Learnviatec

Learnviatec Education in Technology and Technology in Education are co-related

ஆங்கிலத்தில் பேச பயமாக உள்ளதா? இனி பயம் வேண்டாம்.*நிறுவனங்களில் தொழில் புரிபவரா நீங்கள்?*பல்கலைக்கழக கல்வியை தொடருபவரா ந...
23/07/2020

ஆங்கிலத்தில் பேச பயமாக உள்ளதா? இனி பயம் வேண்டாம்.
*நிறுவனங்களில் தொழில் புரிபவரா நீங்கள்?

*பல்கலைக்கழக கல்வியை தொடருபவரா நீங்கள்?

*கல்வியற் கல்லூரிகளுக்கு தெரிவாகியுள்ளோரா நீங்கள்?

*சாதாரண தர,உயர்தர பரீட்சையை முடித்துவிட்டு இருப்பவரா நீங்கள்?

*ஆங்கில பிரியர்களா நீங்கள்?

இதோ வீட்டிலிருந்தே ஆங்கிலத்தை சரளமாக பேச நீங்கள் தயாரா?

வகுப்புக்கள் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7மணிமுதல் 8மணிவரை zoom application ஊடாக நடை பெறும்.
வகுப்புக்கள் அனைத்தும் நிறைவடைந்த பின்பு பரீட்சைகள் வைக்கப்பட்டு சான்றுதல்களும் வழங்கப்படும்.அது மட்டுமல்லாது உங்களின் மீது தனிப்பட்ட முறையிலும் அதிக கவனம் எடுக்கப்படும்.
உங்களாலும் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியும்.
ஆங்கிலத்தில் தங்களையும் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள்
கீழுள்ள இலக்கத்திற்கு இப்பொழுதே தொடர்பு கொண்டு தங்களின் பெயரை பதிவு செய்துக் கொள்ளுங்கள்.
More details 0762845431
whatsapp direct Link :- ( https://wa.me/94757039141 )

Google Meet இனைப் பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளுவோம்.Google நிறுவனமானது தனது வீடியோ காணொளி மாநாடு பயன்பாட...
08/05/2020

Google Meet இனைப் பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளுவோம்.

Google நிறுவனமானது தனது வீடியோ காணொளி மாநாடு பயன்பாடான Google Meet இனை அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த வீடியோ அழைப்பு சேவை பயனர்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் உள்ளது.

இந்த Google Meet App ஆலோசனை கூட்டம் மற்றும் கல்வி சம்பந்தமான அழைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் வழியாக அனைவரும் இலவசமாக வீடியோ அழைப்பை மேற்கொள்ளலாம் என Google நிறுவனம் தெரிவித்துள்ளது. Google Meet மூலம் ஒரு வீடியோ அழைப்பில் 100பேரை பங்கேற்க அனுமதிக்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு Gmail மற்றும் Google Docs உள்ளிட்ட வணிகக் கருவிகளின் இலவச பதிப்பக்களை Google நீண்டகாலமாக வழங்கியிருந்தாலும்¸ தற்போது தொடங்கப்பட்ட இந்த புதிய சேவையான Google Meet இற்கு சமமானதாக எதுவும் இல்லை.

இலவச பதிப்பில் பதிவுபெற நீங்கள் Google Meet பக்கத்தைப் பார்வையிட வேண்டும். கூகுள் சந்திப்புக்கான (தனிப்பட்ட நபர்¸ வணிகம்¸ கல்வி அல்லது அரசு துறைகள்) பெயர்¸ மின்னஞ்சல்¸ நாடு மற்றும் முதன்மை பயன்பாடு போன்ற விவரங்களை உள்ளிடவும். மேலும் கூகுள் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டவுடன்¸ சமர்ப்பி என்பதை அழுத்தவும். நீங்கள் பயன்படுத்த சேவை தயாராக இருக்கும்போது உங்களுக்கு அறிவிப்பு வரும். பின்னர் அழைப்பதற்கு இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.

1. முதலில் meet.google.comக்குச் செல்லவும்¸ பின்பு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயன்பாடுகளிலும் பயன்பாட்டைத் திறக்கலாம்.

