ஊரவன்

ஊரவன் சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வ? சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா??

20/03/2016

தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் புனராவர்த்தன அஷ்டபந்தன பிரதிஷ்டா நவ(9)குண்ட பக்ஷ மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 2016

Kondavil Poilai Thooddam
17/01/2015

Kondavil Poilai Thooddam

இலங்கை, பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த ஒரு முழுக்...
31/10/2014

இலங்கை, பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த ஒரு முழுக் கிராமமே நேற்று (29.10.2014) மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான மக்களை, அவர்கள் நேசித்த மண்ணே உயிருடன் விழுங்கிக் கொண்டுள்ளது. சடலங்கள் மீட்கப்படுகின்றன. 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு, இலங்கையில் பல நூறு உயிர்களைக் காவுகொண்ட இயற்கை அனர்த்தம் இதுவாகும். அதே போல இலங்கை, மலையக வரலாற்றில் இதுவரை இடம்பெற்றுள்ள மண் சரிவு அனர்த்தங்களில், இப்போது நிகழ்ந்துள்ள இந்த அனர்த்தத்தை மிகவும் மோசமான ஒன்றாகவும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்படலாம்.

இக் கிராமத்தில் குறைந்தபட்சம் ஐம்பத்தேழு தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த முந்நூற்றைம்பது நபர்களாவது வசித்திருக்கலாம் என நம்பப்படுவதோடு, இந்த அனர்த்தம் நிகழ்வதற்கு முன்னர் வெளிப் பிரதேச பாடசாலைக்குச் சென்ற சிறுவர்,சிறுமியர்,வேலைகளுக்காகச் சென்ற சில தொழிலாளர்கள் என ஒரு சிலரே அனர்த்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர். இழப்புக்கள் சம்பந்தமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும், போலிஸ் ஊடகப் பேச்சாளரும் ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்துச் சொல்லி தப்பித்துக் கொள்ள முற்படுகின்றனர். என்ற போதிலும், பல நூற்றுக்கணக்கான மக்களை நேற்று முதல் காணவில்லை. மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் முயற்சி, நேற்று காலநிலையைக் குறிப்பிட்டு கைவிடப்பட்டதோடு, இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நேற்றே முழுமையாக நடந்திருந்தால் ஒருவேளை சிலரையாவது உயிருடன் காப்பாற்றியிருந்திருக்கலாம்.

மலேசிய விமானம் காணாமல் போனபோது, அதில் பயணித்த உயிர்களுக்கு என்னவானது எனக் கேட்டு உலகமே ஆர்ப்பரித்தது. அவர்களுக்காகப் பிரார்த்தித்தது. Facebook, Twitter, Google plus போன்ற சமூக வலைத்தளங்களில் கூட, திரும்பிய பக்கமெல்லாம் அவர்களுக்கான பிரார்த்தனைகளும், உதவிகளும் பரந்திருந்தன. ஆனால், அதே போன்ற, கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையான உயிர்கள் இங்கும் காணாமல் போயிருக்கின்றன. மீட்கப்பட்டு, நிர்க்கதியான நிலையிலும் பல நூறு பேர் இருக்கின்றனர். ஆனால் மேற்சொன்ன சமூக வலைத்தளங்களிலோ, இணையத்தளங்களிலோ அவர்களுக்கான உதவிகளோ, பிரார்த்தனைகளோ கூட பரவலாக இல்லை. ஏனெனில், இவர்கள் இலங்கையின் ஒரு மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்மொழி பேசும் ஏழைகள். பூர்வீக நாடற்றவர்கள். வந்தேறு குடிகள். விரல் முனையில் உலகைச் சுற்றிவரும் மேற்தட்டு மக்களுக்கு, இவர்கள் இருந்தாலும் ஒன்றுதான். இவர்களை இழந்தாலும் ஒன்றுதான்.

