LankaEdu

LankaEdu Education Guider
(1)

17/09/2026

#நிந்தவூரில் “புத்தகக் கண்காட்சி” – வாசிப்பு கலாசாரத்தை ஊக்குவிக்கும் நிகழ்வு…

உள்ளூராட்சி வாரம் – 2026 இன் இலக்கியம், கல்வி, நூலகம் மற்றும் விளையாட்டு தினத்தை முன்னிட்டு, நிந்தவூர் பிரதேச சபையினால் “புத்தகக் கண்காட்சி” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு 18.09.2026 அன்று நிந்தவூர் பிரதேச சபையின் பல்பொருள் வர்த்தகக் கட்டிடத்தில் (மக்கள் வங்கிக்கு முன்னால்) நடைபெறவுள்ளது.

“நூல்களை வாசிப்போம் – அறிவை வளர்ப்போம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நிந்தவூர் பிரதேச சபை அன்புடன் அழைப்பு விடுக்கின்றது.

வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து, அறிவு மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பங்களிக்கும் நோக்கில் இப்புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடு:
மர்ஹூம் அமீர் மேர்சா பொது நூலகம்,
பிரதேச சபை, நிந்தவூர்.

‎

நிந்தவூரில் “புத்தகக் கண்காட்சி” – வாசிப்பு கலாசாரத்தை ஊக்குவிக்கும் நிகழ்வு…உள்ளூராட்சி வாரம் – 2026 இன் இலக்கியம், கல்...
17/09/2026

நிந்தவூரில் “புத்தகக் கண்காட்சி” – வாசிப்பு கலாசாரத்தை ஊக்குவிக்கும் நிகழ்வு…

உள்ளூராட்சி வாரம் – 2026 இன் இலக்கியம், கல்வி, நூலகம் மற்றும் விளையாட்டு தினத்தை முன்னிட்டு, நிந்தவூர் பிரதேச சபையினால் “புத்தகக் கண்காட்சி” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு 18.09.2026 அன்று நிந்தவூர் பிரதேச சபையின் பல்பொருள் வர்த்தகக் கட்டிடத்தில் (மக்கள் வங்கிக்கு முன்னால்) நடைபெறவுள்ளது.

“நூல்களை வாசிப்போம் – அறிவை வளர்ப்போம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நிந்தவூர் பிரதேச சபை அன்புடன் அழைப்பு விடுக்கின்றது.

வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து, அறிவு மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பங்களிக்கும் நோக்கில் இப்புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடு:
மர்ஹூம் அமீர் மேர்சா பொது நூலகம்,
பிரதேச சபை, நிந்தவூர்.

‎

Grade 5 Scholarship Benefit Scheme 2026To the children of the active members of the Employees’ Trust Fund Board.🎓 Grade ...
12/09/2026

Grade 5 Scholarship Benefit Scheme 2026
To the children of the active members of the Employees’ Trust Fund Board.

🎓 Grade 5 Scholarship Benefit Scheme – 2026

💰 Financial grant of Rs. 15,000/- each based on the district cut-off marks for 9,000 children who passed the scholarship examination.

📌 Application Mode: Online only

📅 Closing Date: 31.10.2026

🌐 Apply Online: www.etfb.lk⁠�

📧 Email: [email protected]

☎️ Scholarship Section: 0117747200 / 0117747281 / 0117747282

*சாதாரண தர பரீட்சையில் ஏற்படவுள்ள மாற்றம்.* இலங்கையில் 2027ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புக...
11/09/2026

*சாதாரண தர பரீட்சையில் ஏற்படவுள்ள மாற்றம்.*

இலங்கையில் 2027ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு அமைய, சாதாரண தரப் பரீட்சையை 7 பாடங்களாக மட்டுப்படுத்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற, புதிய கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான நாடாளுமன்ற துணைக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, இது தொடர்பான அறிக்கையை குறித்த கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளார். அதற்கமைய, புதிய பாடத்திட்டக் கட்டமைப்பின் கீழ், ஒரு பாடவேளை 40 நிமிடங்களாகவும், பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களை உள்ளடக்கியதாக அமையும் எனவும், வரலாறு மற்றும் அழகியல் பாடங்களும் இதில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்மொழி, ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் சமயம் உள்ளிட்ட கட்டாயப் பாடங்களுக்கு தொடர்ச்சியான மற்றும் தொகுப்பு மதிப்பீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

மேலும், 10 மற்றும் 11ஆம் தரங்களில் தொழிற்கல்விப் பாடங்களை அறிமுகப்படுத்தவும், 12 மற்றும் 13ஆம் தரங்களில் சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி தொடர்பான பாடத் தொகுதிகளை உள்ளடக்கவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

*தரம் 6 மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும். -பிரதமர்* இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங...
11/09/2026

*தரம் 6 மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும். -பிரதமர்*

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ்,பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் செயற்பாட்டு அடிப்படையிலான கற்றல் முறையின் மூலம் மாணவர்கள் வீட்டுக்கும் பாடசாலைக்கும் இடையில் எடுத்துச் செல்ல வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

*தொகுதி அடிப்படையிலான கற்றல் முறை.*

வகுப்பறைச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் புத்தகங்கள் பாடசாலையிலேயே வைக்கப்படும். இதனால், மாணவர்கள் அவற்றை தினமும் வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

பாடசாலை தவணை முடிவடைந்த பின்னர், தங்களது கற்றல் செயற்பாடுகளை நிறைவு செய்த நிலையில், அந்தப் புத்தகங்களை மாணவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும்.

