Zahirians Online Puttalam

Zahirians Online Puttalam Zahira College (National School), Puttalam, is the heart of many Puttalam people. We all started our lives in it we are living in it.

20/02/2022
புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் அதிபர் I. A. நஜீம் அவர்களின் ஆலோசனைக்கமைய தரம் 8,9 பகுதியில் இருந்து தேசிய மாணவர் படைய...
04/01/2022

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் அதிபர் I. A. நஜீம் அவர்களின் ஆலோசனைக்கமைய தரம் 8,9 பகுதியில் இருந்து தேசிய மாணவர் படையணிக்கான (Cadet) மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நேர்முகத்தேர்வு Cadet Unit க்கு பொறுப்பான ருக்மன் திசாநாயக்க ஆசிரியரால் நடாத்தப்பட்டது. இதற்கு உதவியாக ஆசிரியர்களான ரினோஸ், அஸ்லம், சியாத், சஜு ஆகியோர் செயற்பட்டனர்.

புத்தளம் சாஹிரா தேசிய  கல்லூரியை கற்றல் கற்பித்தல் சிங்  சூழலாக மாற்றியமைப்பதற்கான  பல வேலைத்திட்டங்களில் ஒரு அங்கமாக, க...
07/12/2021

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியை கற்றல் கற்பித்தல் சிங் சூழலாக மாற்றியமைப்பதற்கான பல வேலைத்திட்டங்களில் ஒரு அங்கமாக,
கௌரவ அதிபர் I.A. நஜீம் அவர்களின் தலைமையில் பயன் மற்றும் நிழல் அழகு தரும் மரங்கள் நாட்டப்பட்டு பாடசாலை சூழல் அழகு படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் இன்று 2021.12.07 ஆம் திகதி பாடசாலையின் நடை பாதை ஓரங்களிலும் வகுப்பறை முன்னாலும் மேலும் பிரதான நுழைவாயில் இருமருங்கிலும் ஐ.ஏ. நஜீப், மற்றும் வலய சுற்றாடல் ஆணையாளர், புத்தளம் மாவட்ட செயலாளர் , நகர சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், சமுக சேவையாளர்கள் போன்றோரால் "பைனஸ்" மரம் நடும் நிகழ்வும்
பாடசாலக்குத் தேவையான சில உபகரணங்களும் அன்பளிப்பு செய்யப்பட்டு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சகல பிரதி, உப, பிரதி அதிபர்கள், பகுதி தலைவர்கள் ,ஆசிரிய ஆசிரியைகள், சிற்றூழியர்களுக்கும் கல்லூரி சார்பாக மனமார்ந்த நன்றிகள்.

கடையாமோட்டை தேசிய கல்லூரி அதிபர் திரு. தெளபீக், பிரதி அதிபர் திரு. முஜீப், கல்லூரியின் செயற்பாட்டாளர்கள் முன்னாள் வடமேல்...
01/12/2021

கடையாமோட்டை தேசிய கல்லூரி அதிபர் திரு. தெளபீக், பிரதி அதிபர் திரு. முஜீப், கல்லூரியின் செயற்பாட்டாளர்கள் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் SLPP அமைப்பாளருமான
A. H. M. ரியாஸ் தலைமையில் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி அதிபர் I.A. நஜீம் அவர்களுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாணவர் தலைவர்கள் தொடர்பான செயலமர்வொன்று எமது கல்லூரியில் நேற்று (26....
28/11/2021

எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாணவர் தலைவர்கள் தொடர்பான செயலமர்வொன்று எமது கல்லூரியில் நேற்று (26.11.2021) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எமது கல்லூரியின் மாணவர் தலைவர் குழாத்தினை ஒரு தரம் வாய்ந்த முன்மாதிரிமிக்க மாணவர் தலைவர்களாக உருவாக்குவதற்கான செயற்திட்டம் ஒன்று நடைமுறை படுத்தப்படுகிறது அதன் முதற் கட்டமாக இன்று அதிபர், பகுதி தலைவர்கள் மற்றும் மாணவர் தலைவர்களுக்கான பொறுப்பாசிரியர்கள் ஆகியோருக்கு மாணவர் தலைவர்கள் தொடர்பான வழிகாட்டல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வில் எமது கல்லூரியின் பழைய மாணவரும் ,கொழும்பு‌‌ டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் பழைய மாணவரும், சமூக ஆர்வலருமான Sadham D.Zarjahan
(Executive Director International Youth Council )New York, USA அவர்கள் வளவாளராக கலந்து கொண்டார்.