யார் இவர்கள்? ஒரு பக்கம் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களோடும், மறுபக்கம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலாவணி, மிகக் குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற குடிசைகள், நோய்நொடிகள், வறுமை எனப் பலவற்றோடும் போராட வேண்டியிருக்கும் இம் மக்கள் தென்னிந்தியாவிலிருந்து ஏமாற்றி அழைத்து வரப்பட்ட அப்பாவி மலையகத் தோட்டத் தொழிலாளர்கள். நூற்றாண்டுகளாக இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திக்காக, எந்த அடிப்படை வசதிகளுமற்று அடிமைகளாக உழைக்கும் தமிழ் மக்கள் இவர்கள். எந்த அரசியல்வாதிகளாலும் கண்டுகொள்ளப்படாத ஏழைக் கூலி மனிதர்கள். யார், யாருக்காகவோ உழைத்துத் தேய்ந்து, தேயிலைச் செடிகளுக்கே உரமாகிப் போகும் அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகள்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தேர்தல்கால வாக்குகளுக்காகவும், ஏற்றுமதி வர்த்தகத்துக்கான உழைப்பாளிகளாகவும் மாத்திரமே இலங்கை அரசாங்கம் இவர்களைப் பார்க்கின்றது. இவர்கள் இந்திய வம்சாவளியினர் என்றபோதும், இந்திய அரசியல்வாதிகள் கூட இவர்களது உரிமைகளுக்காகவோ, இவர்களைத் தமது நாட்டில் மீள்குடியேற்றச் செய்யவோ எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள், ஈழத் தமிழர்களென மேடைகளில் கூச்சலிடுகிறார்கள். ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள். அவர்கள் செய்வதுவும், இந்த அப்பாவிகளை வைத்து, தமது ஆதரவாளர்களை உசுப்பி விடும் பம்மாத்து அரசியலன்றி வேறென்ன?

இலங்கை அரசு, உலகத்துக்கு தனது பகட்டையும், ஆடம்பரத்தையும் காண்பிப்பதற்காக நீரில் மிதக்கும் நகரங்களை நிர்மாணிக்கிறது. அதிவேகப் பாதைகளை அமைக்கிறது. இவற்றின் செலவுக்கான பணம், மேற்குறிப்பிட்ட ஏழை மக்களின் உழைப்பிலிருந்துதான் கிட்டுகிறது என்ற போதிலும், நான் மேலே சொன்ன எந்த வசதிகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இவர்களுக்கில்லை. அதிவேகப் பாதைகளை, பல மாடிக் கட்டிடங்களை, அதி நவீன ஹோட்டல்களை நிர்மாணிக்க முன்பு, தனது நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் எல்லா அடிப்படை வசதிகளும் கிட்டுகின்றனவா எனப் பார்க்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை. ஆனால் 'இவர்களை முன்பே இங்கிருந்து போகச் சொல்லிவிட்டோம்' எனச் சொல்லி இன்று அரசாங்கம் தப்பிக் கொள்ளப் பார்க்கிறது.

அரசாங்கமானது, வீடுகளைக் கட்டிக் கொடுத்து பாதுகாப்பாகக் குடியேற்ற வேண்டியது இவ்வாறான ஏழை மக்களைத்தானே தவிர, வசதியானவர்களையல்ல. வீண் ஆடம்பர அலங்காரங்களுக்காகவும், கிரிக்கட் வீரர்களுக்கும், நடிகர்களுக்கும் வீடு, வாகனம், காணிகளென பல கோடி ரூபாய்களைச் செலவழிக்கும் அரசாங்கம், இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதை என்னவென்பது?

உலகிலுள்ள எந்த மனிதரிடத்திலும், திடீரென எவரும் வந்து அவர்கள் பரம்பரையாக வாழ்ந்துவரும் இடத்திலிருந்து வெளியேறி 'நீ வேறெங்காவது போ' எனச் சொன்னால் அவர்கள் எங்குதான் செல்வர்? ஒருவரது இருப்பிடமென்பது பூமி மாத்திரமல்ல. அது அவர்களது உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் சுற்றிப் பிணைக்கப்பட்ட ஆன்மா. அந்த ஏழைகளை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் புலம் பெயரச் சொன்னால், அகதியாய் அலையச் சொன்னால், அதை விட்டும் அவர்களைத் தடுப்பது எது? ஜீவனோபாய வழி முறைகள்.

