26/07/2026
வரலாற்றில் முதன் முறையாக அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டியில் பிரிவு -01 இற்கான பாவோதல் போட்டியில் செல்வி த. தக்சினி மூன்றாம் இடத்தைப் பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். இதற்கு வழிகாட்டியாக இருந்த பாடசாலையின் அதிபர் திரு. S. கிருஸ்ணகுமார் ஐயா மற்றும் பெரிதும் வழிகாட்டியாக இருந்த திரு.S.பரமேஸ்வரன் ஐயா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் பயிற்றுவித்த ஆசிரியை திருமதி.C.S. மேரி அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.