N/ Norwood T.M.V - National School

N/ Norwood T.M.V - National School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from N/ Norwood T.M.V - National School, School, https://goo. gl/maps/5xpw2AWPhdfVaa1v 5, Norwood.

30/11/2022
2021(2022) ஆம் ஆண்டில் க. பொ. த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்ற மாணவர்கள் அதிபரினால் வாழ்த்து சான்றிதழ் ...
30/11/2022

2021(2022) ஆம் ஆண்டில் க. பொ. த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்ற மாணவர்கள் அதிபரினால் வாழ்த்து சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமையாற்றி தந்த மாணவர்களுக்கு அதிபர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

மேலும் இவ் சிறந்த பெறுப்பேற்றினை பெற்று தர உதவிய பாடசாலையில் உள்ள சகல ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் வணிக விழா👉 நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில்  நேற்றைய தினம் (23)பாடசாலையின் வணிக ம...
24/11/2022

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் வணிக விழா
👉 நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்றைய தினம் (23)பாடசாலையின் வணிக மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வணிக விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் காப்பாளராக பாடசாலையின் அதிபர் S. ராஜன் அவர்களும், பிரதம அதிதியாக வலய கல்வி பணிமனையில் இருந்து வருகை தந்த உதவி கல்வி பணிப்பாளர் ( திட்டமில், வணிகத்துறை ) திருமதி. A சுமதி அம்மணி அவர்களும் சிறப்பு அதிதிகளாக திருவாளர். S அழகுருசாமி (ஆசிரிய நிலைய முகாமையாளர் -நுவரெலியா ) அவர்களும் திருவாளர் S.சாரங்கன் ( வணிக பாட துறைக்கான ஆசிரியர் ஆலோசகர் ) அவர்களும் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கடந்த இரு வாரங்களாக பாடசாலையில் நடைபெற்ற பேச்சு போட்டி,வினாவிடை போட்டி , கட்டுரை போட்டி,இலத்திரனியல் நிகழ்துகை போட்டி, கண்காட்சி என்பவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும், வெற்றி கேடயங்களும் வழங்கப்பட்டமை நிகழ்வினை மேலும் மெருகூட்டின.
அதனை தொடர்ந்து வணிக மன்ற பொறுப்பாசிரியர் கா.மதுமதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் தரம் 12,13 வணிககல்வி பாடத்திற்கான அறிவாயுதம் என்ற நூல் வெளியீடு செய்யப்பட்டதன் காரணமாக மாணவர்களின் திறமைகள் வெளிப்படையாக மிளிர்ந்தன.
அதனை தொடர்ந்து பிரதம அதிதி, சிறப்பு அதிதிகள் கௌரவிக்கபட்டமை பாடசாலையின் கௌரவமான செயற்பாடாகவும் அமைந்தது . மேலும் நடனம், பாடல், போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.

The Positive Classroom Management work shop for Grade 10 Students, Their Parents and School Teachers was held on 2nd of ...
14/11/2022

The Positive Classroom Management work shop for Grade 10 Students, Their Parents and School Teachers was held on 2nd of November 2022 at our school main Hall. It was organized by the Zonal Director and Our School Principal.

"குறிஞ்சி சொற்சமர்..2022...." விவாத போட்டியில் எமது பாடசாலை முதலாம் இடத்தை பெற்றுள்ளது
14/11/2022

"குறிஞ்சி சொற்சமர்..2022...." விவாத போட்டியில் எமது பாடசாலை முதலாம் இடத்தை பெற்றுள்ளது

"எமது பாடசாலையின் அதிபர் தமிழ் தின போட்டிகளில் மற்றும் குறிஞ்சி சொற்சமர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ...
14/11/2022

"எமது பாடசாலையின் அதிபர் தமிழ் தின போட்டிகளில் மற்றும் குறிஞ்சி சொற்சமர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றி கேடயங்களையும் வழங்கினார்.

The Sri Lanka Press Institute held a workshop for our school students and neighboring school students to develop their l...
10/11/2022

The Sri Lanka Press Institute held a workshop for our school students and neighboring school students to develop their leadership qualities and introduction of MEADIA. It has planed under the guidance and assistance of our Zonal Director and the Principal of our school. It was held on 02nd of November 2022 at 9.00 a.m.

நோர்வூட் தேசிய பாடசாலையின் வணிக கண்காட்சி*                                   வணிக மன்றத்தின் ஏற்பாட்டில்  8, 9/11/2022 ஆ...
09/11/2022

நோர்வூட் தேசிய பாடசாலையின் வணிக கண்காட்சி*
வணிக மன்றத்தின் ஏற்பாட்டில் 8, 9/11/2022 ஆகிய இரு தினங்களாக பாடசாலையின் அதிபர் திரு. S.ராஐன் அவர்களின் தலைமையில் நடந்தேறியது. இந்நிகழ்வுக்கு வணிகத்துறைக்கான ஆசிரியர் ஆலோசகர் திரு.S.சாரங்கன் அவர்களும் பாடசாலையின் ஆசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்றனர்.மேலும் அண்மையில் உள்ள பல பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் கண்காட்சியை கண்டு களித்தனர்.

Address

Https://goo. Gl/maps/5xpw2AWPhdfVaa1v 5
Norwood
22058

Alerts

Be the first to know and let us send you an email when N/ Norwood T.M.V - National School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to N/ Norwood T.M.V - National School:

Shortcuts

Share

Category