காலம், காலமாக தோட்டங்களையே நம்பி வாழும் ஏழைக் குடிகளுக்கு, அவர்களுக்கேற்ற ஜீவனோபாய வழிமுறைகளை அமைத்துக் கொடுத்து, தண்ணீர், மின்சார, கழிவறை வசதிகளோடு முறையான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அரசாங்கமே குடியேற்றி வைப்பதுதானே முறை? அதை ஒருபோதும் செய்யவில்லை. இப் பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் இருப்பதாக பல தடவைகள் எச்சரிக்கப்பட்ட போதிலும், இங்கு வாழும் அப்பாவித் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை இடம் மாற்றிக் குடியமைக்க அரசாங்கம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அண்மையில் நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக, இம் மலையகப் பிரதேசங்களில் போட்டியிட்ட வசதிபடைத்த அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் செலவிட்ட பணத்தில் ஒன்றிரண்டு சதவீதங்களைச் செலவழித்திருந்தால் கூட, இம் மக்களுக்கு ஆபத்தற்ற குடியிருப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்க முடியும்.

இவ்வாறான ஆபத்தான பல பிரதேசங்கள் மலையகத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிலுமே குடியிருக்கச் செய்யப்பட்டிருப்பது அப்பாவி ஏழைத் தோட்டத் தொழிலாளர்கள். இனியாவது அரசாங்கம் இவர்களைக் கருத்திற்கொண்டு உடனடியாக பாதுகாப்பான இடங்களில் இவர்கள் பத்திரமாகக் குடியேற ஏற்பாடு செய்ய வேண்டும். கேமராக்களின் முன்பும், ஊடகங்களின் முன்பும் இன்று பாய்ந்து பாய்ந்து உதவி செய்யும் அரசியல்வாதிகளும், தலைவர்களும் ஒரே நாளில் தமது தாய் தந்தையரை, சொந்தங்களை, இருப்பிடங்களை இழந்து நிற்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட எல்லா சிறுவர், சிறுமிகளதும் எதிர்காலம் சிறப்பாக அமையவும் உதவ வேண்டும். மீட்கப்பட்டவர்கள் உடல் காயங்களைப் போலவே, மனதளவிலும் அதிர்ந்து போயுள்ளனர். அவர்களுக்கான தக்க சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

நேற்றைய அனர்த்தத்தைப் பார்வையிட, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அங்கு பூஞ்சிரிப்போடு வருகை தந்திருக்கிறார். கேமராக்களின் முன்னர் பரிசுகள் போலச் சுற்றிய பார்சல்களை யார் யாருக்கோ அள்ளி வழங்குகிறார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திரும்பவும் போட்டியிடவிருக்கும் ஜனாதிபதிக்கு இந்த அனர்த்தத்தில் உதவிய புகைப்படங்களைக் காட்டியே வாக்குகளை அள்ளி விடலாம். அரசியல்வாதிகளுக்கு இவர்களது தேர்தல் கால வாக்குகள் மட்டும் போதும். இப்போதும் கூட அவர்கள், பல நூற்றுக்கணக்கான வாக்குகளை இழந்துவிட்டோமே என்றுதான் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்களே தவிர, பாவப்பட்ட இந்த உயிர்களுக்காகவல்ல !

குரலற்றோருக்கான குரல் (VOICE FOR VOICELESS)

02/03/2014
18/08/2013

Love This?
Panang Kizhangu (Sprouts of Palmyra Palm)

நல்லூர் கந்தசுவாமி கோவிலின்   வருடாந்த மகோற்சவ திருவிழா 2013  இன் கொடியேற்ற திருவிழா இன்று மிகவும் பக்தி  பூர்வமாகவும்  ...
12/08/2013

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவ திருவிழா 2013 இன் கொடியேற்ற திருவிழா இன்று மிகவும் பக்தி பூர்வமாகவும் மிகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.

