Al-Isfar Academy

Al-Isfar Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Isfar Academy, Education, Hajiyar Road Meeravodai/04, Oddamavadi.

*அஸ்ஸலாமு அலைக்கும்*இன்றைய தினம்(17/06/2026-புதன் கிழமை) இஸ்லாமிய புது வருடத்தை முன்னிட்டு எமது அகடமியின் அல் குர்ஆன் மத...
17/06/2026

*அஸ்ஸலாமு அலைக்கும்*

இன்றைய தினம்(17/06/2026-புதன் கிழமை) இஸ்லாமிய புது வருடத்தை முன்னிட்டு எமது அகடமியின் அல் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

இதில் மாணவர்கள் இஸ்லாமிய மாதங்களை ஞாபகப்படுத்திக் கொண்டதுடன் அடுத்தவர்களுக்கு நலவுகளை செய்வோம் என்ற தலைப்பில் நல்ல பழக்க வழக்கங்களை தமது நண்பர்களோடு பகிர்ந்து கொண்டனர்.(அல் ஹம்துலில்லாஹ்)

அத்தோடு மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இனிப்புப் பண்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இப்படியான நிகழ்வுகளின் மூலம் எமது சிறார்களுக்கு இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டை ஞாபகப்படுத்தவும் அதன் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளச் செய்யவும் ஏதுவாக அமையும்.(இன்ஷா அல்லாஹ்)




*அஸ்ஸலாமு அலைக்கும்...*இன்றைய தினம் (04/06/2026 வியாழன்) எமது ஹிப்ழு வகுப்பு மாணவர்களுக்கான "அல் குர்ஆன் மனனத்துடன் தொடர...
04/06/2026

*அஸ்ஸலாமு அலைக்கும்...*

இன்றைய தினம் (04/06/2026 வியாழன்) எமது ஹிப்ழு வகுப்பு மாணவர்களுக்கான "அல் குர்ஆன் மனனத்துடன் தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு" இடம்பெற்றது...

இந்த நிகழ்வில் கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாயா அரபுக் கல்லூரியின் ஹிப்ழு பகுதி பொறுப்பாளர் அல்-ஹாபிழ்,மௌலவி SM.அர்ஷாத்(பஹ்ஜி) அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் ஹிப்ழு முன்னேற்றத்திற்கான வழிகாட்டல்களையும் ஊக்குவிப்புகளையும் வழங்கியிருந்தார்.

மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் இவ்வாறான நிகழ்வுகள் எமது அகடமியில் தொடர்ந்து இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

💫இஸ்லாமிய வழிகாட்டல் பயிற்சி நெறி-2026✨இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை(O/L) எழுதிய மாணவ மாணவிகளுக்கான ஒரு மாத கால இஸ்லா...
03/04/2026

💫இஸ்லாமிய வழிகாட்டல் பயிற்சி நெறி-2026

✨இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை(O/L) எழுதிய மாணவ மாணவிகளுக்கான ஒரு மாத கால இஸ்லாமிய வழிகாட்டல் பயிற்சி நெறி ஒன்றை மீராவோடையில் இயங்கி வரும் அல் இஸ்பார் அகடமி ஏற்பாடு செய்துள்ளது.

👉இப் பயிற்சி நெறியில் மாணவர்களுக்கு....

1)இஸ்லாமிய ஒழுக்கவியல் சிந்தனைகள்
2)இஸ்லாமிய சட்ட விளக்கங்கள்(பிக்ஹ்)
3)அல் குர்ஆனின் இருபதுக்கு மேற்பட்ட முக்கிய சூறாக்கள் மனனம்
4)ஆன்மீக வழிகாட்டல்கள்

என்பன கற்பிக்கப்படுவதோடு பயிற்சி நெறி முடிவில் பெறுமதியான சான்றிதழும் வழங்கப்படும்.

இணைந்து கொள்ள விரும்புவோர் "077 67 23 676" என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு உங்கள் சுயவிபரத்தை அனுப்பி வைப்பதன் மூலமும் அல்லது எமது அகடமியில் நேரடியாகவோ வந்து பதிவு செய்து கொள்ள முடியும்.

ஆண்/பெண் இருபாலருக்கும் தனித்தனி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பு:- முதற்கட்டமாக 30 க்கு உட்பட்ட எண்ணிக்கையிலேயே மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதால் பதிவுகளுக்கு முந்துங்கள்.

அனைவரது வாழ்விலும் இறைவனின் பரக்கத்தும் அருளும் நிறைந்து வாழ்வின் அத்தனை லட்சியங்களும் நிறைவேற இவ் இனிய நாளில் வாழ்த்திப...
20/03/2026

அனைவரது வாழ்விலும் இறைவனின் பரக்கத்தும் அருளும் நிறைந்து வாழ்வின் அத்தனை லட்சியங்களும் நிறைவேற இவ் இனிய நாளில் வாழ்த்திப் பிரார்த்திக்கிறோம்....❤️

Al-Isfar Academy

 18/03/2026(புதன்கிழமை) அன்று எமது அகடமியின் ஹிப்ழு வகுப்பு மாணவர்களுக்கான தஜ்வீத் பாட எழுத்துப் பரீட்சை இடம்பெற்ற போது....
19/03/2026



18/03/2026(புதன்கிழமை) அன்று எமது அகடமியின் ஹிப்ழு வகுப்பு மாணவர்களுக்கான தஜ்வீத் பாட எழுத்துப் பரீட்சை இடம்பெற்ற போது....

