18/02/2025
ஜப்பான் மொழி ஓர் எட்டாக்கனி
தேவையில்லா பல மொழிகளையும் கற்கின்றோம். ஆனால் ஒரு வல்லரசு நாட்டின் மொழியை கற்பதில் ஏன் தயக்கம்?
ஜப்பான் சென்று அல்லது ஜப்பானிலிருந்து பலருக்கும் கை நிறைய சம்பாதிக்க ஆசை தான்! ஆனால் என்ன! வாய்ப்பு தன் வாசற்கதவை தட்டும் வரை களத்தில் இறங்காமல் வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பதால் ஜப்பான் மொழி எட்டாக்கனியாகவும் அவர்களின் கனவு நனவாகாமலும் இருக்கின்றது.
இலங்கை அரசாங்க அங்கீகாரத்துடன் ஜப்பான் சென்று, தொடர்ந்து கை நிறைய சம்பாதிக்க முடியும் என்பது எல்லோரும் அறிந்த விடயம். ஒரு வேலை பிடிக்க வில்லை என்றால் இன்னொரு வேலை. வாசல் திறந்தே உள்ளது. விவசாயம் தொடக்கம் விமான நிலைய வேலை வரை உத்தியோக பூர்வமான வேலைகளும் வந்து கொண்டே உள்ளன. ஒரு வேளை அந்த வேலைகள் பிடிக்க வில்லை என்றால், உங்களுக்கு பிடித்த வேலையை விரும்பிய நிறுவனங்களில் நேர்காணலைத் தொடர்ந்து செய்யலாம்.
வயது குறைந்தவர்கள், பல்கலைக்கழகம் செல்வது, JLPT N5 முடித்தவர்கள் ஜப்பானில் மொழிப் பாடசாலை செல்வது, அங்கே பகுதி நேர வேலை செய்து, சம்பாதிப்பது, அங்கேயே குடியுரிமை பெறுவது என்று பல வாய்ப்புகள் உள்ளன.
அந்தவகையில் எமது சிங்கள மாணவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். இப்படி ஜப்பான் மொழிப் பரீட்சையில் சித்தியடைந்தால், ஜப்பான் செல்ல முடியும் என்று கேள்விப் பட்டது தான் தாமதம், விழுந்து விழுந்து படித்து எக்கச்சக்கமான மாணவர்கள் ஜப்பானுக்கும் சென்று விட்டார்கள்.
அது போக, JLPT பரீட்சை நடைபெறும் தினத்தன்று கொழும்பு பரீட்சை மண்டபங்களைப் பார்த்தால், நூற்றுக்குத் தொண்ணூறு வீதமானவர்கள், அவர்கள் தான்.மண்டபங்கள் நிரம்பி வழியும். பராட்டத்தக்க ஓர் விடயம்! அத்தோடு, ஜப்பான் பரீட்சைக்காக அவர்களிடம் அறவிடப்படும் தொகைகளைப் பார்த்தாலும், நாம் அறவிடும் தொகையை விட கூடுதலாக இருந்த போதிலும், அவர்கள் இதன் பெறுமதி உணர்ந்து செயல்படுகின்றனர்.
தமிழ் பேசும் முஸ்லிம் தமிழ் சமூகம், இருபது கோடிகள் கொடுத்து, கூலி வேலைக்காக, பணம் கட்டி, அங்கே சென்று அல்லோலகல்லோலப் படுவது யாராலும் மறுக்க முடியாது.
ஒன்றில் மொழி தெரியாத பிரச்சினை, மற்றையது ஓயாத கடுமையான வேலை. எனவே சிறு தொகையை செலவழித்து அங்கே அழகாக செல்ல வாய்ப்புக்கள் இருக்கும் பட்சத்தில் ஏன் இப்படி உங்களை வருத்திக் கொள்ள வேண்டும்?
சற்று சிந்தியுங்கள்! விழித்தெழுங்கள்!
அண்மையில், ஒரு சகோதரர் இருபது கோடி முகவர் ஒருவருக்கு கொடுத்து, அங்கே சென்று பார்க்கும் போது, மூன்று மாதங்கள் விசாவே அவருக்கு போட்டுள்ளார்கள். பாவம்! மூன்று மாதங்கள் கரைந்தோட, சம்பளமும் இல்லாமல் வெறும் கையோடு நாட்டுக்கு வந்து, இருபது கோடி கடன் எடுத்து சென்ற பணத்தை கட்ட வழி இல்லாமல் மலைத்துப் போய் இருப்பதைப் பார்க்கும் போது வருத்தமாகவும் மனதை நெகிழவும் வைக்கின்றது.
