Ruqaiyah Academy

Ruqaiyah Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ruqaiyah Academy, Education, Beach Road, Palamunai.

20/03/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. அல்ஹம்துலில்லாஹ். தானா அல் புசைரி ஜும்ஆப் பள்ளிவாயலின் வழிகாட்டலில் எமது  று...
09/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.

அல்ஹம்துலில்லாஹ்.

தானா அல் புசைரி ஜும்ஆப் பள்ளிவாயலின் வழிகாட்டலில் எமது றுகையா அகடமியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான மாபெரும் இஜ்திமா நேற்று (2026/03/08 ஞாயிற்றுக்கிழமை) அல்லாஹ்வின் உதவியால் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

அல்ஹம்துலில்லாஹ்!

இவ் இஜ்திமாவில்

1. இஸ்லாமிய குடும்ப கட்டமைப்பில் பெண்ணின் வகிபாகம் - எனும் தலைப்பில் நாடறிந்த பிரபல தாயி அஷ்ஷெய்க் SHM. இஸ்மாயில் ஸலபி அவர்களும்

2. ஜனாஸா வின் சட்டங்களும் குளிப்பாட்டும் முறையும் (செய்முறை விளக்கத்துடன்) - எனும் தலைப்பில் றுகையா அகடமியின் சிரேஷ்ட விரிவுரையாளரும் பணிப்பாளர் சபை உறுப்பினருமான மௌலவியா MHS. சபா ஸஹ்விய்யா அவர்களும் சிறப்புரையாற்றினர்.

இவ் இஜ்திமா சிறப்பாக நடைபெற உதவிய வல்ல அல்லாஹ்வுக்கு முதலில் நன்றி கூறியவர்களாக

மேலும் சொற்பொழிவு வழங்கிய வளவாளர்கள், கலந்துகொண்ட தாய்மார்கள், சகோதரிகள், மாணவிகள், ஒத்துழைப்பு வழங்கிய அகடமி யின் சபை உறுப்பினர்கள், தானா புசைரி ஜும்ஆப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையினர், அறிவிப்புச் செய்த அனைத்து பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையினர், ஜனாஸா கபனிடுவதற்கான பொருட்களை தந்துதவிய சமூக சேவையாளர் IPM. ஜிப்ரி (மரண உபகார நிதியம்) அவர்களுக்கும் நேரலை வழங்கிய சகோதரர் மற்றும் போக்குவரத்து சேவை வழங்கிய பேருந்து உரிமையாளர் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

றுகையா அகடமி
பாலமுனை.

அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுவோம், إن شاء الله
06/03/2026

அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுவோம்,
إن شاء الله

அஸ்ஸலாமு அலைக்கும்அனைத்துப் பெண்கள் மற்றும் தாய்மார்களை இவ் இஜ்திமாவில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்ற...
03/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும்

அனைத்துப் பெண்கள் மற்றும் தாய்மார்களை இவ் இஜ்திமாவில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

பணிப்பாளர் சபை
றுகையா அகடமி

அஸ்ஸலாமு அலைக்கும்.அல்ஹம்துலில்லாஹ்!எமது அகடமியில் ICT மற்றும் அறபு இலக்கியம் ஆகிய பாடங்களை திறம்படக்கற்பிக்கும் ஆசிரியை...
12/02/2026

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்ஹம்துலில்லாஹ்!

எமது அகடமியில் ICT மற்றும் அறபு இலக்கியம் ஆகிய பாடங்களை திறம்படக்கற்பிக்கும் ஆசிரியை மௌலவியா AR. சித்தீக்கா (மன்பஇய்யா) அவர்களின் கல்விப்பயணத்தின் ஒரு மைல்கல்லாக தரம் 13 மாணவர்கள் அறபு மொழிப்பாடத்தை இலகுவாக கற்றுக்கொள்ளும் விதமாக "منهل الطلبة"(மன்ஹலுத்தலபா) எனும் புத்தகம் இன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

(கடந்த வருடம் எமது அகடமியில் அறபு இலக்கியப்பாடம் எடுத்து O/L எழுதிய 6 மாணவிகளும் அதில் A சித்தி பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்).

அகடமி சார்பாக நாமும் வாழ்த்துவதோடு மேலும் இப்பயணத்தில் பல படிகள் தாண்டி உயர்வடைய பிரார்திக்கின்றோம்..!!

بارك الله فيك ورفع الله قدرك

باسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட...
04/02/2026

باسم الله الرحمن الرحيم

السلام عليكم ورحمة الله وبركاته

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு றுகையா அகடமியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய சுதந்திர தின கொண்டாட்டம் கல்லூரி வளாகத்தில் அகடமியின் நிறைவேற்று பணிப்பாளர் UL.Ali Ashraf (BA,PGDE,MEd) அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !!

இந்நிகழ்வுக்கு MHM. Hassan Rushdhi (LLM. Attorney at law) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில்
அகடமி மாணவர்களினால் கலை நிகழ்வுகளும் அதிதிகளினால் ஆக்கபூர்வமான உரைகளும் நிகழ்த்தப்பட்டதுடன் பிரதம அதிதியினால் மரம் நடுகையும் இடம் பெற்றது.

