Pulmoddai Muslim Central College -National School

Pulmoddai Muslim Central College -National School The first school of Pulmoddai established in 1905.

📚🌟 விடுமுறைக்கால கற்றல் வகுப்புகள் ஆரம்பம்! 🌟📚தி/தி/புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி க.பொ.த உயர்தரப் பரீட்சை நிலையமாக ...
11/08/2026

📚🌟 விடுமுறைக்கால கற்றல் வகுப்புகள் ஆரம்பம்! 🌟📚
தி/தி/புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி க.பொ.த உயர்தரப் பரீட்சை நிலையமாக செயற்படுவதன் காரணமாக, தரம் 11 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில் விடுமுறைக்கால கற்றல் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வகுப்புகள் தி/தி/சதாம் வித்தியாலயத்தில், நேற்றைய தினம் அதிபர் S. சியானா அவர்களின் தலைமையில் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. 📖✍️
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக கற்றல் இடத்தினை ஏற்பாடு செய்து வழங்கிய தி/தி/சதாம் வித்தியாலய அதிபர் M.B. சஹ்ரா பானு அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 🌷💐
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஒத்துழைக்கும் அனைவருக்கும் நன்றிகள்! 🤝
“கல்வியே வெற்றிக்கான அடித்தளம்!” 🎓✨

🌟📚 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்! 📚🌟அல்லாஹ்வின் அருளால், நீங்கள் இதுவரை மேற...
09/08/2026

🌟📚 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்! 📚🌟

அல்லாஹ்வின் அருளால், நீங்கள் இதுவரை மேற்கொண்ட கடின உழைப்பிற்கும், முயற்சிகளுக்கும் சிறந்த பலன் கிடைக்கட்டும். 🤲

📝 பரீட்சை மண்டபத்தில் தன்னம்பிக்கையுடன், அமைதியாகவும் தெளிவான சிந்தனையுடனும் பரீட்சையை எதிர்கொள்ளுங்கள்.

🤲 அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நல்ல அறிவையும், ஞாபக சக்தியையும், தெளிந்த சிந்தனையையும் வழங்கி, பரீட்சையை இலகுவாக்கி, சிறந்த பெறுபேற்றையும் வெற்றியையும் வழங்குவானாக.

🌸 உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையவும், நீங்கள் விரும்பிய துறைகளில் உயர்ந்து சாதிக்கவும் அல்லாஹ் அருள்புரிவானாக!
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்! 🤲❤️

💐 உயர்தரப் பரீட்சையை எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 💐
✨ “உங்கள் முயற்சி + அல்லாஹ்வின் அருள் = வெற்றி” ✨

அதிபர்
தி/தி/புல்மோட்டை.மு.ம.க

🌟 தி/தி/புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு மற்றுமொரு ஆளுமை! 🌟அல்ஹம்துலில்லாஹ்! 💐தி/தி/அறபாத் மகா வித்தியாலயத்தில் பி...
08/08/2026

🌟 தி/தி/புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு மற்றுமொரு ஆளுமை! 🌟
அல்ஹம்துலில்லாஹ்! 💐

தி/தி/அறபாத் மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராக கடமையாற்றிய H.M.M. மியாத் ஆசிரியர் அவர்கள், தி/தி/புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று, 30.07.2026 அன்று தனது புதிய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவரை அறபாத் மகா வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அன்புடன் அழைத்து வந்ததுடன், தி/தி/புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி நிர்வாகத்தினரால் அன்புடனும் கண்ணியத்துடனும் வரவேற்கப்பட்டார். 🌹

தற்போது எமது கல்லூரியில் கலைத்திட்டத்திற்கான பிரதி அதிபராக தனது கடமைகளை சிறப்பாக ஆற்றி வருகின்றார்.

🎓 H.M.M. மியாத் ஆசிரியர் அவர்களின் அனுபவமும் ஆளுமையும் எமது கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கட்டும்.

