Citizen MEDIA Excellence Awards

Citizen MEDIA Excellence Awards Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Citizen MEDIA Excellence Awards, Education Website, 106 APC Road Ninthavur 6 , Ampara, Nintavur.

Welcome to the official page of CITIZEN MEDIA EXCELLENCE AWARDS! 🏆🎉 This year, we are happy to introduce these prestigious awards, recognizing excellence in all fields.

13/09/2026
தமிழ் மொழி ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் சிடிசன் மீடியாவின் General Manager ஜெஸீர் பங்கேற்பு!அரசாங்க தகவல் திணைக்களத்த...
04/09/2026

தமிழ் மொழி ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் சிடிசன் மீடியாவின் General Manager ஜெஸீர் பங்கேற்பு!

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் தமிழ் மொழியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு இன்று (03) வியாழக்கிழமை இடம்பெற்றது.

அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவின் வழிகாட்டலின் கீழ், திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இந்த செயலமர்வில் சிடிசன் மீடியாவின் General Manager ஜெஸீர் கலந்து கொண்டார்.

திணைக்களத்தின் மேலதிக தகவல் பணிப்பாளர் நாயகம் வை. பரன்தாமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ் வளவாளராக கலந்து கொண்டு, “செய்தி அறைகளில் AI பயன்பாடு” என்ற தொனிப்பொருளில் விரிவுரையாற்றினார்.

அத்துடன், அரசாங்க தகவல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எல்.பி. திலகரத்ன உள்ளிட்ட அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

ஊடகத்துறையின் நவீன தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ந்து வரும் பங்களிப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அறிவூட்டும் வகையில் இந்த செயலமர்வு அமைந்தது.

05/08/2026

எமது சிடிசன் மீடியா நடாத்திய சிறப்பு நேரலை கல்வி நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த திரு. F.மொஹமட் ஸியாசி ஆசிரியர் அவர்கள் எமது மீடியா பற்றி கருத்து தெரிவித்த போது....

 #பிரபல ஆசிரியர் F. Mohamed Siyasi  அவர்கள் சிடிசன் மீடியாவினால் கௌரவிப்பு!(யாக்கூக் பஹாத்)சிடிசன் மீடியாவின் ஏற்பாட்டில...
27/07/2026

#பிரபல ஆசிரியர் F. Mohamed Siyasi அவர்கள் சிடிசன் மீடியாவினால் கௌரவிப்பு!

(யாக்கூக் பஹாத்)

சிடிசன் மீடியாவின் ஏற்பாட்டில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக "இம்முறை தரம் 5 மாணவர்கள் புலமைப்பரீட்சையில் சித்தியடைவதற்கு இலகுவாக விடையளிக்கும் நுட்ப முறைகள்" என்ற கருப்பொருளில் நடைபெற்ற விசேட நேரலை நேர்காணல் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனுள்ள வழிகாட்டல்களை வழங்கிய பிரபல ஆசிரியர் F. Mohamed Siyasi அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வு, சிடிசன் மீடியாவின் கல்விப் பிரிவு பொறுப்பாளர் Mr. K.M. Bishrul Haafi (ஆங்கிலப் பாட ஆசிரியர்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மேலும், சிடிசன் மீடியாவின் General Manager ஜெஸீர் மற்றும் சந்தைப்படுத்தல் பொறுப்பாளர் அப்ரான் ஆகியோர் இணைந்து இந்நினைவுச் சின்னத்தை வழங்கி கௌரவித்தனர்.

🌸 THANK YOU TEACHER! 🌸எங்கள் சிறப்பு கல்வி நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிரு. F. மொஹமட் ஸியாசி அவர்களுக்குமனமார்ந்த ந...
27/07/2026

🌸 THANK YOU TEACHER! 🌸

எங்கள் சிறப்பு கல்வி நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
திரு. F. மொஹமட் ஸியாசி அவர்களுக்கு
மனமார்ந்த நன்றிகள்! 💐

🎥 LIVE நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

உங்கள் பயனுள்ள அறிவுரைகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி.

