09/05/2026
Date:- 09/May/2026
அஸ்ஸலாமு அழைக்கும்.
தலைப்பு:- மாணவர்களுக்கு நன்கொடையாக காணி கையளிப்பு....................................................................................
இன்று அக்/அல்-முனாவ்வரா வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி பாடசாலைக்கு அருகில் உள்ள அல் பத்தாஹ் ஜும்மா பள்ளிவாயல் வளவு தொடர்பாக மிக நீண்ட காலமாக நிழவிய சர்ச்சையானது பாடசாலை SDEC யினருக்கும் பள்ளி வாயல் நிருவாக சபையினருக்கும் இடையில் சுமுகமான கலந்துரையாடல் ஏற்படுத்தப்பட்டது. இக் கலந்துரையாடல் பாடசாலையின் அதிபர் ஜனாப் MI SABURDEEN (MED) அவர்களினால் பள்ளி வாயல் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இன் நிகழ்வின் பிரதம கருத்தாவாகவும் ஆரம்ப முதல் இவ் வளவு தொடர்பான விபரங்களை அறிந்தவர் என்ற வகையிலும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் MS.ABDUL WAZITH அவர்கள் பிரசன்னமாய் இருந்தார். அத்தோடு பள்ளிவாயலின் தலைவர் ST Nizar, செயலாளர் A.RAMEES உட்பட நிருவாக சபை உறுப்பினர்களும்,முன்னாள் பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபையோரும் பொத்துவில் கோட்டக் கல்வி பணிப்பாளர் K KAMZA (DEO) அவர்களும் ஆசிரிய ஆலோசகர் MS.MUBARAK (ISA) அவர்களும் மற்றும் பாடசாலையின் முன்னாள் அதிபர்களான ஜனாப் NK.KAREEM (EX PR), HRM. KALEEL (PR)" அவர்களும் சமுகமளித்திருந்தனர்.
அவர்களோடு பாடசாலையின் SDEC சார்பில் செயலாளர் H.NOWFAR, MA.RAFEEK, MC.ASRAFF, CM.JINAS, ஆகியோரும்., பள்ளிவாசளின் முன்னாள் தலைவர்கள் M.SAINULABDEEN, K.SUBAITHEEN மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு சமூக நோக்கிலும் பாடசாலையின் அபிவிருத்தி குறித்தும்,பள்ளி வாயலளின் எதிர்கால நலன்கள் குறித்தும் மிகசிறந்த தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இத் தீர்மானங்கள் குறித்து பின்னர் அறிவிப்போம்.
என்ற ஏகோபித்த முடிவில் நிபந்தனைகளுடன் நன்கொடையாக பள்ளி வாயல் வளவு பாடசாலை மாணவர்களின் பயன் பாட்டுக்காக இன்று முதல் நன்கொடையாக வழங்கி இருதரப்பினரும் நன்மை பெறக்கூடிய வகையில் கலந்துரையாடல் இனிதே நிறைவு பெற்றது.
மிக நீண்ட காலமாக இருந்து வந்த காணி தொடர்பான வாதப் பிரதிவாதங்களை முடிவுக்கு கொண்டு வந்தது இருதரப்பினருக்கும் நன்மை கிடைக்கக் கூடிய வகையில் மிக சிறந்த கருத்துக்களையும் தீர்மானங்களையும் நிறைவேற்றுவதற்கு உருதுனண புரிந்த Sri Lanka Muslim Congrassகெளரவ பாராளுமன்ற உறுப்பினர் MS.ABDUL WAZITH(DR) அவர்களுக்கும் மற்றும் இன் நிகழ்வில் கலந்து கொண்ட மதிப்பு மிக்க நல் உள்ளங்களுக்கும் இருதரப்பினர்களது வாழ்துதுக்களையும் நன்றி களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
Note:- இது தொடர்பான விபரம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் தரப்படும்.
Date:- 09/May/2026
Assalamu Alaikum.
Subject:- Donation of land to students....................................................................................
Today, for the benefit of the students of Ak/Al-Munawwara Vidyalaya, the long-standing dispute regarding the Al Fattah Jumma Mosque premises near the school was resolved peacefully between the school SDEC and the school management committee. This discussion was organized by the school principal, Mr. MI SABURDEEN (MED), at the school hall.
The Honorable Member of Parliament, MS.ABDUL WAZITH, was present as the main speaker of the event and as someone who is familiar with the details of this premises from the beginning. Also present were the members of the Board of Trustees of the mosque, including the head of the mosque, ST Nizar, secretary A. RAMEES, the former trustees of the mosque, the Director of Education, Pottuvil Division, K KAMZA (DEO), the faculty advisor, MS. MUBARAK (ISA), and the former principals of the school, Mr. NK. KAREEM (EX PR), HRM. KALEEL (PR)" were also present.
With them, the Secretary H.NOWFAR, MA.RAFEEK, MC.ASRAFF, CM.JINAS, on behalf of the school's SDEC, the former presidents of the mosque M.SAINULABDEEN, K.SUBAITHEEN and the dignitaries participated and passed excellent resolutions regarding the development of the school and the future interests of the school gate from a social perspective.
We will announce these resolutions later.
The discussion concluded with a unanimous decision that the school gate will be donated as a donation with conditions for the benefit of the school students from today onwards and both parties will benefit from it.
The Sri Lanka Muslim Congress Honorable Member of Parliament MS.ABDUL WAZITH(DR) who put an end to the long-standing land disputes and made excellent opinions and resolutions that would benefit both parties and the esteemed good souls who attended the event. We are happy to convey our greetings and thanks.
Note:- Details regarding this will be provided later, InshaAllah.