21/02/2026
#2016க்கு பிந்தைய அரச ஆட்சேர்ப்புகள் ஓய்வூதிய உரிமை குறித்த நிர்வாக தெளிவுபடுத்தல் (சுற்றறிக்கை 21/2017(I))
01. இந்த பதிவு எந்த ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டது?
1. இப்பதிவு முழுமையாக அ.நி. சுற்றறிக்கை 21/2017(I) இல் உள்ள உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட விளக்கமாகும்.
02. சுற்றறிக்கை எந்த விடயத்தைப் பற்றி பேசுகிறது?
1. 2016.01.01 ஆம் திகதிக்குப் பின்னர் அரச சேவையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களின் நியமனக் கடிதங்களில், ஓய்வூதிய உரிமை குறித்த குறிப்புகளை நடைமுறை அரசுக் கொள்கைக்கு ஏற்ப திருத்துவது குறித்து இச்சுற்றறிக்கை விளக்குகிறது.
03. ஏன் நியமனக் கடிதம் திருத்தப்பட வேண்டும் என கூறப்படுகிறது?
1. சில நியமனக் கடிதங்களில், பழைய ஓய்வூதிய முறை குறித்த குறிப்புகள் இடம்பெற்றிருக்கலாம்.
2. ஆனால் 2016.01.01க்கு பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு அந்த பழைய முறை பொருந்தாது என சுற்றறிக்கை தெளிவுபடுத்துவதால், அந்த முரண்பாட்டை நீக்குவதற்காக திருத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
04. இது நியமன ரத்து அல்லது சேவை பாதிப்பு தொடர்பானதா?
1. இல்லை. இச்சுற்றறிக்கை நியமனத்தை ரத்து செய்வதோ அல்லது சேவை நிலையை பாதிப்பதோ அல்ல.
2. இது ஓய்வூதிய உரிமை குறித்த பகுதியை மட்டுமே நடைமுறைக்கேற்ப சரிசெய்யும் நிர்வாக நடவடிக்கை.
05. 2016.01.01க்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு மாற்றமா?
1. இல்லை. சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டபடி, 2016.01.01க்கு முன் நியமிக்கப்பட்டவர்களின் ஓய்வூதிய நிலை மாற்றமின்றி தொடரும்.