✨ அவரின் புதிய பணிப்பாதை சிறக்கவும், சேவைகள் மேலும் சிறப்போங்கவும் எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! 🤲💐

🌟🎓 வாழ்த்துக்கள் – உவைஸ் அப்துல் லாஹிர்! 🎓🌟அல்ஹம்துலில்லாஹ்! 🤲💐எமது தி/தி/புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் மற்றுமொ...
08/08/2026

🌟🎓 வாழ்த்துக்கள் – உவைஸ் அப்துல் லாஹிர்! 🎓🌟
அல்ஹம்துலில்லாஹ்! 🤲💐
எமது தி/தி/புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் மற்றுமொரு பெருமைக்குரிய சாதனை!

எமது பாடசாலையில் கல்வி கற்று, க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தோற்றி சிறந்த பெறுபேற்றைப் பெற்று, தென்கிழக்குப்
பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள எமது பாடசாலையின் இஸ்லாம் பாட ஆசிரியர் AR. உவைஸ் (மௌலவி) ஆசிரியரின் அன்பு மகன் அப்துல் லாஹிர் அவர்களுக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! 🎉🎓

🏫 கௌரவிப்பு நிகழ்வு
இவருக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று காலை நடைபெற்ற ஆராதனைக் கூட்டத்தில், பாடசாலை அதிபர் S. சியானா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் கலாநிதி M.H. அப்துல்லா (ஹாபிழ்) அஸ்ஹரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவனுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். 🌹

📱 இந்நிகழ்வில் “மாணவர்களும் தொலைபேசியும்” எனும் தொனிப்பொருளில் கலாநிதி M.H. அப்துல்லா (ஹாபிழ்) அஸ்ஹரி அவர்களினால் சிறப்பானதும் பயனுள்ளதுமான விழிப்புணர்வுச் சிறப்புரை ஆற்றப்பட்டது.

✨ அப்துல் லாஹிரின் இந்த வெற்றி எமது பாடசாலைக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு சிறப்பான தருணமாகும்.
🚀 பொறியியல் துறையில் மேலும் பல சாதனைகளைப் படைத்து, எதிர்காலத்தில் சிறந்த பொறியியலாளராக உருவெடுக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🤲🎓💐
தி/தி/புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி
குறிப்பு :-
அனுசரணை OBA Fasmeel

🌟 கல்வியே எமது எதிர்காலத்தின் அடித்தளம் 🌟

இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! 🌟🎉அல்ஹம்துலில்லாஹ்தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள...
02/08/2026

இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! 🌟🎉
அல்ஹம்துலில்லாஹ்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள எமது பாடசாலை மாணவன் உவைஸ் (மௌலவி) ஆசிரியரின் அன்பு மகன் அப்துல் லாஹிர் மற்றும் எமது மாணவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக கற்பித்த ஆசிரிய மாணவன் M.R.M.Riyas அவர்களுக்கும் எமது இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் துஆக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 💐

இந்த மகத்தான வெற்றி, அவரது கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பிற்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரமாகும்.
இந்த சாதனையின் பின்னணியில் உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் நல்விரும்பிகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் தனது கல்விப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, கல்வி, தொழில் மற்றும் சமூகச் சேவைகளில் மேலும் பல சாதனைகளைப் படைத்து, எமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.
🤲
🌹 அப்துல் லாஹிர் அவர்களுக்கும் M.R.M.Riyas அவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அதிபர்
தி/தி/புல்மோட்டை.மு.ம.க

🎓 க.பொ.த. (சாதாரண தரம்) 2025/2026 பரீட்சையில் உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழா 🌸இன்று தி/த...
21/07/2026

🎓 க.பொ.த. (சாதாரண தரம்) 2025/2026 பரீட்சையில் உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழா 🌸

இன்று தி/தி/புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில், அதிபர் S. சியானா அவர்களின் தலைமையில், க.பொ.த. (சாதாரண தரம்) 2025/2026 பரீட்சையில் உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

🌟 இவ்வாண்டு 9A சித்தியைப் பெற்ற பழில் முஹம்மது பஷீஹ் மாணவர் பொன்னாடை போர்த்தி, மாலை, பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கி விசேடமாக கௌரவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்ற ஏனைய மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் ஆசிரியர்களால் மாலைகள் மற்றும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

💐 அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
உங்கள் உயர்கல்விப் பயணம் சிறப்பாக அமையவும், எதிர்காலம் வெற்றிகளாலும் சாதனைகளாலும் நிரம்பியதாக அமையவும் வாழ்த்துகிறோம்.

