Sri Pada Naional College of Education

Sri Pada Naional College of Education

Share

Sripada NCoE prospective teachers events

Photos from Sri Pada Naional College of Education's post 19/01/2026

#பத்தனை - #ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் கல்விக்கும் தர
மேன்மைக்குமான #உபபீடாதிபதி திரு அந்தோணி மெத்தீவ் அவர்கள் இன்றுடன் அரச பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.
அவரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று எமது கல்லூரியில் நிகழ்த்தப்பட்டது. அவரது சமூக சேவை மென்மேலும் தொடர பிரார்த்திகிறோம்

19/01/2026

அரச பணியிலிருந்து ஓய்வு பெறும் ஆசிரிய கல்வியியலாளர் திரு அந்தோணி #மெத்தீவ்
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
#பத்தனை - #ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் கல்விக்கும் தர
மேன்மைக்குமான #உபபீடாதிபதி திரு அந்தோணி மெத்தீவ் அவர்கள் இன்றுடன் அரச பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.

தலை சிறந்த #பௌதிகவியல் ஆசிரியராக, அரசினர் ஆசிரியர் கலாசாலை விரிவுரை யாளராக, கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளராக, உப பீடாதிபதியாக கடந்த 38 ஆண்டுகள் உயர்ந்த கல்விப்பணியை ஆற்றிய பெருமை இவரைச் சாரும்.

எளிமையின் இருப்பிடமான இவர் 1966 ஜனவரி 19ஆம் திகதி தலவாக்கலை #ஹொலிவூட் தோட்டத்தில் பிறந்தார்.
இவரின் பெற்றோர் சவரிமுத்து அந்தோணி, சாந்தப்பன் மரிய ஆரோக்கியம் என்போராவர். பத்து சகோதர சகோதரிகளைக் கொண்ட தனது குடும்பத்திலே இவர் இளையவராவார்.

தரம் ஒன்று முதல் ஐந்து வரையான ஆரம்பக்கல்வியை தலவாக்கலை - #ஹொலிரூட் தோட்டப் பாடசாலையிலே பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் ஹட்டன் #ஹைலன்ஸ் கல்லூரியில் கற்றார். 1986ம் ஆண்டு #யாழ் #பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, விஞ்ஞான பீடத்திலே தனது பட்டப்படிப்பினை நிறைவு செய்தார்.
1987 ஆம் ஆண்டு ஆசிரிய சேவைக்குள் காலடி எடுத்து வைத்தார். முதல் ஆசிரியப் பணியை லிந்துல - சரஸ்வதி மகா வித்தியாலயத்திலே ஆரம்பித்ததோடு 04 ஆண்டுகள் அப்பாடசாலையிலே தன்னுடைய கற்பித்தல் செயற்பாட்டினை மேற்கொண்டிருந்தார். அதிபர் திரு மு. முருகேஷ் அவர்களுடைய காலப்பகுதியிலே இப்பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்ததோடு கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களை மாணவர்கள் விரும்பக்கூடிய வகையில் தெளிவுபடக் கற்பித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1991 ஆம் ஆண்டு இவர் #தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இடம் மாற்றம் பெற்று வந்தார். அங்கு உயர்தர மாணவர்களுக்கு பௌதிகவியல் பாடத்தை கற்பிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு இவரை வந்து சேர்ந்தது. அப்பணியை வாஞ்சையுடன் மேற்கொண்டு வந்ததோடு கணிசமான தொகையினர் பல்கலைக்கழகம் செல்லவும் காரணகர்த்தாவாக இருந்துள்ளார் என்பது பலரும் அறிந்திராத உண்மையாகும். அவரிடம் கல்வி பயின்ற பல மாணவர்கள் இன்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மிக உயர்ந்த நிலையோடு பல்வேறு தொழிற்துறைகளில் மிளிர்ந்து வருவது கண்கூடு.

19/01/2026

Sripada National college of education,
Media Unit,
27th batch

Photos from Sri Pada Naional College of Education's post 06/10/2025

2025.10.04 ஆம் திகதி முதன் மொழி தமிழ்ப்பிரிவு 02 ஐ சேர்ந்த ஆசிரியப் பயிலுநர்களால் வெள்ளோட்டம் கவிதைத் தொகுப்பானது #பீடாதிபதி திருமதி. பவானி லோகேஸ்வரன் தலைமையில், விரிவுரையாளர் திரு. தே. பன்னீர் செல்வம் அவர்களின் வழிகாட்டலின் கீழ், கல்லூரி பிரதான மண்டபத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

Photos from Sri Pada Naional College of Education's post 03/07/2025

ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரியப் பயிலுனர்கள் 2025.04.30 ம் திகதி #சமஹன் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற ஸ்ரீபாத மலையை சுத்தம் செய்யும் நிகழ்வில் பங்குபற்றிய தருணம்.