எமது பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பை ஏற்று இந் நிகழ்வை திறம்பட நடத்தி வைத்த சகோ.சதாம் அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

அதேபோல் எமது அதிபர் அவர்களுக்கும் இந் நிக‌ழ்வில் கலந்து கொண்ட எமது ஏனைய பொறுப்பாசிரியர்களுக்கும் எமது பழைய மாணவர் சங்கம் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

திறமை திடல்விடுமுறை காலத்தை பயனுள்ள விதமாக கழிக்கும் வகையில் புத்தளம் சாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாட...
24/11/2021

திறமை திடல்

விடுமுறை காலத்தை பயனுள்ள விதமாக கழிக்கும் வகையில் புத்தளம் சாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட திறமை திடல் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றி வெற்றியாளர்களாக பின்வரும் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
1. M.R.M. Rayyan (Grade 7B)
2. M.R.Faadhil Ahmed (Grade 10A)
2021.11.23 இன்று இவர்களுக்கான பரிசில்கள் கல்லூரியின் அதிபர் காரியாலயத்தில் அதிபர் மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர் முன்னிலையில் வழங்கிவைக்கப்பட்டது.

இப்போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களுக்கு TAX ZARA රෙදිපිලි මහගෙදරநிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.இதற்காக எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்கம்
சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

As an advice from the Principal I.A Najeem and the request from the PPA, uniforms for the securities were issued today b...
24/11/2021

As an advice from the Principal I.A Najeem and the request from the PPA, uniforms for the securities were issued today by Zahirians' 12 organization. This was handed over to the Principal yesterday morning (12.11.2021) by the president of the Zahirians 12 organization Mr.Abdul Raheem since the PPA secretary A.W.M Naseef also presented there.
We also thank Zahirians' 12 organization on behalf of PPA for this great effort.

எமது புத்தளம் சாஹிரா கல்லூரியின் அதிபர் I.A Najeem அவர்களின் ஆலோசனைக்கமைய எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று பழைய மாணவர் அமைப்பான 'ZAHIRIANS 12' அமைப்பினரால் எமது கல்லூரியின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்குரிய சீருடை இன்று காலை உத்தியோகபூர்வமாக ZAHIRIANS 12 அமைப்பின் தலைவர் சகோ .Abdul Raheem அவர்களினால் பாடசாலையின் பழைய மாணவர் சங்கச்செயலாளர் A.W.M Naseef முன்னிலையில் பாடசாலையின் அதிபரிடம் கையளிக்கபட்டது.

09/11/2021

மறு அறிவித்தல் வரை பாடசாலை மூடப்பட்டுள்ளது...

புத்தளம் ஸாஹிரா கல்லூரிதரம் 10,11,12,13 மாணவர்கள் அவர்களுடைய பெற்றோர்களுக்கான அறிவித்தல்.🎓 எதிர் வரும் திங்களன்று 08.11....
06/11/2021

புத்தளம் ஸாஹிரா கல்லூரி

தரம் 10,11,12,13 மாணவர்கள் அவர்களுடைய பெற்றோர்களுக்கான அறிவித்தல்.

🎓 எதிர் வரும் திங்களன்று 08.11.2021. பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்க இருக்கின்றமை குறித்து பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுருத்தப்படுகிறீர்கள்.

♟️ பாடசாலை ஆரம்பிக்கும் நேரம். 7.15 மணிக்கு பாடசாலைக்கு சமுகந்தரல்.

(தாமதாமாக வருகை தருவதை தவிர்க்கவும்.)

♟️சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல்.

📌 முகக் கவசம் அணிதல் Mask
📌 கைகளை கழுவுதல். தொற்று நீக்கி திரவம் வைத்திருத்தல்.
📌 சமூக இடைவெளிகளைப் பேணல்.

🎓பாடத்திற்குரிய ஆயத்தங்கள், கற்றல் சாதனங்களைக் கைவசம் வைத்திருத்தல்.

🎓 குடிநீர், காலை உணவு வீட்டிலிருந்து கொண்டு வருதல்.

🎓 முழுமையாக சீருடையுடன் வருகைத் தரல்.

🎓 தலைமுடி, நகச்சுத்தம் பேணுதல்.

🎓 பாடசாலை ஒழுக்கக் கோவையை எல்லா நேரங்களிலும் பேணி நடத்தல்.

🎓 கற்றல் கற்பித்தலுக்குரிய Markers Dusters கொண்டு வருதல்.

நன்றி

அதிபர்.

       to be a Zahirian
12/02/2021


to be a Zahirian

Address

Mannar Road
Puttalam
61300

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 11:30

Telephone

+94322265473

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahirians Online Puttalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category