Al-Isfar Academy

 #தொழுகை செயன்முறை ரீதியான பயிற்சி வழங்கல்இன்றைய தினம்(12/03/2026-வியாழன்) எமது ஹிப்ழு வகுப்பு மாணவர்களுக்கான தொழுகை செய...
13/03/2026

#தொழுகை
செயன்முறை ரீதியான பயிற்சி வழங்கல்

இன்றைய தினம்(12/03/2026-வியாழன்) எமது ஹிப்ழு வகுப்பு மாணவர்களுக்கான தொழுகை செயன்முறை பயிற்சி இடம்பெற்றது.

இதில்....
1)தொழுகையின் முக்கியத்துவம்
2)தொழுகையின் பர்ளுகள்
3) தொழுகையின் சுன்னத்துகள்
4)தொழுகையை முறிக்கக் கூடிய செயல்கள்
பற்றி கற்பிக்கப்பட்டதோடு...

தொழும் முறையும் செயன்முறை ரீதியாக பயிற்றுவிக்கப்பட்டது.

ஒரு முஸ்லிமுக்கும் காபிருக்கும் இடையிலான வித்தியாசம் தொழுகையை விடுவதில் உள்ளது என்பது நபி (ஸல்) அவர்களின் மிகப்பெரும் எச்சரிக்கையாகும்.

எனவே எமது பிள்ளைகளை உரிய முறையில் அதற்காக பயிற்றுவிப்பது எம்மீதுள்ள கடமையாகும்.

இவ்வாறான பயிற்றுவிப்புகள் மூலம் மாணவர்களின் ஆன்மீக மேம்பாட்டை வளர்ப்பதில் எமது அகடமி எப்போதும் முன்னின்று செயற்படும். (இன்ஷா அல்லாஹ்)

Al-Isfar Academy

 #தர்பிய்யா_நிகழ்வு...இன்றைய தினம்(11/03/2026-புதன்)ஹிப்ழு வகுப்பு மாணவர்களுக்கான தர்பிய்யா நிகழ்வு இடம்பெற்றது....கல்வி...
12/03/2026

#தர்பிய்யா_நிகழ்வு...

இன்றைய தினம்(11/03/2026-புதன்)ஹிப்ழு வகுப்பு மாணவர்களுக்கான தர்பிய்யா நிகழ்வு இடம்பெற்றது....

கல்வியின் சிறப்பு எனும் தொனிப்பொருளில் எமது அகடமியின் செயற்குழு உறுப்பினர் அல்-ஹாபிழ் MJM.அர்ஷாத்(மீஷானி)BA.R அவர்கள் மூலம் அழகிய தர்பிய்யா வழங்கப்பட்டது.

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த சமூகமே கல்வியில் உயரும்...
கல்வியில் உயர்ந்த சமூகமே உன்னத சமூகமாக மாறும்...

Al-Isfar Academy

 #வுழூ செய்முறை பயிற்சி வகுப்புஅல் ஹம்துலில்லாஹ் இன்றைய தினம் எமது அகடமியின் ஹிப்ழு வகுப்பு மாணவர்களுக்கான  #வுழூ செய்வத...
10/03/2026

#வுழூ செய்முறை பயிற்சி வகுப்பு

அல் ஹம்துலில்லாஹ் இன்றைய தினம் எமது அகடமியின் ஹிப்ழு வகுப்பு மாணவர்களுக்கான #வுழூ செய்வது தொடர்பான செயன்முறை பயிற்சி நெறி இடம்பெற்றது...

இதில்...
1)வுழூவின் சிறப்பு மற்றும் முக்கியத்துவம்
2)வுழூ செய்யும் விதம்
3)வுழூவின் பர்ளுகள்
4)வுழூவின் சுன்னத்துக்கள்
5)வுழூவை முறிக்கும் காரியங்கள்

என்பன கற்பிக்கப்பட்டதோடு அவற்றை செய்முறை ரீதியாக மாணவர்களை செய்வித்து பயிற்றுவிக்கப்பட்டது...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வுழூ தொழுகையின் திறவுகோல் தொழுகை சுவனத்தின் திறவுகோல் (திர்மிதீ)

அந்த வகையில் மாணவர்களின் ஆன்மிக மேம்பாடு அவசியம் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் அதனை எமது அகடமி தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் இன்ஷா அல்லாஹ்...

Al-Isfar Academy

இன்றைய தினம்(01/03/2026-ஞாயிறு) எமது கல்வி நிலையத்தில் டியூஷன் வகுப்பு மாணவர்களுக்கான கணிப்பீட்டுப் பரீட்சை இடம்பெற்றது....
01/03/2026

இன்றைய தினம்(01/03/2026-ஞாயிறு) எமது கல்வி நிலையத்தில் டியூஷன் வகுப்பு மாணவர்களுக்கான கணிப்பீட்டுப் பரீட்சை இடம்பெற்றது.(அல் ஹம்துலில்லாஹ்)

கணிப்பீட்டு பரீட்சை என்பது மாணவர்களின் தயார்நிலையை சோதிக்கும் கண்ணாடி போன்றது — அது சரியான பாதையில் அவர்களை கற்றுக் கொள்ள உதவுகிறது.

எமது அகடமியின் கற்றல் செயற்பாடுகளில் மாணவர்களின் முன்னேற்றமே முதன்மை நோக்காகும்.

இவ்வடிப்படையில் தொடர்ந்தும் இப்படியான பரீட்சைகள் மற்றும் புறக் கீர்த்திய செயற்பாடுகள் மூலம் மாணவர்களின் திறனை அதிகரிக்கச் செய்வதே எமது நோக்காகும்.

Al-Isfar Academy

Address

Hajiyar Road Meeravodai/04
Oddamavadi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Isfar Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category