11/09/2025
Athletic Sports # மீண்டும் வெற்றியை தன்னகத்தே கைப்பற்றியது ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயம் #
நேற்று முன்தினம் நடைபெற்ற கோட்டமட்ட Kids Athletic சிறுவர் விளையாட்டுப் போட்டி 2025 நிகழ்ச்சியில் எமது கோட்டத்திலுள்ள பாடசாலைகளுடன் போட்டியிட்டு மட்/ மம/ ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் தரம் 3 பெண் மாணவிகள் முதலிடத்தினையும், தரம் 4 பெண் மாணவிகள் முதலிடத்தையும், தரம் 4 ஆண் மாணவர்கள் 0.02 சொற்ப செக்கன்களில் முதல் இடத்தை தவறவிட்டு இரண்டாம் இடத்தினையும் அதேபோன்று தரம் 5 பெண் மாணவிகள் 2 ஆம் இடத்தையும் பெற்று பெற்று வலய மட்டப் போட்டிகளுக்கு இம்முறையும் தெரிவாகியுள்ளனர்.
சென்ற வருடமும் கோட்டமட்டத்திலும், வலய மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் முதலாம் இடங்களைப் பெற்று மாகாணம் வரை சென்று போட்டியிட்டு மட்/மம/ ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயத்தின் பெயரை ஓங்கச் செய்து பெருமை தேடிக் கொடுத்த மாணவர்களையும், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் JM. இர்ஷாத் அவர்களையும், மாணவர்களையும், ஆசிரியர்களையும் வழிப்படுத்த அயராது உழைத்த பாடசாலையின் அதிபர் SIM சாதாத், பிரதி அதிபர் NMM.ஹனீபா, ஆசிரியர்களான AMM.பாயிஸ் மற்றும் MFM.நாஸர், மாணவர்களை பயிற்றுவித்த தரம் 3 ஆசிரியர்களான M.I.ஆமினா, S.M.றஸீதா,A.L. றஸீனா மற்றும் தரம் 4 ஆசிரியர்களான MTVN.ரிப்னா, AHL.அக்லியா, A.L.ரஜ்மியா, MZR.ரம்ஸா, A L.பஸ்மிலா மற்றும் A.M.றிபாதா ஆகியோரை இன்று 11.09.2025 பாராட்டி, மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்து கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை முன்றலில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பெருமளவிலான பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
NMM.Haniffa
Dpty. Principal
Athletic -2025