P/ Manalkundru Muslim Maha Vidyalaya

P/ Manalkundru Muslim Maha Vidyalaya

Share

"A Talented Child Through Quality Education" சிறந்த கல்வி,ஒழுக்கம்,ஆளுமை விருத்தியினூடாக ஈருலகத்திற்கும் பொருத்தமான சமுகத்தை உருவாக்கல்

18/09/2025

மீலாதுன் நபி தினம் விழா அனுஷ்டிப்பு

நபிகளாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு றபியுல் அவ்வல் மாதமான இக்காலப் பகுதியில் கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு அமைவாக மீலாத் இஸ்லாமிய தின நிகழ்வு எமது பாடசாலையில் ஆத்மீக அமர்வாக இடம் பெற்றது.
அதிபர் அவர்களின் வழிகாட்டலில்
2025.09.10 அன்று பிரதி அதிபர் திருமதி நஸ்ரியா அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களது பல்வேறு ஆக்கங்கள் மேடையற்றப்பட்டதுடன் இஸ்லாமிய வாழ்வியல் நெறிமுறை நபிகளாருடைய மகத்துவம் தொடர்பாக சொற்பொழிவுகள் இடம் பெற்றன.

இந்நிகழ்வினை முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது பாடசாலையின் இஸ்லாம் பாட ஆசிரியர்கள் வாளர்களாக கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வை ஒழுங்குப்படுத்திய முஸ்லிம் மஜ்லிஸ் மற்றும் இஸ்லாம் பாட ஆசிரியர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்

04/09/2025
Photos from P/ Manalkundru Muslim Maha Vidyalaya's post 22/08/2025

சின்னம் அணிவிக்கும் நிகழ்வு நிறைவு பெற்றது.

எமது மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாம் தவணைப் பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் Division ரீதியாக முதல் இடத்தை பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கடந்த 2025.08.18 திங்கட்கிழமை காலைக் கூட்டத்தின் போது இடம்பெற்றது.

அதிபர் திரு M.M சனூஸ் முஹமட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சகல ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். தரம் 01 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு மேற்படி சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இந்நிகழ்வினை சிறப்பாக நடாத்திய பரீட்சை பிரிவுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய சகல ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Photos from P/ Manalkundru Muslim Maha Vidyalaya's post 21/08/2025

ஆரம்பப் பிரிவு மாணவர்களின் களப்பயணம் நிறைவு

புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் தரம் 01-04 வரையான ஆரம்பப் பிரிவு மாணவர்களின் சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகளுக்காக கல்வி களப்பயணம் 2025.08.14 வியாழன் அன்று இடம்பெற்றது.

புத்தளம் பிரதேசம் சார்ந்த பின்வரும் இடங்கள் பார்வையிட்டு மாணவர்கள் நேரடியாக அனுபவங்களைப் பெற்றுக் கொண்டனர்.
● Puttalam Grand Mosque
● Wind Power (pvt) Ltd
● Palavi Salt Limited
● Coir Mill
● Anne's Factory - Daluwa
● Thalawila Church
● Kalpitiya Dutch Fort
● Fishery Harbour Kalpitiya
ஆகிய புத்தளம் நகர் பிரதேச எல்லை தொடக்கம் கற்பிட்டி கோட்டை வரையான பகுதிகளில் இம் மாணவர்கள் கள விஜயம் மேற்கொண்டனர்.

அதிபர், பிரதி அதிபர் மற்றும் ஆரம்ப பிரிவு பகுதித்தலைவர், ஆசிரியர்கள் இம்மாணவர்களை அழைத்துச் சென்றனர்.

மேற்படி கல்வி களப்பயணத்திற்கு அழைத்துச் சென்ற ஆசிரியர்களுக்கும் வழிநடத்திய களப்பயணத்துக்கு பொறுப்பான குழுவினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

30/07/2025

தேசிய மட்ட சமூக விஞ்ஞான போட்டிக்கு தெரிவு

வடமேல் மாகாண மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் தரம் 11 இல் பயிலும் எமது பாடசாலை மாணவி M.A. AMAANI முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்ட சமூக விஞ்ஞான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். “الحمدلله" குறித்த மாணவிக்கும் வழிப்படுத்திய சகல ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் தேசிய மட்டத்தில் வெற்றிபெற வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

Photos from P/ Manalkundru Muslim Maha Vidyalaya's post 18/07/2025

"Nothing is impossible"

வாழ்க்கையை வெற்றி கொள்ளும் திறனை வளர்க்கும் நோக்கில் மாணவர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தின் அங்கமாக இன்றைய தினம் 2025.07.18 வெள்ளிக்கிழமை புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் "Nothing is Impossible" என்ற தலைப்பிலான வலுவூட்டல் நிகழ்ச்சி திட்டம் இடம்பெற்றது. தரம் 09 தொடக்கம் உயர்தர மாணவர்களுக்கான இந்நிகழ்ச்சி கல்லூரியின் இமாம் புஹாரி மண்டபத்தில் அதிபர் Mr. M.M. Sanoos Mohamed தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் பிரதான வளவாளராக கலாநிதி Ashath Siraas (நளீமி) அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வின்போது மாணவர்கள் உற்சாகமாக செயல்பட்டனர். இதனைத்தொடர்ந்து பெற்றோர்களுக்கான வழிகாட்டல் அமர்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வு எமது பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை பிரிவோடு இணைந்து Farveen Raja Foundation அனுசரணையில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Photos from P/ Manalkundru Muslim Maha Vidyalaya's post 09/07/2025

"Clean Steps - Safe Space" வேலைத்திட்டம்

இன்று எமது பாடசாலையில் "Clean Sri Lanka" தேசிய வேலைத்திட்டத்திற்கு இணங்க, 'சூழல் உணர்வுமிக்க சமூக பொறுப்புணர்வுடன் கூடிய கல்விச் சுற்றாடலை நிர்மாணித்தல்' என்ற தொனிப்பொருளில் மேற்படி வேலைத்திட்டம் அதிபர் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், SDEC ஒன்றிணைந்து பாடசாலை வளாகம் முழுவதும் தூய்மை மற்றும் சுத்தம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டனர்.

இந்தத் திட்டம் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் அவசியத்தை உணர்த்துவதோடு, பொது சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டியது.
உறுதியான ஒத்துழைப்பும், செயல்திறனும் எமது பணிகளை நிறைவுசெய்ய உதவி புரிந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வல்ல இறைவன் அனைவருடைய செயல்களையும் பொருந்திக்கொள்வானாக.

Want your school to be the top-listed School/college in Puttalam?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

P/Manalkundru M. M. V. , Manalkundru,
Puttalam