Al fahriya OBA 2022/23

Al fahriya  OBA  2022/23

Share

Al Fahriya Central College
School Development committee Thotawatta, Panadura

24/12/2022
14/12/2022

களுத்துறை மாவட்ட பாடசாலை கால்ப்பந்தாட்ட (School federation ) சம்மேலனத்தினால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டியில் ALFahriya தேசிய பாடசாலையின் 16 வயதுக்கு கீழ் பட்ட கால்பந்தாட்ட அணி மாவட்ட champion ஆக தெரிவு செய்யப்பட்டது.
களுத்துறை முஸ்லிம் மகாவித்தியாலய அணியுடன் இறுதிப் போட்டியில் மோதிய Al Fahriya தேசிய பாடசாலையின் 16 வயதுக்கு கீழ் பட்ட அணி 2 : 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று champion பட்டத்தை பெற்றுக் கொண்டது.

இந்த வருடம் எமது Al Fahriya வின் கால்ப்பந்தாட்ட அணிகளான 20, 18 மற்றும் 16 வயதுக்கு கீழ்ப்பட்ட அணிகள் மூன்றுமே கழுத்துறை மாவட்ட champion ஆக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிகளுக்கு ஆரம்பம் முதல் ஒத்துழைப்பு வழங்கிய அதிபர் அவர்களுக்கும், மாணவர்களை நெறிப்படுத்திய விளையாட்டு ஆசிரியர்கள், மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கும், இவர்களுக்கு உதவியாக இருந்த OBA , SDC , பெற்றோர்கள், பழைய மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

***** *******

Photos from Al fahriya  OBA  2022/23's post 29/11/2022

எமது அல்பஹ்ரியா தேசிய பாடசாலையில் GCE O/L (2022) பரீட்சை எழுதவுள்ள ஆண் மாணவர்களை இலக்காக கொண்டு நடைபெறவுள்ள 'இரவு நேர சுயகற்றல் வகுப்புக்களை' ஆரம்பித்து வைக்கும் விசேட நிகழ்வு 28/11/2022 (இன்று) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் தலைமையில் நடைபெற்றது.

குறித்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் *"இன்றைய காலத்தில் கற்றலுக்கான சவால்கள், கற்றலின் முக்கியத்துவம் மற்றும் சிறந்த கற்றலுக்கான நுட்பங்கள் என்ன?"* எனும் தலைப்பில் நிகழ்வின் விசேட பேச்சாளராக கலந்து கொண்ட Hope Lanka நிறுவனத்தின் தலைவர் *S.H.M Noufel Sir* அவர்களால் விசேட உரை நிகழ்த்தப்பட்டது.

நடைபெறவுள்ள 'சுய கற்றல் வகுப்புக்களின்' ஒழுங்குகள் குறித்து பழைய மாணவ சங்க செயலாளர் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார், இறுதியாக பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளரால் நன்றி உரை நிகழ்த்தப்பட்டது.

*OBA-Al-Fahriya National School*

24/11/2022

அல்பஹ்ரியா தேசிய பாடசாலையின் சிங்கள மொழிப்பிரிவிற்கு பழைய மாணவர் சங்கத்தினரால் white board Marker Pen அன்பளிப்புச் செய்யப்பட்டது.

Photos from Al fahriya  OBA  2022/23's post 29/10/2022

பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டியில் மாவட்ட champion பட்டத்தை வென்ற Al fahriya தேசிய பாடசாலையின், 20 மற்றும் 18 வயதுக்கு கீழ் பட்ட அணிகள் மாகாணமட்ட போட்டிகளில் விளையாடி முதல் சுற்று, இரண்டாம் சுற்று ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று இன்றைய தினம் கால் இறுதிப் போட்டியில் விளையாடினார்கள்.
கால் இறுதிப் போட்டியில் எமது இரு அணிகளும் வெற்றி வாய்ப்பை தவறவிட்டாலும் மாகாண மட்டப் போட்டிகளின் கால் இறுதிவரை வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இந்த வெற்றி Al Fahriya வின் கால்பந்தாட்ட வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகும் ஆகவே இந்த இரு அணிகளுக்கும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியோரின் நல்வாழ்த்துக்கள்.

அதேபோன்று இந்த போட்டிகளுக்கு மாணவர்களை தயாராக்கி அழைத்துச் செல்வதற்கு பொருளாலும் உடலாலும் உதவி வழங்கிய O/L Batch அங்கத்தவர்கள், இயக்கங்கள்,நலன் விரும்பிகள்,பெற்றோர்கள் அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

20/10/2022

Al fahriya தேசிய பாடசாலையின் 1997 O/L batch இனால் அப்பாடசாலையின் பிரதான மண்டபத்தினது இலத்திரனியல் திருத்த வேலைகளுக்கென ரூ 35000 பாடசாலை அதிபரிடம் அன்பளிப்புகள் செய்யப்பட்டது.

Photos from Al fahriya  OBA  2022/23's post 13/10/2022

Al Fahriya தேசிய பாடசாலையின் மாகாண மட்ட உதைபந்தாட்ட போட்டிகளுக்குக்கு, 2005 O/L BATCH உறுப்பினர்களால் 22,500/= பணஉதவி வழங்கப்பட்டது..

உதவி புரிந்த அனைவருக்கும் அதிபர்,ஆசிரியர்கள்,Oba, Sdc சார்பாக நன்றிகள் ஜஸ்ஸாகல்லாஹ்.....

Photos from Al fahriya  OBA  2022/23's post 02/10/2022

Champion கிண்ணத்தை வென்றது Fahriyans
***********************************************

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மோதர அரபாத் முஸ்லிம் மகா வித்யாலயத்தில் ஏற்பாடு செய்திருந்த பாடசாலை அணிகளுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட சுற்று போட்டி(1.10.2022) நேற்று நடைபெற்றது.
17 மற்றும் 15 வயதுக்குட்பட்ட இரு பிரிவுகளில் நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியில்
Modara Arafath M Maha Vidyalayam
Thotawatta Al Fahriya National School
Ambalanduwa Ilma Muslim Vidyalayam
Eluvila Alaviyya M Maha Vidyalayam

ஆகிய அணிகள்பங்குபற்றியது.
அல் பஹ்ரியா(Al Fahriya) தேசிய பாடசாலையின் இரு அணிகளும் (under 17, 15) வெற்றி பெற்று champion கிண்ணத்தை
வென்றது.

Photos from Al fahriya  OBA  2022/23's post 09/09/2022
Want your school to be the top-listed School/college in Panadura?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Panadura