2. புதிய சந்திப்பைத் தொடங்கு என்பதைக் கிளிக் செய்க¸ அல்லது உங்கள் கூட்டக் குறியீட்டை உள்ளிடவும்.

3. பின்னர் நீங்கள் பயன்படுத்த விரும்பும் கூகுள் கணக்கைத் தேர்வுசெய்க.

4. அடுத்து கூட்டத்தில் சேர் என்பதை கிளிக் செய்க.

இப்போது உங்கள் சந்திப்பில் மற்றவர்களையும் இணைக்கும் வசதி உங்களுக்கு கிடைக்கும். இனி நீங்கள் வீடியோ அழைப்பை மேற்கொள்ளலாம்.

08/05/2020

கற்றலில் நவீன தொழிநுட்பங்கள் என்றும் நமது Learn Via Tech

தொலைபேசி என்பது
08/05/2020

தொலைபேசி என்பது

விரல் நுனியில் உலகம், நினைத்த நேரத்தில் தொடர்பு, கருத்துப் பரிமாற்றம்... என செல்போன்களால் பலவித நன்மைகள் இருக்க....

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்ய எளிய வழிமுறைகள்
08/05/2020

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்ய எளிய வழிமுறைகள்

இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் வரும். உடலில் உள்ள இ....

06/05/2020

Services from learnViaTec Grade 1 to Advanced level

Online Learning and Guiding Videos
Online exams
Unit exam papers
Term exam papers
Model exam papers
All kinds of education materials

06/05/2020

Learn Via Tec

05/05/2020

நவீன தொழிநுட்பத்தகவல்கள்¸ கல்வி தொடர்பான தொழினுட்ப விடயங்கள் என்பன தொடர்பாக அறிந்து கொள்ள இந்தப் பக்கத்துக்கு விஜயம் செய்யுங்கள்.

அதிக நேரம் கணிணியில் இருப்பவர்களே!இன்று எந்த வேலையாக இருப்பினும் கணினி முன்பு அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கிறது. இதனால...
05/05/2020

அதிக நேரம் கணிணியில் இருப்பவர்களே!

இன்று எந்த வேலையாக இருப்பினும் கணினி முன்பு அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கிறது. இதனால் கணினியினை அதிகம் பயன்படுத்துபவர்கள் உடல் நலத்திலும் அக்கறை எடுத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. கணிணி முன்பு அதிகம் வேலை செய்பவர்கள், உடல்நலத்தில் அக்கறை எடுத்து கொள்வதற்கான சில ஆலோசளைகள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

1. முதலில் அதிக நேரம் கம்ப்யூட்டரை பார்ப்பவர்கள் கண்கள் மேல் கவனம் செலுத்த வேண்டும். மிக பக்கத்தில் இருந்து கம்ப்யூட்டர் திரையில் வெளிச்சத்தினை பார்ப்பதால், கண்கள் பாதிப்படைய நிறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் 15 நிமிடத்திற்கு ஒருமுறை கண்களுக்கு ஒய்வு கொடுப்பது நல்லது. அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இது சாத்தியப்படாது. இதற்கும் வழி இருக்கிறது. உள்ளங்கையை கண்கள் மேல் வைத்து ஒரு இரண்டு நிமிடம் ஒய்வு கொடுக்கலாம். இது ஓரளவு கண்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றும்.

2. தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும் நபர்கள், பத்து நிமிடத்திற்கொருமுறை கைகளையும், உடலையும் நீட்டி மடக்கி சிறிய உடற்பயிற்சி செய்து கொள்வது மிக நல்லது.

3. கணினியின் முன் அமர்ந்து தட்டெழுத்திடுகையில் உடலை நேர்கோட்டில் வைத்திருப்பது மிக அவசியமான ஒன்று. இதனால் முள்ளந்தண்டு நேராக இருக்கும். இதனால் உடல் வலி அதிகம் வருவதை குறைக்கலாம்.

4. பாதங்களை தரை மீது சமமாக வைத்திருப்பது இன்னும் சிறந்தது. உடலின் அனைத்து பலமும் பாதத்தின் மேல் இருப்பதால், பாதத்தினை சமநிலையில் வைத்து கொள்ள வேண்டும்.

