06/10/2024
"எம்மிடம் படித்த மாணவர்களின் சிறந்த பெறுபேறு." Vs "W எடுத்த மாணவர்களும் உங்களிடம் தானே கற்றார்கள்"
இந்த இரண்டுமே இருவேறு Extreme நிலைகள்.
ஒரு மாணவன் நல்ல பெறுபேறு பெறவும், சித்தி பெறாத பெறுபேறு பெறவும் முதல் காரணம் அந்த மாணவனே.
அதன் பின்னர்தான் ஆசிரியர் மற்றும் இன்னோரன்ன பிற காரணிகள்.
ஆசிரியர் என்பவர் வழி காட்டுபவர். ஒரு பாடத்தை மாணவனுக்கு இலகுவில் புரிய வைக்கக் கூடியவரே சிறந்த ஆசிரியர்.
கற்பித்தல் என்பது ஒரு கலை. அக்கலையில் சிறந்து விளங்குபவரிடம் அதிக மாணவர்கள் நாடிச் செல்வர்.
ஒரு ஆசிரியரிடம் கற்று A எடுத்த மாணவன் இருந்த அதே வகுப்பில்த்தான் W எடுத்த மாணவனும் இருப்பான்.
"A"களைக் கொண்டு தான்தான் சிறந்த ஆசிரியர் என்பதோ , W களைக் கொண்டு அவர் ஒரு மோசமான ஆசிரியர் என்று இடை போடுவதோ தவறு.
ஒரு மாணவன் அவனது நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு வழிகாட்டுவதே ஆசிரியரின் வேலை.
உலகக் கிண்ணம் வென்ற India / Australiaவின் Coach தன்னால்த்தான் இந்த அணி தலைசிறந்த அணியாக விளங்குகிறது; தான்தான் சிறந்த Coach என்பாரெனில் அவரை அழைத்து உகாண்டா, பாகிஸ்தான் போன்ற மொக்க அணிகளை உலகக் கிண்ணத்தை கைப்பற்றச் செய் என்றால் அவரால் முடியுமா? அதனை வைத்துக் கொண்டு அவரை மோசமான Coach என்று சொல்ல முடியுமா?
ஆக பானையில் இருந்தால்த்தானே அகப்பையில் வரும்.
இதேபோல்த்தான் பாடசாலைகளும். ஒரு பாடசாலை பிரபல பாடசாலை என்றால் அப்பாடசாலையை நோக்கியே நன்கு கற்கும் மாணவர்களும் அவர்களிம் பெற்றோரும் படையெடுப்பர்.
பாடசாலைகளும் அம்மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்குவர்.
ஆக இது ஒரு Selection bias. இது Positive Viscous Cycle ஆக தொடரும்.
மாறாக பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் சாதாரண சித்தி பெறுபேறு பெற வழி காட்டுபவர்களே அவ்விடத்தில் சிறந்த ஆசிரியர்கள்.
ஒரு மாணவனின் (பரீட்சை) பெறுபேற்றில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்:
🛑 01. மாணவனின் காரணிகள்:
❤️ A. கல்வியில் மாணவன் காட்டும் முயற்சி
❤️ B. பாட வகுப்புகளில் காண்பிக்கும் அவதானம்
❤️ C. பாடசாலைக்கு / வகுப்புகளுக்கு சீராக சமூகமளித்தல்
❤️ D. பாடங்களை மீட்டல் செய்தல்
❤️ E. மாணவனின் எதிர்கால இலக்கு
❤️ F. கற்றலில் சுய உந்துதல்
❤️ G. குடும்ப சூழ்நிலை
அதாவது குடும்ப பொறுப்புகள் மற்றும் வறுமை நிலை:
வறுமை கல்விக்குத் தடை; என்பதினால்த்தான் வறுமையிலும் சாதிக்கும் பிள்ளைகளை "வறுமை கல்விகாகுத் தடை இல்லை" என்ற அடைமொழியுடன் கொண்டாடுகிறோம்.
🛑 02. வகுப்பறை காரணிகள்:
✅ A. ஆசிரியரின் கல்வித் தகைமை மற்றும் கற்பிக்கும் ஆற்றல்
✅ B. ஆசிரியர் பாடவிதானத்தை உரிய காலத்தில் கற்பித்து பூர்த்தி செய்தல்
✅ C. வகுப்பறை சகமாணர்கள்: இவர்கள் கல்வியில் காட்டும் ஆர்வம்
🛑 03. பரீட்சை காரணிகள்:
🎯 A. பரீட்சை நிலையத்தில் பரீட்சையில் கவனம் செலுத்துதல்
🎯 B. பரீட்சை வினாக்களை சரியாக வாசித்து விளங்குதல்.
🎯 C. சரியான முறையில் வினாக்களுக்கு விடை அளித்தல்
🎯D. பரீச்சையில் நேர முகாமைத்துவம்
🛑 04. புறக் காரணிகள்:
📛 A. பரீட்சை தினத்தில் மாணவனின் மனநிலை மற்றும் உடல் நிலை
📛 B. குடும்ப / சமூக அழுத்தங்கள்
📛 C. மாணவனின் ஆளுமைப் பண்புகள்
📛 D. பரீட்சை நிலையத்திற்கு வெளியில் நிலவும் சத்தம் மற்றும் இடர்கள்
ஆக ஒரு மாணவனின் பரீட்சை பெறுபேறு அவனின் IQ, Problem Solving ability, தான் தெரிவு செய்த துறை உட்பட மேற்சொன்ன பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்தும். அதில் ஆசிரியரின் கற்பிக்கும் ஆற்றல் முக்கிய பங்கு வகிக்கும். பெறுபேறுகள் அல்ல.
உளத்தூய்மையுடன் மாணவர்களின் வெற்றிக்காக உளைக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.