29/10/2025
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பார்ந்த தந்தைமார்களே, பழைய மாணவர்களே!
எமது பாடசாலையில் தொடர்ந்தும் நிலவிவருகின்ற முக்கியமான சில தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கிடுகு விற்பனை ஒன்றை செய்வதற்கு பாடசாலை நிர்வாகம் எதிர்பார்க்கின்றது.
இது தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள எல்லலமுல்ல, அல்கம, அத்தனகல்லை ஆகிய மூன்று ஊர்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் தந்தையர், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தவுள்ளோம்.
எனவே இக்கூட்டத்தில் கலந்து பாடசாலையின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செழுத்துமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
கூட்ட திகதி : 31.10.2025 வெள்ளிக் கிழமை
நேரம் : இஷாத் தொழுகையை தொடர்ந்து
இடம் : எல்லலமுல்ல ஜாமிஉள் ஹைராத் ஜும்மா பள்ளிவாசல்
பாடசாலையின் அடிப்படைத் தேவைகள்.
1. பழைமையடைந்திருக்கும் பிரதாண கட்டிடத்தை நீக்கி அவ்விடத்திற்கு மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான வேலைகளை முன்னெடுத்தல்.
2. ஆண், பெண் பிள்ளைகளுக்கான கழிவறைக் கட்டிடங்களை ஒழுங்கு செய்தல்.
3. வாசிக சாலையை மேம்படுத்துதல்.
4. பாடசாலை கணினிக்கூடத்தை திருத்தி அமைத்தல்.
5. வாயில் முகப்பை அமைத்தல்.
4. 2024 ஆம் ஆண்டின் பரிசளிப்பு விழா
5. 2025 ஆம் ஆண்டின் இல்ல விளையாட்டுப் போட்டி
கட்டாயம் அனைவரும் சமூகம் தரவும்.
இப்படிக்கு அதிபர்