13/09/2026
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
السلام عليكم و رحمة الله وبركاته
🌹 மதரசதுல் பலாஹ் – இஸ்லாமிய கலை கலாச்சார நிகழ்வு 🌹
الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الله ﷺ
நேற்று 30/03/1448ஹி.12/09/2026 அன்று, மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மதரசதுல் பலாஹ் அல்குர்ஆன் மதரஸா மாணவர்களை முன்னிறுத்தி, இஸ்லாமிய கலை, கலாச்சார மற்றும் அறிவூட்டும் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – கரம்பை கிளை உலமாக்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
அவ்வகையில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – கரம்பை கிளை உலமாக்கள் இந்நிகழ்வில் முழுமையாகப் பங்கேற்று, மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி, மதரஸா நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களை மாணவர்களுக்கு வழங்கி அவர்களை கௌரவித்தனர்.
இவ்வாறான நிகழ்வுகள் எமது சிறார்களின் உள்ளங்களில் இஸ்லாமிய விழிப்புணர்வையும், மார்க்கப் பற்றையும், நல்லொழுக்கத்தையும் மேலும் வளர்ப்பதுடன், அவர்களது திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்கும் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன.
அத்துடன், இத்தகைய மார்க்க மற்றும் சமூக நிகழ்வுகள் எமது சமூகத்தின் ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றுகின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த மதரஸா நிர்வாகத்தினர், ஏற்பாட்டுக் குழுவினர், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
🤲 அல்லாஹ் தஆலா இம்முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் சிறந்த கூலியை வழங்குவானாக!
🤲 இந்நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் நலன்களையும் அருளையும் வழங்குவானாக!
🤲 மதரஸாவின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க வளர்ச்சிக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக!
🤲 எமது சமூகத்தில் மார்க்க அறிவையும், ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் அதிகரிப்பானாக!
🤲 எமது சிறார்களை நல்லொழுக்கமும் மார்க்கப் பற்றும் உடைய சிறந்த முஸ்லிம்களாக வளரச் செய்வானாக!
آمين يا رب العالمين 🤲
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – கரம்பை கிளை
All Ceylon Jamiyyathul Ulama – Karambe Branch