புத்தூர் மேற்கில் அமைந்துள்ள இந்த அமைவிடம் யாழ் நகரில் இருந்து 16 ஆவது கிலோ மீற்றரில் யாழ் நகருக்கு வடதிசையில் அச்சுவேலி...
30/06/2013

புத்தூர் மேற்கில் அமைந்துள்ள இந்த அமைவிடம் யாழ் நகரில் இருந்து 16 ஆவது கிலோ மீற்றரில் யாழ் நகருக்கு வடதிசையில் அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராசவீதியும் புத்தூர் சுன்னாகம் நெடுஞ்சாலையும் சந்திக்கும் முச்சந்திக்கும் வடக்குப் புறமாக உள்ளது. வலி கிழக்குப் பிரதேச செயலளர் பிரிவின் வடமேற்கு எல்லையில் வலிகிழக்கு பிரதேச சபையின் புத்தூர் உப அலுவலகத்தின் உள்ளூராட்சி ஆளுகைக்கு உட்பட்டது. நிலாவரை என அழைக்கப்படும் இந்த அமைவிடம் நவக்கிரி, அச்செழு, கலைமதி, சிறுப்பிட்டி கிராமங்களுக்கு நடுவிடத்தில் அமைந்திருப்பதோடு புத்தூர் கமநல சேவை நிலையம் சுதேச வைத்திய திணைக்களத்தின் மூலிகைத் தோட்டம், கமநல சேவை திணைக்களத்தின் உரக்களஞ்சியம், வாதாரவத்தை குடிநீர் விநியோகத்திட்டத்திற்கான நீரை வழங்கும் தேசிய வடிகாலமைப்பு குடி நீர் விநியோக அதிகார சபையின் ஆழ் துளைக்கிணறு பாதுகாப்பு தரப்பினரின் நிலாவரை இராணுவ முகாம் பாதுகாப்பு தரப்பினரால் நிர்மாணிக்கப்பட்ட அறு கோண கூரை அமைப்புக் கொண்ட முருகன் கோயில் படையினரின் தேனீர்சாலையுடன் கூடிய விற்பனை நிலையம் மற்றும் சில குடும்பங்களின் வாழ்விடங்களான இல்லங்களையும் கொண்டது. அண்மைக்காலம் வரை மிக அமைதியாகவும் ஆள் அரவமற்ற பிரதேசமாகவும் காணப்பட்டது. உள்ளூர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஒரு சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கும் வழிப்போக்கர்கள் மற்றும் விவசாயிகள் இளைப்பாறிச் செல்லும் இடமாகவும் விளங்கியது. ஏ9 பாதை திறக்கப்பட்டு இயல்பு நிலை ஏற்பட்டதை அடுத்து வெளிமாவட்டங்களில் இருந்து யாழ் குடா நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் தரிசனத்துக்கு தப்பிவிடாமல் உற்று நோக்கப்படும் மிக முக்கியமான சுற்றுலா மையம். நளாந்தம் வெளிமாவட்ட சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் பல ஒரே நேரத்தில் தரித்து நிற்பதையும் பல நூற்றுக் கணக்கான பயணிகள் ஆறுதலாக அமர்ந்திருந்து உண்டு மகிழ்ந்து வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். தென்னிலங்கையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்ணில் படாமல் நிலாவரை தப்புவது இல்லை. அது மட்டுமல்ல நிலாவரைச் சூழலை தமது கமராக்கள் வீடியோ பதிவுகளுக்கு உள்ளாக்காமல் விடுவதும் இல்லை. சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்கும் யாழ் மாவட்டத்துக்குச் சிறப்பாக உரிய பனம் பண்டங்களையும், பனையோலை கைப்பணிப் பொருட்களையும், யாழ்ப்பாணத்து சின்ன வெங்காயத்தையும், மாம்பழத்தையும் விற்பதற்கு நடைபாதை விற்பனை நிலையங்கள் மணிப்பிரவான நடையில் சிங்களத்ததையும் தமிழையும் கலந்து பேசும் நடைபாதை வியாபாரமும் பார்ப்போரை