Km/Km/Addappallam Sahitha Vidyalaya, Nintavur

Km/Km/Addappallam Sahitha Vidyalaya, Nintavur Secondary School

மாணவர் பாராளுமன்றம் 2026இன்று 03.07.2026 மாணவர் பாராளுமன்ற தேர்தல் 2026 பாடசாலையின் அதிபர் திரு.ILM.ஜின்னா Sir (தேர்தல் ...
03/07/2026

மாணவர் பாராளுமன்றம் 2026
இன்று 03.07.2026 மாணவர் பாராளுமன்ற தேர்தல் 2026 பாடசாலையின் அதிபர் திரு.ILM.ஜின்னா Sir (தேர்தல் ஆணையாளர்) அவர்களின் தலைமையில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.

இத் தேர்தலில்
மொத்த வாக்குகள் :- 94
அளிக்கப்பட்ட வாக்குகள் :- 78
வாக்களிக்கப்பட்ட வீதம் :- 82%

33 மாணவ வேட்பாளர்கள் பேட்டியிட்டு 25 மாணவர்கள் மாணவர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்கள்.

குறித்த நிகழ்வுக்கு உதவிகளை வழங்கிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்;, ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

பாடசாலை, கிராமம் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் - 2026கிராமம், பாடசாலை தற்கால நடவடிக்கை மற்றும் எதிர்கால அபிவிருத்...
29/01/2026

பாடசாலை, கிராமம் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் - 2026

கிராமம், பாடசாலை தற்கால நடவடிக்கை மற்றும் எதிர்கால அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல், பாடசாலையின் அதிபர் ILM.ஜின்னாஹ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் நிந்தவூர் பிரதேச செயலாளர் ALM.அப்துல் லத்தீப் (சட்டத்தரணி) அவர்கள் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார். பாடசாலையின் எதிர்கால அடைவுமட்டத்திக்கு தனது ஒத்தழைப்பு வழங்குவதாக உறுதி மொழி அளித்தார்.இவ் நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர்கள், செயலாளர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நடைபெற்ற வலைய மட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில்  எமது பாடசாலையில் கல்விகற்கும் தரம் 3 மாணவர்கள் அணி முதல...
02/10/2024

நடைபெற்ற வலைய மட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் எமது பாடசாலையில் கல்விகற்கும் தரம் 3 மாணவர்கள் அணி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

இதற்கு உறுதுணையாக இருந்த எமது அதிபர் ,
பிரதி அதிபர், உடற்கல்வி ஆசிரியர், ஏனைய ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

29/09/2024

க.பொ.த சா/த பரீட்சையில் எமது பாடசாலையில் இருந்து தோற்றிய 11 மாணவர்களில் 9 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கான வாய்ப்பினை பெற்றுள்ளனர். 81.81% சித்தி, அல்ஹம்துலில்லாஹ்.

மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு 2024நிந்தவூர்  கமு/கமு/ அட்டப்பள்ளம் சஹிதா வித்தியால  மாணவ தலைவர்களுக்கு சின...
07/08/2024

மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு 2024

நிந்தவூர் கமு/கமு/ அட்டப்பள்ளம் சஹிதா வித்தியால மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு அதிபர் திரு.ALM. Jinnah அவர்களின் தலைமையிலும் Mr.A.Ameer Ali (பிரதி அதிபர்) அவர்களின் நெறிப்படுத்தலிலும் இடம் பெற்றது. இவ்விழாவில் Mr.AMM.Najeeb (Chief Inspecter, Nintavur Police Station) பிரதம அதிதியாகவும் கலந்து சிறப்பித்தார்.

இவ்நிகழ்வுகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவு பெறுவதற்கு உதவி புரிந்த அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

Address

Central Road, Addappallam
Nintavur
32340

Opening Hours

Monday 06:00 - 18:00
Tuesday 06:00 - 18:00
Wednesday 06:00 - 18:00
Thursday 06:00 - 18:00
Friday 06:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Km/Km/Addappallam Sahitha Vidyalaya, Nintavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category