NST YOUTH UNION

NST YOUTH UNION

Share

இயலாததை இயலுமாக்குவோம்

Photos from NST YOUTH UNION's post 04/08/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பின் கவனி பாராட்டு கிடந்த தபால் நிலையத்தினை என் எஸ் டி யூத் யூனியன் ஆனது தன் கவனத்தை அதன் பக்கம் செலுத்தி பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இன்று அரச அதிகாரிகளின் பாவனிக்கும் மக்களின் அடிப்படை தேவையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு அந்த கட்டிடத்தினை நிர்மாணித்து நேற்றைய தினம் திறப்பு விழா செய்யப்பட்டது.

அதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பார்வைக்கு

இந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உதவி புரிந்த அனைத்து நல் உள்ளங்களையும் மறந்துவிடக்கூடாது.

சேனபுர ஜும்மா பள்ளிவாயிலின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், சேனபுர பொது நல அமைப்பு, மற்றும் அதனுடன் சார்ந்து பள்ளிவாயிலின் கீழ் இயங்கும் அனைத்து பொது அமைப்புகளுக்கும் மற்றும்

நலன் விரும்பிகளுக்கும் முழுமூச்சாக நின்று அதனுடைய வேலை திட்டங்களை முடித்த இளைஞர் அமைப்புக்கும் இந்த இடத்திலேயே நன்றிகளை தெரிவிக்க மறந்து விடக்கூடாது.

அதேபோன்று இளைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக சில பரிசீல்களை வழங்கிய சேனபுர ஸ்டோர்ஸ் உரிமையாளர் அவர்களுக்கும் மற்றும் சேனபுர ஜும்மா பள்ளிவாயலின் முன்னாள் பொருளாளர் ஏ எல் எம் அஸ்வர் அவர்களுக்கும் இந்த இடத்திலே நான் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கின்றேன்.

அதேபோன்று இந்நிகழ்ச்சியை நடத்தி தந்த எங்கள் ஊரின் அன்பு அறிவிப்பாளர் மௌலவி முஸம்மில் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை அமைப்பின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம் .

அதேபோன்று சுமார் பத்து வருட காலமாக தங்களுடைய கடையை எந்த ஒரு லாபமும் இன்றி ஊரின் தேவைக்காக தபால் நிலையத்தை நடத்திச் செல்ல வழங்கிய சில்லறை கடை முதலாளி பரீட் அவர்களுக்கும் ஊர் மக்கள் சார்பாகவும் பள்ளிவாயல் நிர்வாகத்தின் சார்பாகவும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதேபோன்று ஒற்றுமையுடன் ஒரு முன்னேற்றத்திற்காக செயல்படுவோம் என்று கூறி முடிக்கின்றேன்.

நன்றி ...............….....................................................

Photos from NST YOUTH UNION's post 02/08/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ✅

💯இயலாததை இயலுமாக்குவோம் இளைஞர்களை கொண்டு.💯
இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ்வின் உதவியால் எதிர்வரும் 2023 எட்டாம் மாதம் 3ம் திகதி காலை 11.30 மணிக்கு புதிய
தபால் நிலைய திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஆகவே அனைத்து கிராமவாசிகளையும் அந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு பணிவாய் வேண்டிக் கொள்கின்றோம்.
வெலிகந்த பிரதேச செயலாளர்,
தபால் நிலைய உயர் அதிகாரிகள்;
பொலன்னருவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,
பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர் ஆகவே அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Photos from NST YOUTH UNION's post 28/07/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு..............
இன்று 2023.07.28 ம் திகதி அன்று ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து ஹுசைனியா தக்குவா பள்ளி வாயல் திறந்து வைக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட அனைத்து நல்லுல்லள்ளங்களும் நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Photos from NST YOUTH UNION's post 10/02/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ நீண்ட நாட்களாக கவனிப்பாரற்று இருந்த பஸ் தரிப்பு நிலையம் சேனபுர இளைஞர்கள் ஒன்றிணைந்து அதனை வர்ணமயமாக்கி இருக்கின்றனர்.இதற்கு உதவியாக நின்று செயல்பட்ட அனைத்து சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். மற்றும் இதற்கு முற்றுமுழுதான அனுசரணையை வழங்கிய சேனப்புர பொதுநல அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Photos from NST YOUTH UNION's post 10/02/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ 2023. 02. 10 ம் தேதி அன்று நவ சேனபுர தீவுச்சேனை இளைஞர் ஒன்றியத்தினால் சேன புர மௌலானா தக்வா பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் சிரமதான பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.................
"இளைஞர்களைக் கொண்ட புதிய பாதை
;; வெற்றி பெற கிராமவாசிகள் அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

09/02/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ இன்ஷா அல்லாஹ் நாளை காலை 8 மணி அளவில் நவசேனபுர தீவுச் சேனை இளைஞர் ஒன்றியத்தினால் மாபெரும் சிரமதான பணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே நவ சேனபுர தீவுச்சேனை கிராமத்தில் உள்ள சகல இளைஞர்களும் கலந்து சிறப்பிக்குமாறு பணிவாய் வேண்டிக் கொள்கின்றோம்.....

04/02/2023

NAWA SENAPURA THIVUCHCHENAI YOUTH UNION

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ , வணக்கம்
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற நவ சேனபுர தீவுச்சேனை கிராம மக்களுக்கு NST YouTH uNion சார்பாக எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Want your school to be the top-listed School/college?