29/01/2022
# #றஹீம் (சேர்)
பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலபகுதியில் இருந்து குறைகளாக காணப்பட்ட பலவிடயங்களையும் தேவைகளாக பேசப்பட்டு வந்த பௌதிக வளம் சார்ந்தவைகளையும் தான் அதிபராக பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஆசானின் உழைப்பும் முயற்சியும் வெற்றி கண்டுள்ளது . Alhamthullilah.
பாடசாலை பழைய மானவர்கள் சார்பாக மனமார்ந்த நண்றிகளை வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறோம்.
● நிலையான நீர் வசதி
●பாடசாலைகான பெயர் பலகை
●சுற்றுமதில் வர்னப்பூச்சு
●நுழைவாயில் கதவு புனர்நிர்மானம்
என தொடர்கிறது
□ கிராம புற பாடசாலைகளில் பெரும்பாலும் கல்விகான ஆதரவும், அனுசரனையுடன் குறைவாகவே காணப்படுகின்றது. இருந்தும் தனது முழு முயற்சியுடன் பழைய மானவர்களை வழிநடாத்தி பாடசாலையின் நிலையான அபிவிருத்திக்கு வித்திடுகின்றார்.
□''ஒரு பாடசாலை திறக்கப்படும் போது ஆயிரம் சிறைச்சாலை மூடப்படுகிறது'' எனும் வாசகத்தை அடிக்கடி எம்மிடம் கூறக் கூடிய ஆசான் கல்வி கற்ககூடிய படித்த சமூகத்தை உருவாக்க வேன்டும் என்ற சிந்தனையில் தனது கடமை நேரத்திற்கு மேலாக பாடசாலையில் செலவிட்டு பௌதீக வளம், மானவர் தேவை என ஒவ்வொரு விடயத்தையும் விரிவாக அறிந்து கொண்டு அதில் கானபடும் குறைகளுக்கான தீர்வுகளை நோக்கி அடி எடுத்து வைக்ககூடிய ஆசான்.
□சிறித்த முகத்துடன் ஸலாம் கூறி, மாணவர்களுடன் எப்போதும் இரக்ககுனத்துடன் நடந்து கொள்ளும் எம் அன்புக்குரிய ஆசானின் ஆரோக்கியத்தில்,பொருளாதாரத்தில் இறைவன் பன்மடங்கு அபிவிருத்தியை கொடுப்பானாக!