🚌🎓 සිසුන්ගේ සිහින චාරිකාව වෙනුවෙන් යළිත් දෑත් දිගු කළ ලංකා ඛනිජ වැලි සංස්ථාව! ❤️"අධ්‍යාපන ගමන ඉදිරියටම යා යුතුය... සිහින...
15/07/2026

🚌🎓 සිසුන්ගේ සිහින චාරිකාව වෙනුවෙන් යළිත් දෑත් දිගු කළ ලංකා ඛනිජ වැලි සංස්ථාව! ❤️

"අධ්‍යාපන ගමන ඉදිරියටම යා යුතුය... සිහින ඉහළටම පියෑඹිය යුතුය... ඒ වෙනුවෙන් ශක්තියක් වන දෑත් සැමදා ඇගයීමට ලක්විය යුතුය!"
අපගේ පුල්මුඩේ ප්‍රදේශයේ අනාගත බලාපොරොත්තු වන සිසුන්ගේ අධ්‍යාපන, ක්‍රීඩා හා සමගාමී විෂය බාහිර ක්‍රියාකාරකම්වල සංවර්ධනය වෙනුවෙන් අඛණ්ඩව දායකත්වය සපයන ලංකා ඛනිජ වැලි සංස්ථාව (Lanka Mineral Sands Limited) වෙත, අප පුල්මුඩේ මුස්ලිම් මධ්‍ය මහා විද්‍යාලීය පාසල් ප්‍රජාව වෙනුවෙන් අපගේ හෘදයාංගම ස්තූතිය සහ උත්තමාචාරය මෙසේ පුදකර සිටිමු.

විශේෂයෙන්ම, මඩකලපුව ප්‍රදේශයේ පැවැත්වීමට නියමිත සමස්ත ලංකා පාසල් ක්‍රිකට් තරගාවලියට සහභාගී වන අප සිසුන්ගේ ගමනාගමන කටයුතු සාර්ථකව හා ආරක්ෂිතව සිදුකර ගැනීම සඳහා නොමිලේ ප්‍රවාහන (බස් රථ) පහසුකම් සලසා දීම, සිසුන්ගේ දක්ෂතා සහ අනාගතය කෙරෙහි තැබූ මහඟු අත්වැලකි.

මෙය ඔවුන් මෙවැනි උපකාරයක් කළ පළමු අවස්ථාව නොවේ. මීට පෙරද අවස්ථා ගණනාවකදීම අප පාසල් සිසුන්ගේ අධ්‍යාපනික, ක්‍රීඩා මෙන්ම අනෙකුත් පාසල් කටයුතු සඳහා ලංකා ඛනිජ වැලි සංස්ථාව නොමසුරුව ප්‍රවාහන පහසුකම් සලසා දෙමින් උපකාර කර ඇත. මෙම අඛණ්ඩ සහයෝගය, සිසුන්ගේ අනාගත දියුණුව උදෙසා සංස්ථාව සතු කැපවීම සහ සමාජීය වගකීම මනාව පැහැදිලි කරයි.

මෙම උදාර උපකාරය සලසා දුන් සංස්ථාවේ ගරු සභාපතිතුමා ඇතුළු කළමනාකාරීත්වයටත්, සියලුම උසස් නිලධාරීන්ට සහ මේ සඳහා දායක වූ සියලුම කාර්ය මණ්ඩලයටත් අපගේ හෘදයාංගම කෘතඥතාව මෙසේ පළ කර සිටිමු.