மேலும், 2027ஆம் ஆண்டு முதல் தரம் 6 மாணவர்களுக்காக தொகுதி அடிப்படையிலான கற்றல் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதன் கீழ், தற்போதுள்ள பெரிய அளவிலான பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக, ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட தவணைக்குத் தேவையான பாடத்தொகுதிகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இந்த மாற்றங்களின் மூலம் மாணவர்கள் தினசரி பாடசாலைக்கு எடுத்துச் செல்லும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறையும்“ என பிரதமர் தெரிவித்துள்ளார்.

*பல்கலைக்கழக மாணவர்களுக்கு 16,000 புதிய விடுதி வசதிகள்! - பிரதமர் அறிவிப்பு.* புதிய விடுதித் திட்டத்தின் ஊடாக சுமார் 16,...
11/09/2026

*பல்கலைக்கழக மாணவர்களுக்கு 16,000 புதிய விடுதி வசதிகள்! - பிரதமர் அறிவிப்பு.*

புதிய விடுதித் திட்டத்தின் ஊடாக சுமார் 16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளிலும் அதற்குப் பின்னரும் 55 புதிய பல்கலைக்கழக விடுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதன் மூலம் சுமார் 16,000 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். விடுதிகளைப் புனரமைத்தல் மற்றும் புதிய விடுதிகளை நிர்மாணித்தல் ஆகியவற்றுக்காக அரசாங்கம் உள்நாட்டு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளது.

2026ஆம் ஆண்டில் புதிய விடுதிகளை நிர்மாணிப்பதற்காக 1,500 மில்லியன் ரூபாவும், ஏற்கனவே உள்ள விடுதிகளைப் புனரமைப்பதற்காக 400 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

*கிளிநொச்சியில் மாணவர்களுக்கான சிசுசெரிய பேருந்து சேவை ஆரம்பம்.*கிளிநொச்சி மாவட்டத்திற்கான சிசுசெரிய பாடசாலை மாணவர்களுக்...
11/09/2026

*கிளிநொச்சியில் மாணவர்களுக்கான சிசுசெரிய பேருந்து சேவை ஆரம்பம்.*

கிளிநொச்சி மாவட்டத்திற்கான சிசுசெரிய பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை இன்றைய. தினம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பூநகரி பள்ளிக்குடா சந்தியில் இன்று காலை நடைபெற்றது.

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் க்ளீன் சிறீலங்கா மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன் ,வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்.

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பான மற்றும் சலுகைக் கட்டணத்திலான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக "சிசுசெரிய" (Sisu Seriya) பேருந்துச் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது .

பன்னிரண்டு வயது வரையான மாணவர்களுக்கு கட்டணத்தில் 25வீதமும் பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கட்டணத்தில் ஐம்பது வீதமும் அறவிடப்படுகின்றது.

அகில இலங்கை கணிதப் போட்டியில் மாகாண மட்டத்தில் சாதனை படைத்து தேசிய மட்டத்திற்குத் தெரிவான புத்தளம் பாத்திமா பாலிகா மகா வ...
11/09/2026

அகில இலங்கை கணிதப் போட்டியில் மாகாண மட்டத்தில் சாதனை படைத்து தேசிய மட்டத்திற்குத் தெரிவான புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலய மாணவி

அண்மையில் இடம்பெற்ற மாகாண மட்டக் கணிதப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களில், புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தின் தரம் 08 மாணவி முஹம்மத் காமில் அன்ஹா ஸைன் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தரம் 6 தொடக்கம் 13 வரையிலான மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட இப்போட்டித் தொடரில், புத்தளம் கல்வி வலயத்தின் சார்பில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட ஒரே போட்டியாளர் இவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாகாண மட்டத்தில் பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமை சேர்த்த மாணவி அன்ஹா ஸைன் தொடர்ந்து நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டியிலும் வெற்றி பெற எமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் 💐

🚨 Free Spoken English Workshop 🚨English பேச தெரியாம இருப்பது ஒரு பிரச்சினை.ஆனா சரியான guidance இல்லாதது அதைவிட பெரிய பிர...
10/09/2026

🚨 Free Spoken English Workshop 🚨

English பேச தெரியாம இருப்பது ஒரு பிரச்சினை.

ஆனா சரியான guidance இல்லாதது அதைவிட பெரிய பிரச்சினை.

இந்த Seminar-ல் நீங்கள் :

✅ எப்படி English பேச ஆரம்பிப்பது
✅ எவ்வாறு Easy ஆக English படிக்கலாம்
✅ எப்படி daily practice செய்வது
✅ எப்படி confidence build செய்வது
💯 Beginner Friendly
💻 Online Zoom Seminar

*👇 இந்த WhatsApp குழுவில் இணையுங்கள்.*
https://chat.whatsapp.com/K6WjV8bt0gX0EEoPTmc98K?s=cl&p=a&mlu=4&ilr=4

> Organized By :
*Redrel Institute*

📲 077 071 8304

🤝 தேவைப்படுபவர்களுக்கு பகிருங்கள்.

🇱🇰. ADO EXAM PAPER - 2026👇
09/09/2026

🇱🇰. ADO EXAM PAPER - 2026👇

Address


56000

Alerts

Be the first to know and let us send you an email when LankaEdu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to LankaEdu:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share