யாரிடமும் எமாறத் தேவை இல்லை. அங்கே சென்று உங்கள் உடம்பை வருத்திக் கொள்ளாமல், உங்கள் மூலையை இங்கே சற்று கசக்கிப் பிழிந்து குறைந்த தொகையில், ஜப்பான் மொழிப் பரீட்சையை செய்தீர்கள் என்றால், வாய்ப்புகள் ஏராளம். அது மட்டுமல்லாமல், இலங்கை அரசால் அங்கீகரிக்கப்படாத போலி நிறுவனங்களும் முளைத்துள்ளன. அவ்வாறு நடைபெறும் ஜப்பான் வகுப்புகளில் கலந்து கொள்வதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள். அப்படி கலந்து கொள்வதில் தப்பேது எனக் கேட்கலாம். காரணம், அவர்கள் பட்டதாரிகள் கிடையாது மற்றையது அவர்கள் கற்றுக் கொடுக்கும் JLPT பரீட்சையில் அவர்கள் சித்தியடைந்தது கிடையாது. மற்றயது, அவர்களுக்கு, கல்விப் பின்னணி இல்லாத காரணத்தினால் சரியாக தமிழோ ஆங்கிலமோ தெரியாது!
என்றாலும், அவர்களின் தந்திரோபாயம் என்ன வென்றால், எமது ஜப்பான் குழுமத்தைப் போல் போலிப் பெயர்கள் தாங்கிய பல குழுமங்களில் ஆட்களை இணைத்து, வகுப்புகளை நடாத்தி வருகின்றனர். இச்செய்திகள் எம்மிடம் வந்த வண்ணம் இருக்கின்றன.
JLPT N4 செய்யாமல், NET 5/4 செய்து விட்டு உங்களை JLPT N5 /N4 க்காக எவ்வாறு தாயார் படுத்த முடியும். எனவே, நீங்கள் இப்படிப்பட்ட வகுப்புகளுக்கு இணையும் போது, தைரியமாக JLPT N4 முடித்துள்ளீர்களா எனக் கேட்டு, ஊர்ஜிதம் செய்து கொள்வதோடு போலி வேஷம் போடும் ஜப்பான் ஆசிரியர்களிடம் சிக்காமல் ஜாக்கிரதையாக இருங்கள். அத்தோடு, பல வருடங்கள் நடத்துவதாகவும் கதை விடுவார்கள். எனவே, ஏலவே முடித்து பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் இலக்கம் அல்லது நன்றாக கற்ற மாணவர்களின் இலக்கங்களை தரச் சொல்லி விசாரித்து விட்டு வகுப்புகளில் இணையுங்கள். அல்லது நீங்கள் விரும்பினால், சுயமாகவும் கற்க முடியும், மன தைரியமும் விடா முயற்சியும் இருந்தால்.
எமது நிறுவனத்தில், JLPT N5, N4, N3, மற்றும் SSW விமான தரை பணியாட்கள் பரீட்சை வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Zoom வாயிலாக வகுப்புகள் நடைபெறுவதோடு, ஏதாவது காரணங்களால் வகுப்புகளுக்கு வர முடிய வில்லை என்றால் உமக்காக உருவாக்கித் தரப்படும் LMS account ல் வீடியோக்களும் பாடக் குறிப்புகளும் எப்போதும் இருக்கும். விசேடமாக, பாடக் குறிப்புகள் பாடம் நடைபெறும் போது எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. அத்தோடு, சந்தேகங்களை 24 மணித்தியாளங்களும் கேட்டு தெளிவைப் பெற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பு: இம் மாத இறுதியில் நடைபெற இருக்கும் ஜப்பான் வகுப்பு 8 ஆவது, பெட்ஸ் ஆகும். இணைய விரும்பின் தொடர்பு கொள்ளவும்.
கற்போம் தலைநிமிர்ந்து நிற்போம்!
日本語教師: アサム
ஜப்பான் மொழி ஆசிரியர்: அஸாம்
(UAE Certified Secondary Teacher/JLPT N4 Certified and pursuing N2/ B.Ed graduate ( Philippines)/TEFL 310 HOUR Advanced diploma (UK))
E-learners Hub
+94769691009