5. தட்டெழுத்திடும் போது போது முழங்கைகள், இடுப்பின் பக்கத்தில் வைத்திருப்பது கைகளுக்கு உதவியாக இருக்கும். இதனால் சரியான முறையில் அமர்ந்து தட்டெழுத்திடவும் முடியும். அதோடு தோள்பட்டை வலியினையும் குறைத்துக்கொள்ள முடியும்.

6. கணிணி திரையின் வெளிச்சத்தினை குறைத்து வைத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாகும். இதனால் கண்களை எளிதாக பாதுகாக்கலாம். இங்கே கூறப்பட்டுள்ளதெல்லாம் சின்ன சின்ன விடயங்கள் என புறக்கணித்து விடாது இதனை பின்பற்றி உடலை நல்லமுறையில் பாதுகாப்போமாக.

அதிக நேரம் கணிணியில் இருப்பவர்களே!இன்று எந்த வேலையாக இருப்பினும் கணினி முன்பு அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கிறது. இதனால...
05/05/2020

அதிக நேரம் கணிணியில் இருப்பவர்களே!
இன்று எந்த வேலையாக இருப்பினும் கணினி முன்பு அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கிறது. இதனால் கணினியினை அதிகம் பயன்படுத்துபவர்கள் உடல் நலத்திலும் அக்கறை எடுத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. கணிணி முன்பு அதிகம் வேலை செய்பவர்கள், உடல்நலத்தில் அக்கறை எடுத்து கொள்வதற்கான சில ஆலோசளைகள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

1. முதலில் அதிக நேரம் கம்ப்யூட்டரை பார்ப்பவர்கள் கண்கள் மேல் கவனம் செலுத்த வேண்டும். மிக பக்கத்தில் இருந்து கம்ப்யூட்டர் திரையில் வெளிச்சத்தினை பார்ப்பதால், கண்கள் பாதிப்படைய நிறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் 15 நிமிடத்திற்கு ஒருமுறை கண்களுக்கு ஒய்வு கொடுப்பது நல்லது. அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இது சாத்தியப்படாது. இதற்கும் வழி இருக்கிறது. உள்ளங்கையை கண்கள் மேல் வைத்து ஒரு இரண்டு நிமிடம் ஒய்வு கொடுக்கலாம். இது ஓரளவு கண்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றும்.

2. தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும் நபர்கள், பத்து நிமிடத்திற்கொருமுறை கைகளையும், உடலையும் நீட்டி மடக்கி சிறிய உடற்பயிற்சி செய்து கொள்வது மிக நல்லது.

3. கணினியின் முன் அமர்ந்து தட்டெழுத்திடுகையில் உடலை நேர்கோட்டில் வைத்திருப்பது மிக அவசியமான ஒன்று. இதனால் முள்ளந்தண்டு நேராக இருக்கும். இதனால் உடல் வலி அதிகம் வருவதை குறைக்கலாம்.

4. பாதங்களை தரை மீது சமமாக வைத்திருப்பது இன்னும் சிறந்தது. உடலின் அனைத்து பலமும் பாதத்தின் மேல் இருப்பதால், பாதத்தினை சமநிலையில் வைத்து கொள்ள வேண்டும்.

5. தட்டெழுத்திடும் போது போது முழங்கைகள், இடுப்பின் பக்கத்தில் வைத்திருப்பது கைகளுக்கு உதவியாக இருக்கும். இதனால் சரியான முறையில் அமர்ந்து தட்டெழுத்திடவும் முடியும். அதோடு தோள்பட்டை வலியினையும் குறைத்துக்கொள்ள முடியும்.

6. கணிணி திரையின் வெளிச்சத்தினை குறைத்து வைத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாகும். இதனால் கண்களை எளிதாக பாதுகாக்கலாம்.

இங்கே கூறப்பட்டுள்ளதெல்லாம் சின்ன சின்ன விடயங்கள் என புறக்கணித்து விடாது இதனை பின்பற்றி உடலை நல்லமுறையில் பாதுகாப்போமாக.

Address

5/2 Sir Richard Aluvihare Mawattha
Matale

Alerts

Be the first to know and let us send you an email when Learnviatec posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Learnviatec:

Shortcuts

Share