Iconic Media

Iconic Media Achieving || excellence || Together

26/08/2026

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் குடிநீர் போத்தல்கள் தொடர்பில் எச்சரிக்கை!

இந்த சம்பவம் 2026.08.25 அன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக இரவு நேர ரயில்களில் பயணிக்கும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மூடி சேதமடைந்த அல்லது திறக்கப்பட்ட நிலையில் காணப்படும் குடிநீர் போத்தல்களை வாங்க வேண்டாம்.

போத்தலின் மூடி மற்றும் பாதுகாப்பு சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே குடிநீரை கொள்வனவு செய்யுங்கள்.

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள இந்த தகவலின் உண்மைத் தன்மை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும்வரை, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுவது அவசியம்.

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு சுமார் 400 சுற்றுலாப் பயணிகள் மாயம் 🇳🇵நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் உள...
26/08/2026

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு சுமார் 400 சுற்றுலாப் பயணிகள் மாயம் 🇳🇵

நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் உள்ள போதே கோஷி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி, 291 வெளிநாட்டினர் மற்றும் 93 நேபாள குடிமக்கள் உட்பட குறைந்தது 384 சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.Nearly 400 tourists reported missing after Nepal flash floods 🇳🇵

At least 384 tourists, including 291 foreign nationals and 93 Nepali citizens, have been reported missing after flash floods in the Bhote Koshi River hit Nepal’s Rasuwa region, according to the Nepal Tourism Board.

Search and rescue operations are underway.

26/08/2026
26/08/2026

"NO PARKING,, இலங்கையில் நிகழ்ந்த சம்பவம்!!

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் ஒன்று இன்று (25)  விபத்திற்குள்ளாகியுள்ளது.இரத்மலானை விமான நிலையத்தை மையமாக ...
25/08/2026

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் ஒன்று இன்று (25) விபத்திற்குள்ளாகியுள்ளது.

இரத்மலானை விமான நிலையத்தை மையமாக கொண்டு இயங்கும் விமானப் பயிற்சி பாடசாலைக்கு சொந்தமான, 4R-DRA என்ற பதிவு இலக்கத்தை கொண்ட Cessna 152 ரக பயிற்சி விமானம் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று இரத்மலானை விமான நிலையத்திற்கு தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகி்ன்றன.

டுபாயில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லலித் கண்ணங்கர என்ற பஸ் லலித்  கைது செய்யப்பட்டதனை வரவேற்று ஹன்வெல்ல, வத்தரேகா, ...
25/08/2026

டுபாயில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லலித் கண்ணங்கர என்ற பஸ் லலித் கைது செய்யப்பட்டதனை வரவேற்று ஹன்வெல்ல, வத்தரேகா, மீகோடா மற்றும் கலகெதர உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அப்பகுதிகளில் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. யாசகர்கள் உட்பட அனைத்து மக்களிடமும் பஸ் லலித் லட்சக்கணக்கான ரூபாய்களை பறித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் குறித்த நபரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

2027–2032-ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் பதவிக்கு, டாக்டர் ஹனான் ஹசன் பல்கியை சவூ...
25/08/2026

2027–2032-ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் பதவிக்கு, டாக்டர் ஹனான் ஹசன் பல்கியை சவூதி அரேபியா பரிந்துரைத்துள்ளது.

ஜெனிவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் பதவிக்கு இவர் தெரிவு செய்யப்பட்டால் உலகளாவிய அமைப்பு ஒன்றுக்கு சவுதி பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் இது அமையும்

செம்மணி மனிதப் புதைக்குழியில் மூன்று கட்டங்களாக இதுவரை சுமார் 110 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இதற்கா...
25/08/2026

செம்மணி மனிதப் புதைக்குழியில் மூன்று கட்டங்களாக இதுவரை சுமார் 110 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இதற்காக 5 கோடியே 79 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்தார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் 584 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் இரத்த மாதிரிகளைச் சேகரித்து மரபணுச் (DNA) சோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் தொடர் கண்காணிப்புடன் பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சர்ச்சைகளை விட நோயாளிகளின் சேவைக்கே முன்னுரிமைசர்ச்சைகளை விட நோயாளிகளின் சேவைக்கே முன்னுரிமை கல்முனை வடக்கு வைத்தியசாலை ...
24/08/2026

சர்ச்சைகளை விட நோயாளிகளின் சேவைக்கே முன்னுரிமை

சர்ச்சைகளை விட நோயாளிகளின் சேவைக்கே முன்னுரிமை கல்முனை வடக்கு வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு. *(ஜலீல் ஜீ - வடக்கு வைத்தியசாலை வளாகத்திலிருந்து)* கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியாளர் பணிமாற்றம் மற்றும் ஹிஜாப் தொடர்பான சர்ச்சைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வரும் நிலையில், அவற்றை விட நோயாளிகளுக்கான மருத்துவ சேவைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார். விபத்தொன்றின் பின்னர் இன்று (24) பணிக்கு திரும்பிய அவர், வைத்தியசாலை அதிகாரிகளை கூட்ட மண்டபத்தில் சந்தித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்....

சர்ச்சைகளை விட நோயாளிகளின் சேவைக்கே முன்னுரிமை கல்முனை வடக்கு வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு. *(ஜலீல் ஜீ – .....

24/08/2026

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளருக்கு நலன் வேண்டி துஆ.

(வைத்தியசாலை வளாகத்திலிருந்து - ஜலீல் ஜீ)
ஆகஸ்ட் 24:

(வீடியோ இணைப்பு)

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் மீண்டும் பணிக்கு திரும்பியதையடுத்து, அவரது நலன் மற்றும் பணிச் சிறப்புக்காக துஆ பிரார்த்தனை நிகழ்வு இன்று(24) வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

வைத்தியசாலையின் கணக்காளர் எம்.ஆர். நாஷீமுல் ஹக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வைத்தியசாலை வளாகத்திலுள்அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலின் பிரதான கதீப் மௌலவி அஷ்-ஷேக் அமானுல்லாஹ் முகம்மது அர்ஹம் (அஜ்வாத்) துஆ பிரார்த்தனையை நடத்தினார்.

இந்நிகழ்வில் வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு, பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணனின் நலன், ஆரோக்கியம் மற்றும் எதிர்கால பணிகளின் வெற்றிக்காக இறைவனைப் பிரார்த்தித்தனர்.

Address

373/c Hijra 4th Lane
Sammanthurai
32200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iconic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share