අධ්‍යාපනය, ක්‍රීඩාව, සමාජ සුබසාධනය මෙන්ම ආගමික ස්ථාන නගාසිටුවීම වෙනුවෙන් අඛණ්ඩව දායක වන ලංකා ඛනිජ වැලි සංස්ථාවේ සමාජ සත්කාරක සේවාවන්, අප පුල්මුඩේ ප්‍රදේශයේ සංවර්ධනයට මෙන්ම සිසුන්ගේ අනාගත ජයග්‍රාහී ගමනටද ශක්තිමත් පදනමක් වී ඇත.

🤲 සර්වබලධාරී අල්ලාහ් දෙවිඳාණන් ඔබගේ මෙම උදාර සමාජ සේවාවන් තව තවත් සාර්ථක කරත්වා! ඔබ සැමටත්, ඔබගේ ආයතනයටත් යහපත හා ආශිර්වාදය උදාකර දෙත්වා! ආමීන්.

🌹පුල්මුඩේ මුස්ලිම් මධ්‍ය මහා විද්‍යාලීය ප්‍රජාව 🎓

🚌🎓 மாணவர்களின் கனவுப் பயணத்திற்கு மீண்டும் கரம் நீட்டிய இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனம்! ❤️

"கல்விப் பயணம் தொடரட்டும்... கனவுகள் உயரட்டும்... அதற்கு உறுதுணையாக நிற்கும் கரங்கள் என்றும் போற்றப்படட்டும்!"
எமது புல்மோட்டை மண்ணின் எதிர்கால நம்பிக்கைகளாக விளங்கும் மாணவர்களின் கல்வி, விளையாட்டு மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் வளர்ச்சிக்காக தொடர்ச்சியாக உறுதுணையாக இருந்து வரும் இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனம் (Lanka Mineral Sands Limited) நிறுவனத்திற்கு, எமது புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி பாடசாலை சமூகத்தின் சார்பில் இதயப்பூர்வமான நன்றிகளையும் உயரிய பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிப்பாக, மட்டக்களப்பில் நடைபெறவுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் எமது மாணவர்களின் பயணத்தை வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ளும் வகையில், இலவச போக்குவரத்து (பஸ்) வசதியை வழங்கியிருப்பது, மாணவர்களின் திறமையையும் எதிர்காலத்தையும் நம்பி வழங்கப்பட்ட அரிய ஊக்கமாகும்.

இது முதல் தடவையல்ல. கடந்த பல சந்தர்ப்பங்களிலும் எமது பாடசாலை மாணவர்களின் கல்வி, விளையாட்டு மற்றும் ஏனைய பாடசாலை நடவடிக்கைகளுக்காக, இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனம் தாராளமாக போக்குவரத்து வசதிகளை வழங்கி உறுதுணையாக இருந்து வந்துள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தத் தொடர்ச்சியான ஆதரவு, மாணவர்களின் முன்னேற்றத்தின் மீது கூட்டுத்தாபனம் கொண்டுள்ள அக்கறையையும் சமூகப் பொறுப்புணர்வையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
இந்த உயரிய உதவியை வழங்கிய கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் அவர்களுக்கும், முகாமைத்துவத்திற்கும், அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் இதற்காக பங்களித்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் எமது இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கல்வி, விளையாட்டு, சமூக நலன் மற்றும் மதஸ்தலங்களின் மேம்பாட்டிற்காக தொடர்ச்சியாகப் பங்களித்து வரும் இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் சமூகப் பொறுப்புணர்வுமிக்க பணிகள், எமது புல்மோட்டை பிரதேசத்தின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் எதிர்கால வெற்றிப் பயணத்திற்கும் உறுதியான அடித்தளமாக விளங்குகின்றன.

🤲 அல்லாஹ் (ஸுப்ஹானஹு வதஆலா) தங்களின் இந்த உயரிய சமூகச் சேவைகளை மென்மேலும் வளரச் செய்து, தங்களுக்கும் தங்கள் நிறுவனத்திற்கும் பரக்கத்தையும் நற்கூலியையும் அருள்வானாக. ஆமீன்.

