #பரீட்சை

அன்பான மாணவர்களே,

நாளை நீங்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்றீர்கள். இதற்காக நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தீர்கள், எத்தனை மணித்தியாலங்கள் கற்றீர்கள், உங்களுடன் இணைந்து உங்கள் ஆசிரியர்களும் பெற்றோர்களும் எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

தன்னம்பிக்கையுடன் இருங்கள். கேள்விகளை நிதானமாகவும் கவனமாகவும் வாசியுங்கள். உங்களால் முடிந்த சிறந்ததைச் செய்யுங்கள்; மீதியை அல்லாஹ்விடம் ஒப்படையுங்கள்.

அல்லாஹ் உங்களுக்கு வெற்றியை வழங்கி, அறிவில் சிறந்து விளங்க அருள் புரிந்து, நீங்கள் மேற்கொண்ட அனைத்து கடின உழைப்பிற்கும் சிறந்த பெறுபேறுகளை வழங்குவானாக!

நாங்கள் அனைவரும் உங்களுக்காகப் பிரார்த்திக்கின்றோம். நீங்கள் ஏற்கனவே எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்! ❤️

எமது இளம் நட்சத்திரங்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்! ⭐🏆

Dear Students,

Tomorrow you are going to sit for the Grade 5 Scholarship Examination. We know how hard you have worked, how many hours you have studied, and how much effort your teachers and parents have put in with you. Be confident. Read the questions carefully. Do your best and leave the rest to Allah. May Allah grant you success, bless you with knowledge, and reward all your hard work with excellent results.
We are all praying for you and we are so proud of you already.
All the very best, our young stars!

— Madeena Media —

அகில இலங்கை சமூக விஞ்ஞான போட்டி - மாகாணமட்டம்அண்மையில் நடைபெற்று முடிந்த அகில இலங்கை சbமூக விஞ்ஞான போட்டியின் மாகாணமட்ட ...
08/08/2026

அகில இலங்கை சமூக விஞ்ஞான போட்டி - மாகாணமட்டம்

அண்மையில் நடைபெற்று முடிந்த அகில இலங்கை சbமூக விஞ்ஞான போட்டியின் மாகாணமட்ட போட்டியில் எமது *மதீனா தேசிய பாடசாலையை* சேர்ந்த இரண்டு மாணவிகள் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு எமது பாடசாலை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, அவர்களை சிறப்பாக பயிற்றுவித்த ஆசிரியர்கள், அதிபர், இணைபாடவிதான பிரதி அதிபர், ஏனைய பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகிய அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பு: கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை மட்ட போட்டியில் எமது பாடசாலை மாணவி ஒருவர் இரண்டாம் இடத்தை பெற்றார். கிரியுள்ள வலய தமிழ் மொழி பாடசாலைகள் அகில இலங்கை போட்டியில் முதல் மூன்று இடங்களுக்குள் பெற்ற ஒரே பாடசாலை எமது பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறையும் இந்த இரு மாணவிகளும் அகில இலங்கை மட்டத்தில் வெற்றி பெற்று பாடசாலைக்கு மேலும் பெருமை சேர்க வேண்டும் என வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

*Madeena Media*

Wayamba Visulamini-2026Divisional level பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெற்ற அரச கலைப் போட்டிகளில் எமது பாடசாலை அதிகூடிய 18...
08/08/2026

Wayamba Visulamini-2026
Divisional level

பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெற்ற அரச கலைப் போட்டிகளில் எமது பாடசாலை அதிகூடிய 18 இடங்களை பெற்றுள்ளதோடு அம்மாணவர்கள் வலைய மட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டுவதோடு இவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் அத்தோடு வழிகாட்டிய இணைப்பாடு விதான பிரதி அதிபர் அவர்களுக்கும் ஆலோசனை வழங்கிய பாடசாலையின் அதிபர் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் இம்மாணவர்கள் வலைய மட்ட போட்டிகளிலும் வெற்றி பெற பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.
Madeena -Media

🏆 *District Champions* ⚽இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட குருநாகல் மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதுக...
06/08/2026

🏆 *District Champions* ⚽

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட குருநாகல் மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உதைப்பந்தாட்டப் போட்டியில், எமது மதீனா தேசிய பாடசாலை அணி மாவட்ட சம்பியன் (District Champion) பட்டத்தை வென்று, தேசிய மட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

குழு நிலைப் போட்டிகளில் வெற்றி பெற்று

காலிறுதிப் போட்டியில் அணிக்கு எதிராக 1:0 என்ற Goal வித்தியாசத்திலும்,

அறை இறுதி சுற்றில்
அணிக்கு எதிராக 3:0 என்ற வித்தியாசத்திலும் ,

இறுதி போட்டியில்
அணிக்கு எதிராக 4:0 என்ற Goal வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுக்கொண்டது.