சிடிசன் மீடியா 8வது ஆண்டு விழாவில் அம்பாறை மாவட்ட பொலிஸ் மா அதிபருக்கு சிறப்பு கௌரவிப்பு!சிடிசன் மீடியா ஊடக வலையமைப்பின்...
21/05/2026

சிடிசன் மீடியா 8வது ஆண்டு விழாவில் அம்பாறை மாவட்ட பொலிஸ் மா அதிபருக்கு சிறப்பு கௌரவிப்பு!

சிடிசன் மீடியா ஊடக வலையமைப்பின் 8வது ஆண்டு நிறைவு விழாவும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு, சிடிசன் மீடியா ஸ்தாபகத் தலைவர் M.A. பஹாத் அவர்களின் ஆலோசனையிலும், பிஸ்ருல் ஹாபிஸ் அவர்களின் வழிக்காட்டலிலும், General Manager ஜெஸீர் அவர்களின் தலைமையிலும் நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர் தர தேசிய பாடசாலையில் கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பொலிஸ் மா அதிபர் சுஜித் வெடமுல்ல மற்றும் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மேலும், நிகழ்வின் இறுதியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட பொலிஸ் மா அதிபர் சுஜீத் வெடமுல்ல அவர்களுக்கு, சமூக நல்லிணக்கம் மற்றும் பொது பாதுகாப்பிற்காக அவர் ஆற்றி வரும் சேவைகளைப் பாராட்டும் முகமாக சிடிசன் மீடியாவின் General Manager ஜெஸீர் அவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 #சிடிசன் மீடியா ஊடக வலையமைப்பின் 8வது ஆண்டு நிறைவு விழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய   Meet n Eat நிறு...
19/05/2026

#சிடிசன் மீடியா ஊடக வலையமைப்பின் 8வது ஆண்டு நிறைவு விழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய Meet n Eat நிறுவனத்தினால் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு TOKEN வழங்கி வைப்பு!

நிந்தவூர் சிடிசன் மீடியா ஊடக வலையமைப்பின் 8வது ஆண்டு நிறைவு விழாவும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் கடந்த 09ஆம் திகதி சனிக்கிழமை நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய அனுசரணையாளர்களில் ஒருவரான Meet n Eat நிறுவனத்தின் உரிமையாளர் முஸ்தபா அவர்களினால் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்ற சுமார் 17 மாணவர்களுக்கு இலவச TOKEN வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் வெற்றிக்காக தங்களின் நேரம், ஆதரவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளை வழங்கிய Meet n Eat நிறுவன உரிமையாளர் முஸ்தபா அவர்களுக்கு சிடிசன் மீடியா ஊடக வலையமைப்பு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

 #சிடிசன் மீடியா ஊடக வலையமைப்பின் 8வது ஆண்டு நிறைவு விழாவில் பெண்கள்  குழுவினரை கௌரவிப்பு!நிந்தவூர் சிடிசன் மீடியா ஊடக வ...
18/05/2026

#சிடிசன் மீடியா ஊடக வலையமைப்பின் 8வது ஆண்டு நிறைவு விழாவில் பெண்கள் குழுவினரை கௌரவிப்பு!

நிந்தவூர் சிடிசன் மீடியா ஊடக வலையமைப்பின் 8வது ஆண்டு நிறைவு விழாவில் பெண்கள் குழுவினரை கௌரவிக்கும் நிகழ்வு நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையில் 09ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெண்கள் குழுவினருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கலந்து கொண்ட எம். எஸ். தெளபீக் அஹமட் மற்றும் ஐ. முஹம்மட் சதாத், Meet n Eat நிறுவனத்தின் உரிமையாளர் முஸ்தபா, Shefa Store நிறுவனத்தின் உரிமையாளர் நவாஸ் மற்றும் Rose Reena நிறுவன உரிமையாளர் ஜனுபர் மற்றும் சிடிசன் மீடியாவின் General Manager ஜெஸீர், கல்விப் பிரிவு பொறுப்பாளர் பிஸ்ருல் ஹாபீஸ், சிடிசன் மீடியா ஆலோசகர்களான ஓய்வு பெற்ற அதிபர் அஹமட் சேர்,ஹனீபா சேர் ஆகியோர் இணைந்து இச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.

Address

106 APC Road Ninthavur 6 , Ampara
Nintavur

Alerts

Be the first to know and let us send you an email when Citizen MEDIA Excellence Awards posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share