எல்லாம் வல்ல ரஹ்மான் இந்நிகழ்வுக்கு வருகை தந்த மற்றும் இந்நிகழ்வை நடத்தி முடிப்பதற்கு அயராது உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் அருள்புரிவானாக ஆமீன்!!

جزاكم الله خيرا

சுந்தர நாட்டை நேசிப்போம்!!!சுதந்திர காற்றை சுவாசிப்போம்!!!...எழுந்திடு.... Sri Lanka..!!!!
04/02/2026

சுந்தர நாட்டை நேசிப்போம்!!!
சுதந்திர காற்றை சுவாசிப்போம்!!!...

எழுந்திடு.... Sri Lanka..!!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.அல்ஹம்துலில்லாஹ்!!எமது றுகையா அகடமியின் மற்றுமொரு மாணவியான  முஹம்மத் ஜிப்னாஸ் பாத்திமா ...
01/02/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.

அல்ஹம்துலில்லாஹ்!!

எமது றுகையா அகடமியின் மற்றுமொரு மாணவியான முஹம்மத் ஜிப்னாஸ் பாத்திமா சீபா
அவர்கள் 2026/1/29 ஆம் திகதி வியாழக்கிழமை அல் குர்ஆனை மனனம் செய்து முடித்த 14வது மாணவியாக தனது பெயரை பதிவு செய்தார். அல்ஹம்துலில்லாஹ்.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் இரண்டாவது தொகுதி மாணவியாக இணைந்து கொண்டார்.

மேலும் இம்மாணவி விரைவாக தவ்றை முடித்து ஹாபிலாவாக வெளியாகுவதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக எனப் பிரார்த்தித்துக்கொள்கிறோம்.

அத்துடன் இம்மாணவி இவ்வருடம் February மாதம் O/L பரீட்சை எழுத இருப்பதுடன்
வல்ல ரஹ்மான் இம் மாணவிக்கு சகல பாடங்களிலும் சிறப்பு சித்தி பெற அருள்புரியவேண்டும் எனவும் பிரார்திக்கின்றோம்

மேலும் இம்மாணவிக்கு குர்ஆனிய கல்வி புகட்டிய எமது அகடமியின் அதிபர், முஅல்லிமாக்களுக்கும் எமது அகடமியில் பிரத்தியேக வகுப்புகள் நடாத்திய பாடசாலைப் பாட ஆசிரியர்கள், ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

جزاكم الله خيرا

நிருவாகம்.

31/01/2026

எமது அகடமியில் சுமார் ஆறு வருடங்கள் கல்வி பயின்று, எதிர்வரும் G.C.E (O/L) பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவிகளுக்கான வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு நேற்று மிக விமர்சையாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

*இந்நிகழ்வின் சிறப்பம்சங்கள்:*

🔸நீண்ட காலப் பயணத்தின் பலனாக, இம் மாணவிகளில் இரண்டு மாணவிகள் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து (ஹாபிழாக்களாக) சாதனை படைத்திருப்பது அகடமிக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகும்.

🔸இம் மாணவிகள் ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளும், அகடமியின் பயன்பாட்டிற்காக ஒரு போடியமும் (Podium) வழங்கிச் சிறப்பித்தனர்.

🔸அகடமியினாலும், கனிஷ்ட (Junior) மாணவிகளாலும் விடுகைவருட மாணவிகளுக்கு நினைவுச் சின்னங்களும் அன்பளிப்புகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அகடமியின் நிருவாக சபை உறுப்பினர்கள், பாடசாலைப் பாட ஆசிரியர்கள், முஅல்லிமாக்கள் மற்றும் ஏனைய மாணவிகள் என பலரும் கலந்துகொண்டு மாணவிகளின் எதிர்கால வெற்றி குறித்து வாழ்த்திப் பிரார்த்தித்தனர்.

வல்ல ரஹ்மான், அல்குர்ஆனைத் தமது இதயங்களில் சுமந்துள்ள இம்மாணவிகளுக்கு சகல பாக்கியங்களையும் ஈருலகிலும் வழங்கியருள்வானாக! மேலும், அவர்கள் எதிர்நோக்கவிருக்கும் பொதுப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் சிறந்த சித்தி (Distinction) பெற அல்லாஹ் அருள்புரிவானாக...

ஆமீன்!

அஸ்ஸலாமு அலைக்கும் .2026 ஆறாம் கல்வி ஆண்டுக்கான புதிய  மாணவிகளை  அகடமியில்  உள்ளீர்ப்புச் செய்து வரவேற்கும் நிகழ்வு  அதி...
29/09/2025

அஸ்ஸலாமு அலைக்கும் .

2026 ஆறாம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவிகளை அகடமியில் உள்ளீர்ப்புச் செய்து வரவேற்கும் நிகழ்வு அதிபர் அஷ்ஷைய்க்கா எம். எச். சித்தி மர்வா (ஸஹ்விய்யா) தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் தவிசாளர் அஷ்ஷைய்க் ஐ.எல்.எம். ஹாசிம் சூரி மதனி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

மேலும் அகடமின் நிர்வாக உறுப்பினர்கள் ஆசிரிய, ஆசிரியைகள், புதிதாக இணைந்து கொண்ட மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள், அகடமியின் மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Address

Beach Road
Palamunai
32354

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruqaiyah Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category