31/08/2025
1989 ஆம் ஆண்டு O/L Batch யினர் நிதிப் பங்களிப்பு:
பெண்களுக்கென தனியான பாடசாலையாக 22.08.1989 ஆம் ஆண்டு தற்போதைய பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம் உருவாக்கப்பட்டது, இதனால், அந்த வருடத்தில் ஓட்டமாவடி மகா வித்தியாலயத்தில் இருந்து O/L பரீட்சை எழுத காத்திருந்த ஆண், பெண் மாணவர்கள் பிரிக்கப்பட்டனர்.
இதனால், மனமுடைந்திருந்த மாணவர்களை தேற்ற, ஒரு மாணவர் கரும்பலகையில் இப்படி எழுதி இருந்தாராம் "பிரிந்ததை எண்ணி கவலைப்படவேண்டாம், மத்திய கல்வி நிலையம் கைகொடுக்கும்" ( மத்திய கல்வி நிலையம்- அப்போதிருந்த tuition center).
இறுதியாக, எமது பாடசாலையில் ஆண், பெண் என ஒன்றாக படித்த O/L batch யே, 89 O/L batchயினர்.
தற்போதைய, ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் மாணவர்களுக்காக, பழைய மாணவர்களின் அன்பளிப்பாக நிர்மாணிக்கப்படவுள்ள "மஸ்ஜித்துக்காக" குறித்த batch யினர், ஒரு இலட்சம் ரூபாய் (Rs. 100,000/=) பணமும், அதே batch சேர்ந்த தொழிலதிபர் சகோ. Mohamed Musthafa Mohamed Ansar அவர்களினால் 50 பக்கெட் சீமெந்துகளும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்த உதவியை செய்த குறித்து 1989 ஆம் ஆண்டு Batchயின் தலைவர், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அதன் அங்கத்துவர்களுக்கு ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் தனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
இந்நிகழ்வில் ஆண், பெண் சகோதரிகள் கலந்து கொண்டு தங்களது பழைய, பசுமையான நினைவுகளை மீட்டிக் கொண்டமை இன்றைய நிகழ்வின் highlight.
வல்ல இறைவன் இவர்களின் இந்த உதவியினை பொருந்திக் கொண்டு அவர்களின் குடும்பம், வியாபாரம், பொருளாதாரம், ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தில் பரக்கத்தை ஏற்படுத்துவானாக.
ஜஷாஹல்லாஹு கைரன் பிரதர்ஸ் @ சிஸ்டர்ஸ்.
இன்ஷா அல்லாஹ், உதவிகள் தொடரும்........