Cp/kot/Wevandon T.V

Cp/kot/Wevandon T.V Cp/Kot/wevandon t.v Ramboda

06-11-2025 ஆம் திகதி இடம்பெற்ற மாணவர்களுக்கான நிலையறி பரீட்சையில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டது ....
07/11/2025

06-11-2025 ஆம் திகதி இடம்பெற்ற மாணவர்களுக்கான நிலையறி பரீட்சையில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டது . இந்த பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களும் இந்த பரீட்சை பெறுபேறுகளை ஒரு நாளில் வெளியிட உதவிய அனைத்து ஆசிரியர்களும் இந்த தருணத்தில் கௌரவிக்கப்பட்டார்கள் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்..சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்ட புனித சவேரியர் பழைய மாணவர்கள் குழுவிற்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்....

17/10/2025

இன்று எமது பாடசாலையில் இடம்பெற்ற தமிழ் இலக்கிய மன்றத்தின் சிறப்பு அம்சமாக நிழல் நாடகம் மிக சிறப்பாகவும் , புதிய முயற்சியாகவும் மிக நேர்த்தியாகவும் இடம்பெற்றது..இதனை பயிற்றுவித்த எமது பாடசாலை தமிழாசான் திரு கிருஷ்ணராஜ் அவர்களுக்கு சிறந்த நடிப்பாற்றலை வழங்கிய 2025 ன் தரம் எட்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...விடாமுயற்சி வெற்றி தரும்..

2025-10-02 எமது பாடசாலையில் நவராத்திரி பூஜை மிக சிறப்பாக இடம்பெற்றது..இவ்விழாவில்  எமது பாடசாலை இணைப்பாளர் திரு உதயகுமார...
03/10/2025

2025-10-02 எமது பாடசாலையில் நவராத்திரி பூஜை மிக சிறப்பாக இடம்பெற்றது..இவ்விழாவில் எமது பாடசாலை இணைப்பாளர் திரு உதயகுமார் ஐயா, ஆசிரியர் ஆலோசகர்களான திரு உதயராஜ் ஐயா, திரு திருக்குமரன் ஐயா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்..இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய எமது வேவண்டன் சமூகத்தின் பழைய‌ மாணவர்கள் , பெற்றோர்கள் நலன் விரும்பிகள், நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்..

எமது பாடசாலையில் இடம்பெற்ற நவராத்திரி போட்டிகளுக்கான பரிசு பொதிகளை எமது பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் வழங்கியிர...
03/10/2025

எமது பாடசாலையில் இடம்பெற்ற நவராத்திரி போட்டிகளுக்கான பரிசு பொதிகளை எமது பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் வழங்கியிருந்தார்கள்...அவர்களுக்கு எமது பாடசாலை நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களும் நன்றிகளும்...

சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவ செல்வங்களுக்கும்...பல சவால்களின் மத்தியில் மாணவர்களை கைவிடாது கடைசிவரை துணைநின்ற ஆ...
04/09/2025

சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவ செல்வங்களுக்கும்...பல சவால்களின் மத்தியில் மாணவர்களை கைவிடாது கடைசிவரை துணைநின்ற ஆசிரியை திருமதி வீரத்திலகம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்...விடாமுயற்சி விஷ்வரூப வெற்றி....முயற்சி தொடரும்........

இன்றைய தினம் ஆரம்பபிரிவு மாணவர்கள் செயற்பட்டு மகிழ்வோம் பயிற்சிகளில் கலந்துக்கொண்டனர்.
03/09/2025

இன்றைய தினம் ஆரம்பபிரிவு மாணவர்கள் செயற்பட்டு மகிழ்வோம் பயிற்சிகளில் கலந்துக்கொண்டனர்.

21/08/2025

வேவண்டன் , தவலந்தனை இளைஞர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஏற்பாட்டில் இரண்டாம் நாளாக இன்றைய தினம் வெற்றிகரமாக வேவண்டன் பாடசாலை மைதானம் சீரமைப்பு பணி ஆரம்பமானது...இன்னும் நான்கு நாட்கள் இதனை முன்னெடுத்தால் மைதானம் பூரணத்துவம் அடையும்..இதுவரை இரண்டு நாட்களுக்கான நிதி மட்டுமே இளைஞர்கள் ,பழைய மாணவர்களால் சேகரிக்கப்பட்டுள்ளது....உதவி செய்ய முன்வருபவர்கள் தொடர்புக்கொள்ளவும்...இது உங்கள் சொத்து....இதுவரை ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...