இவ்வெற்றியைப் பெற்றுத் தந்த மாணவர்களுக்கும், அணியை அர்ப்பணிப்புடன் பயிற்றுவித்த ஆசிரியர்களான,

Mr. E.R. Janosan
Mr. M.H. Hassan
Mr. A.A. Ashwin

ஆகியோருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும், இவ்வெற்றிக்காக ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய பாடசாலையின் அதிபர், இணைப்பாடவிதானத்திற்கு பொருப்பான பிரதி அதிபர் மற்றும் ஏனைய பிரதி அதிபர்கள், பல்வேறு வகைகளில் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு, பழைய மாணவர் சங்கம் மற்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பில் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

🎉 தேசிய மட்டப் போட்டியிலும் எமது அணி சிறந்த வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்!

– Madeena Media

Garde-10 Parents Meeting2026.08.05 புதன் கிழமை  தரம் 10 மாணவர்களின் பெற்றோர்களுக்கான ஒன்று கூடல் எமது பாடசாலையின் கேட்போ...
06/08/2026

Garde-10 Parents Meeting

2026.08.05 புதன் கிழமை தரம் 10 மாணவர்களின் பெற்றோர்களுக்கான ஒன்று கூடல் எமது பாடசாலையின் கேட்போர் கூடத்தில் கௌரவ அதிபர் ஜனாப். எஸ்.எம். ஹைதர் அலி தலைமையில் நடைபெற்றது. அதன் போது நடைபெற்று முடிந்த இரண்டாம் தவணைப்பரீட்சை
பெறுபேறுகள் அடங்கிய தேர்ச்சி அட்டைகளும் பரிட்சையில் புள்ளிகளின்படி திறமைகள் காட்டிய மாணவர்களுக்கு பாராட்டி பரிசில்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இம்முறை நடைபெற்ற இரண்டாம் தவணை பரீட்சையிலே ஒவ்வொரு வகுப்பிலும் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களுக்கு அவ் வகுப்பு ஆசிரியர்கள் மூலம் தேர்ச்சி அட்டைகளும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் தரம் 10-ல் எல்லா மாணவர்களிலும் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன. அத்துடன் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும் தவணைப் பரீட்சையிலே 9 படங்களிலும் A (9A) சித்திகளை பெற்ற மாணவர்களுக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.

Madeena -Media

Garde-11 Parents Meeting2026.08.05 புதன் கிழமை  தரம் 11 மாணவர்களின் பெற்றோர்களுக்கான ஒன்று கூடல் எமது பாடசாலையின் கேட்போ...
06/08/2026

Garde-11 Parents Meeting

2026.08.05 புதன் கிழமை தரம் 11 மாணவர்களின் பெற்றோர்களுக்கான ஒன்று கூடல் எமது பாடசாலையின் கேட்போர் கூடத்தில் கௌரவ அதிபர் ஜனாப். எஸ்.எம். ஹைதர் அலி தலைமையில் நடைபெற்றது. அதன் போது நடைபெற்று முடிந்த இரண்டாம் தவணைப்பரீட்சை
பெறுபேறுகள் அடங்கிய தேர்ச்சி அட்டைகளும் பரிட்சையில் புள்ளிகளின்படி திறமைகள் காட்டிய மாணவர்களுக்கு பாராட்டி பரிசில்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இம்முறை நடைபெற்ற இரண்டாம் தவணை பரீட்சையிலே ஒவ்வொரு வகுப்பிலும் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களுக்கு அவ் வகுப்பு ஆசிரியர்கள் மூலம் தேர்ச்சி அட்டைகளும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் தரம் 11-ல் எல்லா மாணவர்களிலும் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன. அத்துடன் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும் தவணைப் பரீட்சையிலே கணிதப் பாடத்தில் 75 புள்ளிகளுக்கு மேல் பெற்ற சகல மாணவர்களுக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.

Madeena -Media

Congratulations 🎉 for our students who selected Government Universities in Science stream.
02/08/2026

Congratulations 🎉 for our students who selected Government Universities in Science stream.

Congratulations  for our students who selected Government Universities -Year -2025/26
02/08/2026

Congratulations for our students who selected Government Universities -Year -2025/26

Address

Siyambalagaskotuwa
Siyambalagaskotuwa
60113

Alerts

Be the first to know and let us send you an email when Madeena Updates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category