கவர்ந்திழுக்காமல் இல்லை. அது மட்டுமல்ல தென்னிலங்கை கைப்பணிப்பொருள் கித்துள் பனங்கட்டி, பல்வேறு வகையான வளையல்கள் மற்றும் உணவு நிலையங்களும் வகை வகையாக வந்தோரை வரவேற்றவண்ணம் உள்ளன. மேலும் விசாலமான சிற்றுண்டிச் சாலைகளும் தமிழ், சிங்கள சிறப்புச் சிற்றுண்டிகளும் சைவ உணவு அசைவ உணவு வகைகள் உள்ளடக்கியதாக உள்ளன. நிலாவரைக்கும் நவசைலேஸ்வரத்துக்கும் பூர்வீகமான புராண இதிகாச கதைத் தொடர்புகளும் கர்ண பரம்பரைக் கதைத் தொடர்புகளும் பல உண்டு. அந்த வகையில் இராம பிரான் தமிழ் வேந்தன் இராவணணை சங்காரம் செய்து விட்டு வடநாடு திரும்பும் போது ஸ்தாபித்த தலம் தான் நவசைலேஸ்வரம் என்றும் அவரது அம்பினால் தோண்டப்பட்டது தான் நிலாலவரை வற்றாத நீர் நிலை என்றும் கூறப்படுவது உண்டு. நிலாவரை வற்றா நீர் நிலை மற்றும் நவசைலேஸ்வரம் தொடர்பாக இராமயணத்துடன் தொடர்புபடுத்தியும் கர்ணபரம்பரையாகவும் பல்வேறு கதைகள் சம்பவங்கள் கூறப்பட்ட போதிலும் நிலாவரை வற்றாநீர் நிலைக்கு புவியியல் ரீதியிலான விஞ்ஞான விளக்கமும் நவசைலேஸ்வரத்துக்கு பூர்வீக வரலாற்றோடும் சிவன் வழிபாட்டோடும் தொடர்பான வரலாறும் உண்டு. இது உண்மைதான் என்பது சில சான்றுகள் மூலம் உறுதி செய்யப்படுகின்றது. நல்லூர் இராசதானிக் கால ஆலயங்கள் பற்றிக் கூறும் போது தக்ஷிணகைலாய புராணத்தின் நவசைப்படலத்தில் புத்தூரில் இருந்த சிவன் கோயில் பற்றியும் அதன் கேணி பற்றியும் நந்தவனம் பற்றியும் கூறப்படுவதோடு குறித்த ஆலயத்தை வழிபட்ட அடியார்கள் பெற்ற நன்மைகள் பேறுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்படும் சிவன் கோயில் நவசைலேஸ்வரம் சிவன் கோயில் தான் என்று ஒரு சாரார் கூறும் அதே வேளையில் சிலர் இதில் கூறப்படும் சிவன் கோயில் புத்தூர் சிவன் கோயில் எனக் கூறுவதும் உண்டு. நவசைலேஸ்வரம் புராதனமானதும் தல மகிமை கொண்டதும் பூர்வீகமானதும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. இந்த ஆலயம் ஈழத்தில் சிறப்பு பொருந்திய ஆறு ஈஸ்வரங்களில் ஒன்று. அதன் பூர்வீகம் போர்த்துக்கீசர் காலத்தில் இடித்து அழிக்கப்பட்டது. ஆலயத்தின் பூர்வீக விக்கிரகங்கள் முன்னோரால் அயலில் உள்ள கிணற்றில் இடப்பட்டு மறைக்கப்பட்டது. பிற்பட்ட காலத்தில் இறையருளால் மீட்டெடுக்கப்பட்டு தற்போதைய ஆலயம் கட்டப்பட்டு அதில் பிரதிஷ்டை செய்யப்பட்டது எனக் கூறப்படுகின்றது. போர்த்துக்கீசரால் முற்றாக இடித்து அழிக்கப்பட்ட பூர்வீக ஆலயத்தின் அடித்தளமும் சுற்றுப்பிரகாரமும் தற்போதைய ஆலயத்தக்கு அருகில் மண்ணுள் மறைபட்டுள்ளது. சில இடிபாடுகள் மண்ணுக்கு மேல் இப்பொழுதும் காணப்படுகின்றன எனக் கூறப்படுகின்றது. நவசைலேஸ்வரத்தில் தற்போது காணப்படும் ஆலயம் 1948ஆம் ஆண்டு காலப்பகுதியில் எதிர்பாராத விதமாக மீட்டெடுக்கப்பட்டு கட்டப்பட்டது. ஆலயத்தின் முக்கிய விக்கிரகங்கள் மற்றும் மூல மூர்த்தியாகிய சிவலிங்கமும் ஆலயத்துக்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. தற்போதைய