13/06/2024
அயரபியின் அகவை நாள்...!
[1977.06.14 - 2024.06.14]
எழில் கொஞ்சும் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டம், ஹட்டன் கல்வி வலயம் கோட்டம் II இற்கு உட்பட்டு நோர்வூட் நகரத்திற்கு அருகில் அயரபி எனும் கிராமத்தில் கம்பிரமாய் காட்சியளிப்பதே எமது அன்னை அயரபி தமிழ் வித்தியாலயமாகும்.
இன்றுடன் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டு 47ஆவது அகவையை கொண்டாடும் பாடசாலையானது "அயரபி" எனும் அழகிய நாமத்தோடு 1831 ஆம் ஆண்டு முதல் அன்றைய கல்வி முறைகளுக்கமைய கல்விக்கூடமாக தனது சேவையை ஆரம்பித்துள்ளதாக வாய்மொழி தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பாடசாலையானது நியுவெளி, அயரபி மற்றும் கிளங்கன் பிரதேச மாணவர்களின் தாய்பாடசாலையாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஆரம்ப காலத்தில் கொத்தனி பாடசாலை முறைமையில் நோர்வூட் பாடசாலைக்கு ஏந்து பாடசாலையாக இயங்கிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 1977.06.14 அன்று அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டதுடன் "அயரபி தமிழ் வித்தியாலயம்" எனும் உயரிய நாமத்தோடு கம்பிரமாய் தன் கடமையை நிறைவேற்றிக்கொட்டிருக்கின்றது.
குறிப்பிட்ட காலம் வரை தரம் 01 முதல் 05 வரையான பாடசாலையாகவும் 2006 ஆம் ஆண்டிற்கு பின்னர்
க பொ த சா/த பாடசாலையாகவும் வியாபித்திருக்கின்றது. இப்பாடசாலையின் வளர்ச்சியில் பின்வரும் அதிபர்கள் இருந்திருக்கின்றனர். திருமதி இராதா ,
திரு கருணாகரன் , திருமதி நித்தியகல்யானி , மற்றும் திருமதி சுசிலா செல்வராஜா போன்றோர் அதிபர்களாக கடமையாற்றியுள்ளதுடன் தற்போதைய அதிபராக திருமதி அட்லிசம்மாள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்.
பாடசாலையானது 47 வருடத்தில் பல்வேறு துறைகளில் பிரகாசிப்பவர்களை உருவாக்கியுள்ளதுடன் இன்றும் பல்வேறுப்பட்ட வளப்பற்றாக்குறைகளுடன் இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலையின் வளர்ச்சியில் அன்று தொடக்கம் இன்று வரை கடமையாற்றிய மற்றும் கடமையாற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு அளப்பறியது.
அயரபி அழகிய நாமத்தோடு இன்னும் பல ஆண்டுகள் நிலைத்து உயர்தர வகுப்புக்களையும் தன்னகத்தேக்கொண்டு வீறு நடைபோட நல்வாழ்த்துக்கள்.
-பழைய மாணவர் ஒன்றியம்-