Photos from Sri Pada Naional College of Education's post 03/07/2025

ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த சங்கபிஷேக நிகழ்வு 2025.03.30 ம் திகதி #பீடாதிபதி திருமதி. பவானி லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

Photos from Sri Pada Naional College of Education's post 23/06/2025

ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி 2025.03.27 ம் திகதியன்று #பீடாதிபதி திருமதி பவானி லோகேஸ்வரன் அம்மையாரின் தலைமையில் இடம்பெற்றது.

Photos from Sri Pada Naional College of Education's post 01/04/2025

Educational tour to Trinco, Batticaloa & Polannaruwa
2025 March 06,07,08

Photos from Sri Pada Naional College of Education's post 01/04/2025

ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின்
- 34 வது கல்லூரி தினம் - 2025 -
*****************************************************
பத்தனை - ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் 34 வது கல்லூரி தின நிகழ்வு (05/02/2024) இடம்பெற்றது. கல்லூரியின் பீடாதிபதி திருமதி பவானி லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இக்கல்லூரியின் முன்னாள் பீடாதிபதியும், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஓய்வு நிலை ஆணையாளர் நாயகமுமான திரு S. முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக முன்னாள் பீடாதிபதிகளான திரு . A. சுந்தலிங்கம், திருமதி R. S. K அபேசிங்க மற்றும் முன்னாள் உபபீடாதிபதிகளான திரு சிவராஜேந்திரன் , திருமதி W.M.Y.P.K செனவிரத்ன, திருமதி E. சீர்பாதம், திரு N. சஞ்சீவி ஆகியோர் இணைந்திருந்தனர்.

நிகழ்வின் சிறப்பு அம்சங்களாக ஆசிரிய மாணவர்களின் கண்காட்சி, கலை நிகழ்ச்சி கள், அதிதிகளுக்கு ஞாபகச் சின்னங்கள் வழங்கி கௌரவித்தல் என்பவை இடம் பெற்றன.

Photos from Sri Pada Naional College of Education's post 01/04/2025

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77 வது சுதந்திர தினம் ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் #உபபீடாதிபதிகள் #விரிவுரையாளர்கள் தலைமையில் 2025 ஆம் ஆண்டு 2 ஆம் மாதம் 4 ஆம் திகதி சிறப்பாக இடம்பெற்றது.

Photos from Sri Pada Naional College of Education's post 01/04/2025

'தடம்' சிறுவர் இலக்கியம் வெளியீட்டு விழா

ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு - 02 ஆசிரிய மாணவர்களின் எழுத்தாற்றல்களை வெளிக்கொணர்ந்த 'தடம்'என்ற மகுடம் தாங்கிய சிறுவர் இலக்கிய நூலின் வெளியீட்டு விழா கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பீடாதிபதி திருமதி பவானி லோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விலே நூல் பற்றிய விமர்சன உரையினை ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் திரு P. அருள் மொழிச்செல்வன் அவர்கள் ஆற்றினார்.

சிறுவர்களுக்கான பாடல்கள், கதைகள், நாடகங்கள் என்பவை இதில் உள்ளடங்கி உள்ளன. ஆசிரிய பயிலுநர்களின் கற்பனைத்திறன், புத்தாக்க சிந்தனை, நூல் ஆக்க முயற்சி, ஓவியத்திறன்,கூட்டு முயற்சி
என்வற்றின் அடையாளச் சான்றாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஆசிரிய மாணவர்களை வழிப்படுத்தி, நெறிப்படுத்தி பயன்மிக்க இந்த அறுவடைக்கு பின்புலமாக நின்றவர் விரிவுரையாளர் திரு. D. பன்னீர்ச்செல்வம் ஆவார். இத்தகு முயற்சிகளினூடாக கல்வி யின் புதிய போக்குகளின் நோக்குகள் அடையப்பெறுவதற்கான சமிக்ஞைகள் கைகூடும் என்பது நிதர்சனம்.

Want your school to be the top-listed School/college in Patana?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Sri Pada National College Of Education
Patana
22012