Sri Sigaram Foundation - Maskeliya

Sri Sigaram Foundation - Maskeliya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Sigaram Foundation - Maskeliya, Educational consultant, Maskeliya, Maskeliya.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்கள் ஸ்ரீ சிகரம் அறக்கட்டளையின் ஸ்தாபகர் மற்றும் பணிப்பாளர் திருமதி. அகிலா கயிலைநாதன் அம்...
21/07/2024

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்கள் ஸ்ரீ சிகரம் அறக்கட்டளையின் ஸ்தாபகர் மற்றும் பணிப்பாளர் திருமதி. அகிலா கயிலைநாதன் அம்மா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Happy birthday to you Ahila Kalainathan madam....

24/12/2023
சாதனைப்பெண்மணி திருமதி அகிலா கைலைநாதன்                       ————————————-பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கம் நடாத்திய "வருக ...
24/12/2023

சாதனைப்பெண்மணி திருமதி அகிலா கைலைநாதன்
————————————-

பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கம் நடாத்திய "வருக 2024" நிகழ்வில் பலதுறைசார் பணிகளுக்காக பன்னிரண்டு பிரான்ஸ் வாழ் ஆற்றலாளர்களுக்கு "தகமைசால் தமிழர் விருது" வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.இவ் நிகழ்வானது கடந்த 17.12.23 அன்று பாரிஸில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது
இவ்விழாவில் France paris ல் வாழ்ந்துவரும் தையல் கலை நிபுணர், மற்றும் சமூகசேவகி (sri sigaram foundation ) ஸ்தாபகர்.திருமதி அகிலா கயிலைநாதன் கெளரவிக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது.
ஒரு காலத்தில் அதாவது France ல் ஈழத்தமிழர்கள் வந்து குடியேறிய ஆரம்ப காலங்களில் Paris ல் ஒரு சில வர்த்தக நிலையங்கள் மட்டுமே இருந்தன.அதாவது paris la Chappell வர்த்தக நிலையங்கள் உருவாக முன்பு
Markadet poissonier என்ற இடத்தில் ஒரு சில வர்த்தக ஸ்தாபனங்களே இருந்தன.அதில் ஒரு பகுதியில்தான் திருமதி அகிலா கயிலைநாதன் சிறிது காலம் தனது தையல்கலையை பெண்களுக்குப் புகட்டி (தையல் நிலையம் ) நடத்திவந்தார்.
இதனால் நமது தமிழ் பெண்கள் இலகுவாக
தமிழில்பேசி தங்கள் தேவைகளை பூர்த்திசெய்யக்கூடியதாக இருந்தது பணத்தை விட சேவை மனப்பான்மையே அதிகம் கடைப்பிடித்தார். திருமதி அகிலா அன்றிலிருந்து இன்றுவரை தனது தையல்கலையை தொடர்ந்து பயிற்றுவித்து ஊக்கமளித்து வருகிறார்.அதைவிட
பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சின் ( ministry of defence - France ) கீழ் இயங்கும் பிரான்ஸ் சரித்திர இராணுவ அருங்காட்சியகத்தில்(costumirere de musee de l'Armee ) என்ற பதவியில் கடமையாற்றினார்.
நூறுவருடத்துக்கு மேற்பட்ட அந்த அருங்காட்சியகத்தில் போர் விளக்க கண்காட்சிக்காக பண்டைக்கால சீருடையை முதல் முதல் மீளமைத்த தையற்கலைஞர் என்ற பெயருடன் தொடர்ந்து 87 புராதன சீருடைகள் இவரால் மீளமைக்கப்பட்டது.
அத்தனை சீருடைகளின் உள் பகுதியிலும் அகிலா என்ற பெயருடன் ஆண்டாண்டுக்கும் அழியாத பொக்கிஷமாக அந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப் படுகின்றது . இவற்றை பிரான்சில் உள்ள வேறு பல அருங்காட்சியகங்களும் வாங்கி கண்காட்சிப்படுத்தி பாதுகாப்பாக திருப்பிக் கொடுக்கிறார்கள் என்பதைப்பார்கின்றபோது இவர் திறமையை வார்த்தைகளால் வடிக்க முடியாது.இவ்வாறாக தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவரும் France ல் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகசெயற்பாட்டாளரும் தையல்கலை நிபுணருமாகிய திருமதி அகிலா கயிலைநாதன் அவர்கள் உண்மையில் பாராட்டுக்குரியவர்.இவருடைய தையல்கலைப்பணியும் சமூகப்பணியும்
தொடர்ந்து சிறப்புற்று விளங்க நாமும் வாழ்த்துகின்றோம்.

21/07/2023

ஸ்ரீ சிகரம் அறக்கட்டளையின் ஸ்தாப தலைவி திருமதி, அகிலா கயிலைநாதன் அம்மையார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

Happy birthday to you Ahila Kalainathan

17/03/2023
31/12/2022

இன்று தனது பிறந்த தினத்தை கொண்டாடும், எங்களுடைய ஸ்ரீ சிகரம் பவுண்டேஷனின், பாரிஸ் பாடசாலையில் மாணவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பிரான்சில் (France) இருந்து அனுசரணை வழங்கிக்கொண்டிருக்கும் திருமதி. அமுதினி கிருபா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை ஸ்ரீ சிகரம் அறக்கட்டளை சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Happy Birthday to you Madam..

ஸ்ரீ சிகரம் பவுண்டேஷனின் நிறுவுனர் திருமதி. அகிலா கையிலைநாதன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய வருடாந்த ஒன்று கூடல் மற்றும் எதி...
04/12/2022

ஸ்ரீ சிகரம் பவுண்டேஷனின் நிறுவுனர் திருமதி. அகிலா கையிலைநாதன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய வருடாந்த ஒன்று கூடல் மற்றும் எதிர்கால திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடல், நேற்றைய தினம் நோர்வூட் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் ஸ்ரீ சிகரம் அறக்கட்டளையின் ஆலோசகர்களான ஹட்டன் கல்வி வலையத்தின் ஆசிரியர் ஆலோசகர்களான திரு சாந்தகுமார், திருமதி. கமலராணி மற்றும் திருமதி. தமயந்தி, மற்றும் திரு.இராஜேந்திரன் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக ஹட்டன், மஸ்கெலியா மற்றும் பொகவந்தலாவ பிரதேசங்களில் ஸ்ரீ சிகரம் அறக்கட்டளையின் எதிர்கால வேலை திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது ஸ்ரீ சிகரம் அறக்கட்டளையின் பிரதேச இணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Address

Maskeliya
Maskeliya

Telephone

+94772930917

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Sigaram Foundation - Maskeliya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share