21/09/2025
#திறமைகளை #வெளிப்படுத்தி #வெற்றி #பெற #இறைவனை #பிரார்த்திப்போமாக!
கொழும்பில் நாளை 23 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள
தேசிய மட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இன்று திங்கட்கிழமை காலை (22.09.2025) எமது மீராவோடை அல்-ஹிதாயா அணியினர் தமது பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக பாடசாலையின் பழைய மாணவ சங்கத்தின் ஊடக இணைப்பாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தெரிவித்தார்.
மேலும் அவர் இவர்களுடைய பயணம் பாதுகாப்பாகவும், வெற்றிப் பயணமாக அமையவும், அங்கு நடை பெறும் அனைத்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளை மிகவும் மன தைரியத்துடன் எதிர்கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் எனவும், சிறந்த உடல் ஆரோக்கியத்தை வல்ல இறைவன் வழங்க வேண்டுமென நாம் அனைவரும் பிராத்திப்போமாக!
எமது கிரிக்கெட் அணியினருடைய வெற்றி என்பது எமது மாகாணத்திற்கும் மாவட்டத்திற்கும் எமது பிரதேசத்திற்கும் பெருமை ஈட்டி தரும் என்பதுடன்
" பாடசாலைக்காக நாம்" என அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் நூற்றாண்டை நோக்கி நகரும்
எமது பாடசாலையின் கௌரவத்தையும்,சிறப்பையும் மேலோங்க செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
எம்.ரீ.எம்.பாரிஸ் (ஊடகவியலாளர்)
ஊடகப்பிரிவு,
பழைய மாணவ சங்கம்
மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம்.