09/08/2026
Hey 26 Guys! 👋
*பரீட்சைக்குத் தயாராகும் நீங்கள் இன்றும் நாளையும் செய்யவேண்டியவை... 📚✨*
(Dr Thilshan Nizam
0769002515)
* 😴 நேரகாலத்தோடு தூங்குங்கள், 12 மணி தாண்டியும் விழித்துக் கொண்டிருக்க வேண்டாம். காலையில் நேரகாலத்தோடு எழுவதற்குத் திட்டமிடுங்கள்
* 🎫 பரீட்சைக்குக் கொண்டு செல்லத் தேவையான பொருட்களை இன்று தூங்க முன்பே தயார் செய்து வையுங்கள். குறிப்பாக Admission Card, அடையாள அட்டை, எழுதுகருவிகள்
* 🖊️ குறைந்தது மூன்று பேனைகளையாவது கொண்டு செல்லுங்கள். மறக்காமல் ஒரு பென்சில், ஒரு அழிறப்பர், ஒரு பென்சில் சீவி, ஒரு அடிமட்டம் என்பவற்றையும் தயார்படுத்துங்கள்
* 📄 விடை எழுதுவதற்கான paper களையோ, Rough sheet களையோ கொண்டு செல்ல வேண்டாம். அவை அனைத்தும் பரீட்சை மண்டபத்தில் வேண்டியளவு உங்களுக்குத் தரப்படும்.
* 💧 பரீட்சை மண்டபத்திற்கு கொண்டுசெல்வதற்காக மறக்காமல் தண்ணீர் போத்தலொன்றைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
* 👕 இன்றிரவே நாளை அணிந்து செல்லவிருக்கும் ஆடைகளைத் தயார்படுத்தி, iron செய்து வைத்துவிடுங்கள்.
* 🍲 இன்றோ, பரீட்சை நடைபெறும் காலங்களிலோ கடைகளில் உணவுகளை வாங்கி உண்பதை முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.
* 🍳 காலை உணவை உண்ணாமல் பரீட்சை மண்டபத்திற்கு செல்ல வேண்டாம். அத்தோடு காலைக்கடமைகளையும் முடித்துக் கொண்டே பரீட்சை மண்டபத்திற்கு செல்லுங்கள்.
(Dr Thilshan Nizam
0769002515)
* ⏰ பரீட்சை ஆரம்பமாகும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னராவது பரீட்சை மண்டபத்திற்குச் செல்லுங்கள். நாளை உங்களது முதலாவது பரிட்சை நாள் என்பதால், உங்களது மண்டப எண் மற்றும் சுட்டெண்ணிற்குரிய மேசை என்பவற்றைத் தேடவேண்டியிருக்கும். எனவே நேரத்தோடு சென்று உரிய இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள்.
* 📵 பரீட்சை மண்டபத்திற்கு கையடக்கத் தொலைபேசி, Smart watch, headsets போன்ற இலத்திரனியல் உபகரணங்களைக் கொண்டு செல்லாதீர்கள். கண்டுபிடிக்கப்பட்டால் வாழ்க்கையின் பெரும் பகுதியைத் தொலைக்க நேரிடும்.
* 📚 வீட்டிலிருக்கும் அனைத்துப் புத்தகங்களையும் மூட்டையாகச் சுமந்து கொண்டு போய் பரீட்சை மண்டபத்தில் படிப்பதை நாளையோடு நிறுத்திவிடுங்கள். தேவையெனின் சில சிறுகுறிப்புகளை மாத்திரம் எடுத்துச் செல்லுங்கள்.
* ✍️ வினாத்தாள் கிடைக்கும் முன்னரேயே உங்களுக்கான விடைத்தாள்கள் வழங்கப்படும். அதில் ஆரம்பத்திலேயே உங்களது சுட்டெண்ணை எழுதிவிடுங்கள்
* 🧐 விடைகளை அவசரமாகத் தெரிவுசெய்யாமல் அல்லது எழுதாமல், முதலில் வினாத்தாளின் அறிவுறுத்தலைக் கவனமாக வாசியுங்கள். பின்னர் வினாவினைக் கவனமாக வாசித்து விளங்கி விடையளியுங்கள். அவசரம் தவறுகளை அதிகரிக்கும்.
* 🧠 தெரியாத, படிக்காத வினாக்களைக் காண்கிற போது பதற்றப்பட வேண்டாம். அதேபோல அந்த வினாவையே யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். நேரத்தை வீணடிக்காமல் அடுத்த வினாவிற்குச் செல்லுங்கள். இறுதியில் நேரமிருந்தால் விடுபட்ட வினாக்களைப் பார்க்கலாம்.
* ✅ உரிய நேரத்திற்கு முன்னரேயே விடையளித்து முடிந்தாலும், உரிய நேரம் வரை மண்டபத்திலிருங்கள். உங்கள் விடைகள் சரியா என மீண்டும் பாருங்கள்.
* 🚶 பரீட்சை முடிந்தவுடன் மண்டபத்திற்கு வெளியிலோ, வீதியிலோ கதைத்துக் கொண்டு நின்று நேரத்தை வீணடிக்காதீர்கள். குறிப்பாக பரீட்சையில் நீங்கள் அளித்த விடைகளைப் பற்றிக் கலந்துரையாடவே வேண்டாம். அவசரமாக வீடு செல்லுங்கள்.
* 🏠 வீடு சென்ற பின்னர், பரீட்சையின் விடைகளைப் பற்றி யோசிப்பதையோ, அதன் விடைகளைத் தேடுவதையோ முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். அடுத்த பரீட்சைக்குத் தயாராகுங்கள்.
* 🚫 குறிப்பாக மூன்று பாடங்களுக்கான பரீட்சைகளும் முடியும் வரை mcq விடைகளைச் சரிபார்க்க வேண்டாம். நானும் MCQ விடைகளைத் தர மாட்டேன்.
பரீட்சைகளைச் சிறப்பாகவும், தைரியமாகவும் செய்யுங்கள். 💪✨
*பயத்தையும், மன உழைச்சலையும் முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். 😌❤️*
வாழ்த்துக்கள்! 🌟🎉
Dr Thilshan Nizam
0769002515