Markaz an noor Nawalady

Markaz an noor Nawalady Mission of the organisation is to develop or build patriotic, coexistent and educated future genera

30/06/2023

சர்வதேசஅரபு மொழி தினத்தை முன்னிட்டு  இன்று 18.12.2022 வாழச்சேனை நாவலடி ஹிஜ்ரா நகரில் அமைந்துள்ள அன்னூர் அகடமி (மர்கஸ் அந...
19/12/2022

சர்வதேசஅரபு மொழி தினத்தை முன்னிட்டு இன்று 18.12.2022 வாழச்சேனை நாவலடி ஹிஜ்ரா நகரில் அமைந்துள்ள அன்னூர் அகடமி (மர்கஸ் அந்நூர்) கல்வி நிறுவனத்தில் இரத்ததான முகாம் ஒன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனை வைத்திய சாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து அந்நூர் கலை கலாச்சார மன்றம் ஏற்பாடு செய்திருந்தஇரத்ததான முகாமில் ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனத்தின் மாணவர்களும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

14/12/2022
நமக்காக விதித்ததை ஒரு போதும் நாம் இழக்க போவதும் இல்லை ...நமக்கென்று முடிவு செய்யப்பட்டதை  நம்மை தவிர வேறு யாரும் அடைய போ...
28/08/2022

நமக்காக விதித்ததை
ஒரு போதும் நாம் இழக்க போவதும் இல்லை ...

நமக்கென்று முடிவு செய்யப்பட்டதை நம்மை தவிர வேறு யாரும் அடைய போவதும் இல்லை..

நேற்றைய தினம் (27.08.2022) எமது கல்லூரி மைதானத்தில் அன்னூர் அகடமி  அணி, மற்றும் அல்- இஹ்சான் அணிகளுக்கிடையில் சினேக பூர்...
28/08/2022

நேற்றைய தினம் (27.08.2022) எமது கல்லூரி மைதானத்தில் அன்னூர் அகடமி அணி, மற்றும் அல்- இஹ்சான் அணிகளுக்கிடையில் சினேக பூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற, திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

மரணித்தவர்களை ஏச வேண்டிய அவசியம் எமக்கில்லை ஏனென்றால் அவர்கள் செய்த செயல் நன்மையோ தீமையோ அதன் பக்கம் சென்று விட்டனர் தீர...
28/08/2022

மரணித்தவர்களை ஏச வேண்டிய அவசியம் எமக்கில்லை ஏனென்றால் அவர்கள் செய்த செயல் நன்மையோ தீமையோ அதன் பக்கம் சென்று விட்டனர் தீர்ப்பு சொல்லவோ நரகவாதியாக ஆக்கவோ எந்த அதிகாரமும் எம்முன் கிடையாது நபி ஸல் அவர்களுக்கு கூட அல்லாஹ் சொல்வது எத்தி வைப்பது உங்கள் கடமை கேள்வி கணக்கு கேட்பது எமது கடமையாகும் உம்முடைய கடமையெல்லாம் (நம்முடைய கட்டளையை அவர்களிடம்) சேர்ப்பிப்பது தான்; (அவர்களிடம்) கணக்கு வாங்குதல் நம்மிடம் இருக்கிறது (அல் றஃத்40)என்று கூறுகிறான் எனவே நமக்கு முன் சென்றோர்களுக்கு பிரார்த்தனை செய்வோம் எங்களுக்கும் எங்களுக்கு முன் ஈமானுடன் சென்றோர்களுக்கும் மன்னிப்பு வழங்குவானாக
அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்(அல் ஹஷ்ர்10)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறந்தோரை ஏசாதீர்கள். ஏனெனில், அவர்கள் தாம் செய்த (நன்மை, தீமை ஆகிய)வற்றின்பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(புகாரி6516)

காலை நேரம்...கதிரவன் எட்டிப் பார்க்க...இளம் வெயில் மேனி பட...17 வருடம் உயர்ந்து சடைத்த நிழல் தரும்...அன்னூரின்  தோழனின் ...
14/03/2022