வேவண்டன் பாடசாலையில் பழைய மாணவர்கள் என்ற அடிப்படையில்  1996 ம் ஆண்டு தரம் 8 ல் கல்வி கற்ற  N.யசோதரன்,  k.சிவராஜா,விக்னேஷ...
19/08/2025

வேவண்டன் பாடசாலையில் பழைய மாணவர்கள் என்ற அடிப்படையில் 1996 ம் ஆண்டு தரம் 8 ல் கல்வி கற்ற N.யசோதரன், k.சிவராஜா,
விக்னேஷ்வர மூர்த்தி,
P.சத்யன் மற்றும் ஜூலி கிரிஸ்டீனா போன்றவர்கள் ஒன்றிணைந்து பாடசாலை மைதான சீரமைப்புக்காக ரூபாய் 48000.00 செலவில் முதல்நாள் மைதான சீரமைப்பை இன்றைய தினம் முன்னெடுத்தனர். நாளைய தினம் இரண்டாம் நாள் சீரமைப்பை வேவண்டன் பாடசாலை இளைஞர்கள் மற்றும் பழைய மாணவர்கள் மேற்கொள்ள தயாராகியுள்ளனர். .இவ்வுதவியினை வழங்கிய அவர்களுக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறான பழைய மாணவர்களை எமது பாடசாலை பெற்றிருப்பதை விட்டு எமது சமூகம் மகிழ்ச்சி அடைகின்றது. திரு யசோதரன் அவர்களுக்கு விஷேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்..மைதான சீரமைப்பிற்கு அதிகளவான நிதி தேவைப்படுவதால் பங்களிப்பு செய்யக்கூடியவர்களை அன்போடு வரவேற்கின்றோம்.பாடசாலை மைதானம் உங்களுடைய பெறுமதி மிக்க சொத்து என்ற அடிப்படையில் அதனை சீர்செய்ய முன்வந்தவர்களையும்..இனி முன்வரக்கூடியவர்களையும் அன்போடு அழைக்கின்றோம்...

வேவண்டன் தமிழ் வித்தியாலயாத்தின்  நீண்ட நாட் களாக காணப்பட்ட குறைபாடுகளில் ஒன்றான sound system  ஒன்றினை தவலந்தன்னை  நகரில...
01/08/2025

வேவண்டன் தமிழ் வித்தியாலயாத்தின் நீண்ட நாட் களாக காணப்பட்ட குறைபாடுகளில் ஒன்றான sound system ஒன்றினை தவலந்தன்னை நகரில் வசிக்கும் எமது பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவியாகிய திருமதி கதிர்வேல் மோகமலர் அவர்கள் பெற்றுக் கொடுத்துள்ளார். இவ்வுதவியினை வழங்கிய அவர்களுக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறான பழைய மாணவர்களை எமது பாடசாலை பெற்றிருப்பதில் எமதுபாடசாலை சமூகம் மகிழ்ச்சி அடைகின்றது.

வலய மட்ட   ஆங்கில Hand writting போட்டியில் தரம் 7 ஐ சேர்ந்த அமிர்தலிங்கம் அக்சனா  மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டு பாடசாலை...
31/07/2025

வலய மட்ட ஆங்கில Hand writting போட்டியில் தரம் 7 ஐ சேர்ந்த அமிர்தலிங்கம் அக்சனா மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டு பாடசாலைக்கு பெருமை தேடி தந்துள்ளார். மாணவிக்கும், பயிற்றுவித்த ஆங்கில பாட ஆசிரியர் திரு மெட்வின் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்கள்..

வேவண்டன் தமிழ் வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்றுக் குழு‌ உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, எமது ப...
30/07/2025

வேவண்டன் தமிழ் வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்றுக் குழு‌ உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, எமது பாடசாலையில் நீண்ட நாட் களாக காணப்பட்ட குறைபாடுகளில் ஒன்றான அலுவலக அலுமாரி ஒன்றினை தவலந்தன்னை கோதை நகரில் வசிக்கும் எமது பாடசாலையில் 1968 ஆம் ஆண்டு கல்வி கற்ற பழைய மாணவராகிய R. சௌந்தரராஜன் அண்ணன் அவர்கள் பெற்றுக் கொடுத்துள்ளார். அத்தோடு மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாள்களை அச்சுடுவதற்கு தேவையான நான்கு
A4 ரீம்களையும் வழங்கியுள்ளார். இவ்வுதவியினை வழங்கிய அண்ணன் அவர்களுக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறான பழைய மாணவர்களை எமது பாடசாலை பெற்றிருப்பதை விட்டு எமது சமூகம் மகிழ்ச்சி அடைகின்றது. உதவியினை பெற்றுத் தருவதற்காக வேண்டுகோள் விடுத்த திருமதி. மகேந்தா, மற்றும் பிரகாஷ்ராஜன் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Address

Wevandon Ramboda
Ramboda

Telephone

+94777288817

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cp/kot/Wevandon T.V posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Cp/kot/Wevandon T.V:

Shortcuts

Share

Category