மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை

மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை

Share

இலங்கை சைவநெறிக் கழகத்தினால் சொய்சாப்புரம் (மொறட்டுவ) பகுதியில் நடத்தப்படும் சைவசமய அறநெறிப் பாடசாலை

Photos from மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை's post 22/07/2026

இன்று சுந்தரமூர்த்தி நயனாரின் குருபூசை. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், குருபூசை அனைத்து சிவாலயங்களிலும் கொண்டாடப்படுகிறது.

திருச்சிற்றம்பலம்
பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்
போக முந்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம் வைகும் வயற்பழ னத்தணி
ஆரூரானை மறக்கலு மாமே…..
திருச்சிற்றம்பலம்

20/07/2026
Photos from மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை's post 19/07/2026

சைவத்திரு சிவபாலகணேசன் பெருமகனாரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் எமது மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையில் இன்று நடைப்பெற்றது. எமது அறநெறிப் பாடசாலையிற்கு வித்திட்ட எமது
சித்தாந்தப்பேராசானை நினைவில் நிறுத்தி வழிபாடு நிகழ்த்தப்பட்டது. அத்துடன் இலங்கை சைவநெறிக்கழகத்தின் பொருளாளர் சைவத்திரு கோ.இளையராஜா அவர்களினால் சிறு உரையும் நிகழ்த்தப்பட்டது.

Photos from மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை's post 13/07/2026

சிறார்களின் நற்சிந்தனை நிகழ்வின் பதிவுகள் சில

Photos from மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை's post 13/07/2026

சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையில் வாரந்தோறும் மாணவர்களால் நற்சிந்தனை நிகழ்வு இடம்பெறுகிறது. அத்துடன் இங்கு நாவலர்பெருமான் எழுதியருளிய நித்திய கரும விதிப்படியான சைவ அநுட்டானப் பயிற்சியும் இடம்பெறுகிறது. மாணவர்கள் ஆர்வத்துடன் அனுட்டான பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் வருமாறு:

Photos from மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை's post 28/06/2026

சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையில் இன்று மாணவர்களுக்கு பூ மாலை கட்டுதல் வகுப்பு சைவத்திரு. ராகுலன் ஆசிரியரால் பயிற்றுவிக்கப்பட்டது. நாவலர்பெருமான் எழுதியருளிய நித்திய கரும விதிப்படியான சைவ அநுட்டானப் பயிற்சியும் இடம்பெற்றது. அத்துடன் வாரந்தோறும் எம் மாணவர்களுக்கு அனுட்டான பயிற்சி இங்கு வழங்கப்படுகிறது.

Photos from மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை's post 21/06/2026

திருநெறி நின்று ஒருநெறி போற்றி நலமிகு நன்னெறியை நமக்கு காட்டி உயர்வான மாசற்ற மாணிக்க ஒளியை ஒத்த செம்பொருளான சிவப்பரம்பொருளை தம் வாசகத்தால் பாடி உய்வடைந்து, எம் பெருமான் திருவடி தீக்கை நல்க ஈடற்ற திருவடி பேற்றினை பெற்ற மாணிக்கவாசகப் பெருமானாரின் குருபூசை இலங்கை சைவநெறிக் கழகத்தின் சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது.

அத்தோடு, பெருமகனாருடைய வாழ்வையும் திருவாசகத்தையும் சிந்திக்கும் பொருட்டு மாணவர்களுடைய நிகழ்ச்சிகள் அமையப்பெற்றன.

மாணிக்கவாசகப் பெருமானார் காட்டி உணர்த்திய பெருநெறியில் வழுவாது நின்றொழுகுவதே அப்பெருமகனார்க்கு நாம் செய்யும் குருபூசை!!!

Photos from மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை's post 08/06/2026

திருஞான சம்பந்த நாயனாரின் குருபூசையை முன்னிட்டு, இலங்கை சைவநெறிக் கழகத்தின் சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையில் 07.06.2026 அன்று சிறப்புப் பூசையை மாணவர் நடத்தி வழிபட்டனர். அன்றைய தினம் வழமைபோன்று மாணவர்களுக்குரிய வகுப்புப் பாடங்கள் நடைபெற்றன.

Want your school to be the top-listed School/college in Moratuwa?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Soysapura, Moratuwa
Moratuwa