🌹 நன்றியுடன்,
புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி சமூகம் 🎓

📢 உயர்தரத்திற்கு புதிதாக இணையவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்2025 (2026) ஆம் ஆண்டு கல்விப் பொதுச் சாதாரண தரப் பரீ...
12/07/2026

📢 உயர்தரத்திற்கு புதிதாக இணையவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

2025 (2026) ஆம் ஆண்டு கல்விப் பொதுச் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை உயர்தர (A/L) வகுப்பிற்கு இணைத்துக்கொள்ளும் நிகழ்வு கீழ்வரும் வகையில் நடைபெறவுள்ளது.

📍 இடம்: தி/தி/புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி
திகதி: 13.07.2026 (திங்கட்கிழமை)
🕢 நேரம்: காலை 7.30 AM

📌 மாணவர்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டியவை:
✅ பாடசாலை விதிமுறைகளுக்கு அமைவாக வருகை தர வேண்டும்.
✅ முழுமையான பாடசாலைச் சீருடையில் வருகை தர வேண்டும்.
✅ முறையான சிகை அலங்காரம் அவசியம். (பின்பற்றாத மாணவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.)
✅ பாதணி (Shoes) அணிந்திருக்க வேண்டும்.
✅ கழுத்துப்பட்டி (Tie) கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

📢 அனைத்து மாணவர்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு தவறாமல் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:
அதிபர்
தி/தி/புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி.

கடந்த 08.07. 2026 வருகை தந்த கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களை வரவேற்பதற்காக தி/தி /புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி  ...
10/07/2026

கடந்த 08.07. 2026 வருகை தந்த கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களை வரவேற்பதற்காக தி/தி /புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி செய்திருந்த ஏற்பாடுகள்.

📢 உயர்தரத்திற்கு புதிதாக இணையவுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்2025 (2026) ஆம் ஆண்டு கல்விப் பொதுச் சாதாரண தர (G.C.E. O/L) ...
05/07/2026

📢 உயர்தரத்திற்கு புதிதாக இணையவுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்
2025 (2026) ஆம் ஆண்டு கல்விப் பொதுச் சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை உயர்தரத்திற்கு இணைப்பதற்கான நேர்முகத் தேர்வு கீழ்வருமாறு நடைபெறவுள்ளது.

📍 இடம்: தி/புல்மோட்டை மத்திய கல்லூரி
திகதி: 06.07.2026
🕘 நேரம்: காலை 9.00 மணி – பிற்பகல் 1.00 மணி
📝 மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள்
1️⃣ பாடசாலை விதிமுறைகளுக்கு ஏற்ப வருகை தர வேண்டும்: 👔 பாடசாலைச் சீருடை
🎀 கழுத்துப் பட்டி (Tie) மற்றும் தொப்பி கட்டாயம்
✂️ ஒழுங்கான சிகை அலங்காரம்
👞 பாதணி அணிந்திருக்க வேண்டும்
2️⃣ கட்டாயம் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்: 📄 பெறுபேறு அறிக்கை (Result Sheet) – Original + 1 Photocopy
🪪 அடையாள அட்டை – Original + 1 Photocopy
📁 ஒரு File

📌 குறிப்பு:
மாணவர்கள் வருகைதரும் போது பெற்றார்களை அழைத்து வருதல் கட்டாயம்

கழுத்துப் பட்டி (Tie) இல்லாத மாணவர்கள், பாடசாலையில் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

📢 மேலதிக தகவல்களுக்கு:
அதிபர்
தி/புல்மோட்டை மத்திய கல்லூரி
📚 அனைத்து மாணவர்களும் குறிப்பிட்ட திகதி மற்றும் நேரத்திற்கு தவறாமல் சமூகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Address

Main Street, Division No:03
Pulmoddai
50567

Telephone

+94776994822

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pulmoddai Muslim Central College -National School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Pulmoddai Muslim Central College -National School:

Shortcuts

Share

Category