கல்வி அபிவிருத்தி குழு - பதுரியா,மாஞ்சோலை

  • Home
  • கல்வி அபிவிருத்தி குழு - பதுரியா,மாஞ்சோலை

கல்வி அபிவிருத்தி குழு - பதுரியா,மாஞ்சோலை சமூகத்திற்கு தேவையான ஒழுக்கமுள்ள நற்பிரஜை

இன்று வெளியாகிய கா.பொ.த சாதாரண தரப்  பரிட்சை 2025(2026) பெறுபேறுகளின் அடிப்படையில் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளை...
19/06/2026

இன்று வெளியாகிய கா.பொ.த சாதாரண தரப் பரிட்சை 2025(2026) பெறுபேறுகளின் அடிப்படையில் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்டு சித்தியடைந்த மாணவர்கள் , அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அவர்களை வழிப்படுத்திய பெற்றோர்கள் அனைவருக்கும் எமது பதுரியா மாஞ்சோலை கல்வி அபிவிருத்திக் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Good Luck On Your Exams...📖📝G.C.E O/L Exam
16/03/2025

Good Luck On Your Exams...📖📝
G.C.E O/L Exam

தற்போது வெளியாகியுள்ள 2024ம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு எமது பிரதேச இரண்டு பாடசாலைகளான மட்/மாஞ்சோலை அல்-ஹ...
24/01/2025

தற்போது வெளியாகியுள்ள 2024ம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு எமது பிரதேச இரண்டு பாடசாலைகளான மட்/மாஞ்சோலை அல்-ஹிரா வித்தியாலயம் மற்றும் மட்/பதுரியா நகர் அல்-மினா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இருந்து பரீட்சைக்கு தோற்றி வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ள எமது மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்ளுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் அவர்களை வழிப்படுத்திய பாடசாலைகளினது அதிபர்களுக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களினதும் எதிர்கால வாழ்வு கற்றல் மற்றும் ஆண்மீக ரீதியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று எமது கல்வி அபிவிருத்தி குழு - பதுரியா,மாஞ்சோலை சார்பாக பிராத்தித்துக்கொள்கின்றோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹுஎமது பதுரியா மாஞ்சோலை கல்வி அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவ...
15/01/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

எமது பதுரியா மாஞ்சோலை கல்வி அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாகவும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வானது 2025/01/13ம் திகதி திங்கட்கிழமை பி.ப 04:00 மணிக்கு மாஞ்சோலை ஹிழுரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

இதில் எமது பதுரியா மாஞ்சோலை கிராமத்தில் இருந்து 2023ம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறப்புச்சித்தி (5A இற்கு மேல்) பெற்ற மாணவர்கள் 10 பேர் மற்றும் 2023ம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் மற்றும் கல்வியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் 08 பேர் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கோ.ப.மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதேச செயலாளர் ஜனாப் A.தாஹிர் (SLAS) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதிகளாக ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலக கோட்டக் கல்வி அதிகாரி ஜனாப் AMM.தாஹிர் (SLEAS) அவர்களும், கோ.ப.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜனாப் AM.நௌபர் JP அவர்களும், மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் ஜனாப் MB. நபீர் Sir அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் விஷேட அதிதிகளாக கோ.ப.மேற்கு பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரும், மீராவோடை உம்முல் சுலைம் மகளீர் அரபுக் கல்லூரியின் அதிபர் ஜனாப் AL. பீர்முகம்மத் (காஸிமி,MA) அவர்களும், மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலய அதிபர் ஜனாப் MAC.ஜிப்ரிகரீம் Sir அவர்களும், பதுரியா நகர் அல் மினா வித்தியாலய அதிபர் ஜனாப் MI.உபைத்துல்லாஹ் (SLPS) அவர்களும் கலந்து சிறப்பித்தனர் மேலும் இந் நிகழ்விற்கு எமது அதிதிகளாக எமது கிராமத்தினுடைய சமுர்த்தி உத்தியோகத்தர் ஜனாப் ALM. நியாஸ் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் F. சர்ஜுன் ,பிரதேச பாடசாலைகளினது ஆசிரியர்கள்,பிரதேச பள்ளிவாயல்களினது தலைவர்கள், நிருவாகிகள் எமது கிராம பொது அமைப்புக்களது தலைவர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள்,கல்வி அபிவிருத்திக் குழுவினர் என பலரும் கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்தனர்.

இந் நிகழ்வினை நடாத்த உதவிய அணுசரனையாளர்களாக.

1) மாஞ்சோலை சபீர் ஸ்டோர்ஸ் உரிமையாளர் SM.சபீர்.
2)பதுரியா ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினர்.
3) மாஞ்சோலை ஹிழுரிய்யா ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினர்.
4) வாங்க நல்லது பன்னலாம் - குவைத் வாழ் உறவுகள்
5)A.றிபாஸ்.
6)MNM.சாஜஹான்.
7)NM.றபாய்தீன்.

ஆகியோருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

நிர்வாகம்,
கல்வி அபிவிருத்திக் குழு,
பதுரியா-மாஞ்சோலை.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹுஎமது பதுரியா மாஞ்சோலை கல்வி அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவ...
12/01/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

எமது பதுரியா மாஞ்சோலை கல்வி அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாகவும் 2023ம் ஆண்டு க.பொ.த (சா/த) சிறப்புச்சித்தி பெற்ற மாணவர்கள் மற்றும் க.பொ.த (உ/த) சித்தியடைந்து பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு

காலம் :- 2025/01/13(திங்கட்கிழமை)
நேரம் :- பி.ப 04:00
இடம் :- ஹிழுரிய்யா ஜும்ஆ பள்ளிவாயல்,மாஞ்சோலை,ஓட்டமாவடி.

ஏற்பாடு :- கல்வி அபிவிருத்திக் குழு,பதுரியா மாஞ்சோலை

Good Luck on Your Exams...📝📝A/L Exam 2024
24/11/2024

Good Luck
on Your Exams...📝📝
A/L Exam 2024

இம்முறை கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கும் அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள...
29/09/2024

இம்முறை கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கும் அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு அந்த மாணவர்களின் எதிர்கால கல்வி வாழ்வு சிறக்க பிராத்தனை செய்து கொள்கின்றோம்.

Address

1st Floor,Hiluriya Jumma Mosque,Mancholai,Oddamavadi.

Website

Alerts

Be the first to know and let us send you an email when கல்வி அபிவிருத்தி குழு - பதுரியா,மாஞ்சோலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share