காலை நேரம்...
கதிரவன் எட்டிப் பார்க்க...
இளம் வெயில் மேனி பட...
17 வருடம் உயர்ந்து சடைத்த நிழல் தரும்...
அன்னூரின் தோழனின் நிலத்தடியில்...
இறைவசனம் ஓதி...
அன்பு ஆசானின் அழகிய வார்த்தைகள்...
முத்தாய் உள்ளத்தில் பதிய...
மௌனமாய் ஒரு மூச்சு விட்டு...
அமைதியாய் கலைந்து...
வகுப்பறை சென்று...
வாஹியின் ஒளியை கற்று...
இம்மைக்கும் மறுமைக்கும்..
தீனுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க...
காத்திருக்கும் அன்பு நெஞ்சங்களின் காலை ஆராதனையின் ஒரு பகுதி..

-NOOR ACADEMY (MARKAZ AN-NOOR)
#0742557995

#இலக்குகளை நோக்கிய பயணம்..

14/03/2022

அந்நூர் அகாடமி (MARKAZ AN-NOOR)
புதிய மாணவர் அனுமதி -2022

AN-NOOR ACADEMY
NEW ADMISSION OPEN FOR NOW - 2022

தொடர்புகளுக்கு : 0742557995

Message AN-NOOR ACADEMY on WhatsApp. https://wa.me/message/MMIT3A2GJZ35E1

எமது மார்க்கஸ் அந்-நூர் கல்வி நிலையத்தில் 2021ம் ஆண்டிற்கான புதிய மாணவர் தேர்வுக்கான நேர்முகப்பரீட்சை 27.12.2020ம் திகதி...
28/12/2020

எமது மார்க்கஸ் அந்-நூர் கல்வி நிலையத்தில் 2021ம் ஆண்டிற்கான புதிய மாணவர் தேர்வுக்கான நேர்முகப்பரீட்சை 27.12.2020ம் திகதி கல்லூரியின் அதிபர் A. ஹபீப் காசிமி அவர்களின் வழிகாட்டுதலில் சுகாதார வழிமுறைகள், சமூக இடைவெளி கடைப் பிடிக்கப்பட்டு நடைபெற்றது. இதில் இதில் விண்ணப்பித்த விண்ணப்பிக்காத பல மாணவர்கள் கலந்து கொண்டனர்.

எமது நாட்டில் மற்றும் சர்வதேசத்தில் ஏற்பட்டிருக்கும் covid-19 கொரோனவைரஸ் அதன் தாக்கம் சுகாதாரப் பிரிவினரின் அறிவுரை என்பவற்றை கருத்தில் கொண்டு பல வெளியூர் மற்றும் தூர இடங்களிலிருந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கான நேர்முகப்பரீட்சை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

 #மர்கஸ்  #அந்நூர் #நேர்முகப்  #பரீட்சை -  #2021எமது கல்வி நிறுவனத்தில் 2021 க்கான புதிய மாணவர்களை சேர்துக்கொள்வதற்காக  ...
24/12/2020

#மர்கஸ் #அந்நூர்
#நேர்முகப் #பரீட்சை - #2021

எமது கல்வி நிறுவனத்தில் 2021 க்கான புதிய மாணவர்களை சேர்துக்கொள்வதற்காக
முன்னர் விண்ணப்பித்த மற்றும் இதுவரை விண்ணப்பிக்காத சகல மாணவர்களுக்குமான நேர்முக பரீட்சை இன்ஷா அல்லாஹ்
பின்வரும் நேர கால சூழலில் நடைபெறவுள்ளது.

திகதி :- 27.12.2020 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் :- காலை 9.00
இடம் :- கல்லூரி மண்டபம்

#சமர்ப்பிக்கப்பட #வேண்டிய #ஆவணங்கள்:

1. பிறப்பத்தாட்சிப்பத்திரம் (மூலப்பிரதி)
2. பாடசாலை தேர்ச்சி அறிக்கை (நிழல் பிரதியுடன்)
3.கல்விச்சான்றிதழ்கள்
4.ஏனைய சான்றிதழ்கள்

Address

Markaz Annoor
Oddamavadi

Telephone

+94653646446

Website

Alerts

Be the first to know and let us send you an email when Markaz an noor Nawalady posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Markaz an noor Nawalady:

Shortcuts

Share

Category