கல்வி சமூகம் - Education Community

கல்வி சமூகம் - Education Community கல்வி தொடர்பான தகவல்கள் மற்றும் செய்

எதிர்கால மலையகத்தில் சிறந்த உயர்க்கல்வி நிலை காணப்பட வேண்டுமாயின் முதலில் கல்விச் செயற்பாட்டிலிந்து அரசியல் பங்கேற்றலை தவிர்த்தல் வேண்டும். ஆகவே எதிர்கால மலையக சமூகமானது கல்வித்துறை ஒன்றினால் மட்டுமே உயர்வடைய செய்ய முடியும்.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை தினம், அதாவது 2026.09.25 ஆம் திகதி நுவரெலியா வலையத்திலுள்ள அனைத்து பாடசாலைகள...
24/09/2026

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை தினம், அதாவது 2026.09.25 ஆம் திகதி நுவரெலியா வலையத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகின்றது என்பதை அன்புடன் அறியத்தருகின்றேன்.

டீ.எம்.எஸ்.டீ. திஸாநாயக்க
வலயக் கல்விப் பணிப்பாளர்
நுவரெலியா.

மத்திய மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை தரம் III - திறந்த போட்டிப் பரீட்சை – 2026Online Application: https://ap...
22/09/2026

மத்திய மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை தரம் III - திறந்த போட்டிப் பரீட்சை – 2026

Online Application: https://applications.doenets.lk/exams

 *💻 *GIT Examination 2026*General Information Technology Examinationபொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை📅 Date: 24 October...
18/09/2026

*

💻 *GIT Examination 2026*

General Information Technology Examination
பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை

📅 Date: 24 October 2026

🗓️ Saturday

🕘 Time: 9.00 a.m. – 12.10 p.m.

📝 Paper I & Paper II

🔗 More Details: www.doenets.lk

இலங்கை ஆசிரியர் சேவை வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைக்கான கற்றல் வளங்கள் e-thaksalawa.moe.gov.lk இணைய தளத்தில்  பதியப்பட்...
26/08/2026

இலங்கை ஆசிரியர் சேவை வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைக்கான கற்றல் வளங்கள் e-thaksalawa.moe.gov.lk இணைய தளத்தில் பதியப்பட்டுள்ளது.

https://e-thaksalawa.moe.gov.lk/lcms/course/index.php?categoryid=125&fbclid=IwdGRjcAT7Xv5jbGNrBPte5nBkb2YFZXh0bgNhZW0CMTEAc3J0YwZhcHBfaWQMMzUwNjg1NTMxNzI4AAEeTMtdXTJSFtWKquE4y8kfDAt0QkLBftiLYKC6-zoB7A7R3BCfqADsEF9gCPw_aem_jFZCNxfPz0qiqXgsbMuhhg

2027 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை கல்வி அமைச்சினால் வௌியீடு...!
21/08/2026

2027 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை கல்வி அமைச்சினால் வௌியீடு...!

17/08/2026

பாடசாலை மாணவர்கள் ஏன் படிக்க வேண்டும்..?

🎓 வட்டியற்ற மாணவர் கடன் திட்டம் 2026🔥 11 ஆவது மாணவர் குழு🎯 2023 | 2024 | 2025உயர் தர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!📚 130 பட...
15/08/2026

🎓 வட்டியற்ற மாணவர் கடன் திட்டம் 2026

🔥 11 ஆவது மாணவர் குழு

🎯 2023 | 2024 | 2025

உயர் தர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

📚 130 பட்டப் பாடநெறிகள்
🏛️ 16 பல்கலைக்கழகங்கள் / உயர் கல்வி நிறுவனங்கள்
💰 ரூ. 15 இலட்சம் வரை வட்டியற்ற கடன்

✅ தகைமைகள்

🔹 உயர் தரத்தில் குறைந்தது S சித்தி
🔹 சாதாரண தரம் / உயர் தரத்தில் ஆங்கிலத்தில் குறைந்தது S சித்தி

⏰ விண்ணப்ப முடிவுத் திகதி

27.09.2026

📌 முழுமையான விபரங்கள் & விண்ணப்பம்:
🌐www.mohe.gov.lk

🎓 2025/2026 பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 🎓2025/2026 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்க...
06/08/2026

🎓 2025/2026 பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 🎓

2025/2026 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து மாணவர்களினதும் கவனத்திற்கு!

இன்னும் உங்கள் ஆன்லைன் பதிவை (Online Registration) நிறைவு செய்யவில்லையா?

⏳ ஆன்லைன் பதிவு செய்வதற்கான இறுதித் திகதி:
📅 14.08.2026

இறுதி நாள் வரை காத்திருக்காமல், உடனடியாக UGC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பின்வருவனவற்றை பூர்த்தி செய்யுங்கள்:
✅ தெரிவுக் கடிதத்தை (Letter of Selection) பதிவிறக்கம் செய்யுங்கள்.
✅ தேவையான ஆவணங்களைச் சரிபார்த்து பதிவேற்றுங்கள்.
✅ ஆன்லைன் பதிவை முழுமையாக நிறைவு செய்யுங்கள்.
🌐 இணையதளம்: www.ugc.ac.lk

⚠️ முக்கிய குறிப்பு:
இறுதித் திகதியைத் தவறவிட்டால், உங்கள் பல்கலைக்கழக அனுமதி பாதிக்கப்படக்கூடும். எனவே காலதாமதமின்றி உடனடியாகப் பதிவை நிறைவு செய்யுங்கள்!

GCE A/L & Scholarship பரீட்சை ஏற்பாடுகள் குறித்து இன்று விசேட ஆலோசனை..!நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை நிலைமையை முன்னிட்ட...
05/08/2026

GCE A/L & Scholarship பரீட்சை ஏற்பாடுகள் குறித்து இன்று விசேட ஆலோசனை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை நிலைமையை முன்னிட்டு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை தொடர்பான ஏற்பாடுகள் குறித்து இன்று விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், நிலவும் மழையால் பரீட்சை நடவடிக்கைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அவற்றை சமாளிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன, தற்போது மழையின் தாக்கம் அதிகரித்திருந்தாலும், ஆகஸ்ட் மாதம் பொதுவாக மழை குறைவாகப் பதிவாகும் காலமாகும் என்றும், பருவக்காற்றின் தீவிரத்தால் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை தற்காலிகமானது என்றும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 6 ஆம், 7 ஆம், 8ஆம் திகதிகளுக்குப் பின்னர் மழை ஓரளவு குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், உயர்தரப் பரீட்சைகள் 10ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பமாகவுள்ளதால் அதற்குள் தற்போதைய வானிலை தாக்கம் தணியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், 6ஆம் திகதிக்குப் பின்னர் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகவுள்ள சூறாவளி நிலைமையின் தாக்கத்தால் நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் மழைவீழ்ச்சி ஓரளவு அதிகரிக்கக்கூடும் என அஜித் விஜேமான்ன எச்சரித்துள்ளார்.

Address

Nuwara Eliya

Alerts

Be the first to know and let us send you an email when கல்வி சமூகம் - Education Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to கல்வி சமூகம் - Education Community:

Shortcuts

Share

Category