ஆலயத்தை நிர்மாணித்த பரம்பரைப் பூசகரான வேலுப்பிள்ளை சுப்பையாவும் அவரின் மனையாள் சிவக்கொழுந்தும் பூசை வழிபாடு செய்தனர் என்றும் வேலுப்பிள்ளை சுப்பையாவின் பேரனும் தற்போதைய ஆலய பரிபாலன சபையின் தலைவருமான வேலுப்பிள்ளை அருணாசலம் தெரிவிக்கின்றார். தற்பொழுது காணப்படும் ஆலயம் வெளிச் சுற்றப்பிரகாரத்துடன் சிறிய ஆலயமாக அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் நித்தியபூஜைகள் வழிபாடுகளுக்கு புலம்பெயர்ந்த உறவுகள் நிதி உதவி வழங்கிவருகின்றனர். ஆலயத்தின் தற்போதைய தினசரி பூசையை அச்சேழுவைச் சேர்ந்த சிவஸ்ரீ விக்னேஸ்வரக்குருக்களும் அவர்களது குடும்பத்தினரும் மேற்கொண்டுவருகின்றனர். ஆலயத்தின் தீர்த்தமாக வற்றாநீர் ஊற்று காணப்படுகின்றது. ஆலயத்தின் முன்றலில் சில மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வற்றா நீர் ஊற்றுக்கு இறங்குவதற்கு மேற்கு கிழக்காக பல படிகள் கட்டப்பட்டு தேவையின் நிமித்தம் படிக்கட்டுக்களை பயன்படுத்தி இறங்கி ஏறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் 20 ற்கும் மேற்பட்ட படிக்கட்டுக்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆலயமும் ஆலய வாசலில் அமைந்துள்ள வற்றா நீர் ஊற்றும் அத்தோடு இணைந்து நூற்றாண்டுக்கு மேற்பட்ட வளர்ச்சி கொண்ட மரங்கள் நிறைந்த சுற்றாடலும் ஆலயத்தின் சூழலை அழகூட்டுவனவாக இருப்பதோடு வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் மையமாகவும் விளங்குகிறது. வலி.கிழக்கில் புராதன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தனித்துவம் மிக்கதாகவும் அழகும் அமைதியும் நிறைந்த இடமாகவும் விளங்கும் நிலாவரை ஆழ் கிணறு தொடர்பாக புராண இதிகாசங்களில் இடம்பெறுவதாக கூறப்பட்ட போதிலும் அதனுடன் தொடர்பான சுலோகங்களோ பாடங்களோ இது வரை கண்டறியப்படவில்லை எனக் கூறப்படுகின்ற அதே வேளையில் வற்றாதநீர் நிலை அமைப்பதற்கு வரையறை செய்யப்பட்டு கூறப்படும் நியாயங்களும் வரைவிலக்கணமும் விஞ்ஞான ரீதியில் வேறுபட்டதாக அமைந்துள்ளன. மூலம்- http://www.siruppiddy.net

How is it??
30/06/2013

How is it??

Love This?Panang Kizhangu (Sprouts of Palmyra Palm)
28/06/2013

Love This?
Panang Kizhangu (Sprouts of Palmyra Palm)

தேனொழுகும் யாழ்ப்பாணத்து பலாப்பழம்... நினைக்கவே வாயூறும் ....Jaffna Jack fruit , great in Taste!Thanks: I Like Jaffna
11/04/2013

தேனொழுகும் யாழ்ப்பாணத்து பலாப்பழம்... நினைக்கவே வாயூறும் ....
Jaffna Jack fruit , great in Taste!


Thanks: I Like Jaffna

Can you know the Name of this fruit?Thanks: I Like Jaffna
06/04/2013

Can you know the Name of this fruit?


Thanks: I Like Jaffna

Address

Nallur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஊரவன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share