14/12/2025
உம்மு சுலைம் மாணவிகளின் மற்றுமோர் அடைவு. அல்ஹம்துலில்லாஹ்.
அண்மையில் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய ரீதியில் நடாத்தப்பட்ட கலை இலக்கிய எழுத்தாக்க திறந்த போட்டி - 2025 இல் கலந்து கொண்ட எமது கல்லூரி மாணவிகள் மாவட்ட மட்டத்தில் மிகச் சிறந்த அடைவுகளைப் பெற்றுள்ளனர்.
அந்த வகையில்,
புதுக் கவிதைப் போட்டியில்
*அன்சார் பாத்திமா ரனா மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தையும், அப்துல் ஹமீட் பாத்திமா ஹஸ்னா ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.*
சிறுகதைப் போட்டியில்
*சுபைர் பாத்திமா றீனா மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும், மஃறூப் பாத்திமா சஜீனா மூன்றாமிடத்தையும், ஜௌபர் பாத்திமா அம்னா ஐந்தாமிடத்தையும் பெற்றுள்ளனர்.*
கலை, இலக்கிய விடயங்களை அடிப்படையாகக் கொண்ட புறகிருத்திய செயற்பாடுகளில் எமது மாணவிகளின் அடைவுகள் மகிழ்ச்சியளிப்பதோடு வெற்றி பெற்ற கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் கல்லூரி சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
14.12.2025.