19/08/2026
கொழும்பு சென் ஜோன்சை வீழ்த்தி இறுதிக்கு முன்ன்றி நெல்லியடி மத்திய கல்லூரி அணி சாதனை!
தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் 16 வயதிற்குட்பட்ட மைலோ கிண்ணம் கால்பந்து சாம்பியன்சிப் போட்டியில் கொழும்பு சென் ஜோன்ஸ் அணியை வீழ்த்தி நெல்லியடி மத்திய கல்லூரி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
சிறிலங்கா பாடசாலைகள் காலபந்தாட்ட சம்மேளனத்தினால் 16 வயதிற்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான கால்பந்து சாம்பியன்சிப் தொடர் நடாத்தப்பட்டு வருகிறது.
வலயம், கோட்டம், மாவட்டம், மாகண மாட்டத்தில் பாட்சாலை அணிகளுக்கு இடையில் போட்டிகள் நடாத்தப்பட்டு நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. நெல்லியடி மத்திய கல்லூரி, கொழும்பு சென் ஜோன்ஸ், கொழும்பு சாகிரா கல்லூரி மற்றும் பதுளை தர்மதுத்தா கல்லூரி ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
கொழும்பு கம்பல் மைதானத்தில் நேற்று (18) பகல் 1.00 மணிக்கு நடைபெற்ற முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் கொழும்பு சென் ஜோன்ஸ் - நெல்லியடி மத்திய கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ஆட்ட நேர முடிவில் எந்த அணியும் கோல் எதனையும் அடிக்காது சமநிலை பெற்றன. இதையடுத்து வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் தண்ட உதை சுற்றில் 5:4 என்ற கோல்கள் கணக்கில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.