27/05/2026
அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களே!
உங்கள் மேலான உழ்ஹிய்யா நன்கொடைகளில் எமது கல்லூரியையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
📞077 335 5162
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 𝐀𝐍-𝐍𝐀𝐇𝐋𝐀𝐇 𝐀𝐑𝐀𝐁𝐈𝐂 𝐂𝐎𝐋𝐋𝐄𝐆𝐄, College & University, Nooraniya Road, Maruthamunai.
மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 30 வருடங்களாக நாடுபூராவும் பல ஹாபிழ்களையும், உலமாக்களையும் உருவாக்கி வரும் ஓர் இஸ்லாமிய கல்வி நிறுவனமாகும்.
எமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
27/05/2026
அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களே!
உங்கள் மேலான உழ்ஹிய்யா நன்கொடைகளில் எமது கல்லூரியையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
📞077 335 5162
27/05/2026
அனைவருக்கும் இனிய தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை
21/05/2026
அல்ஹம்துலில்லாஹ்!
எமது கல்லூரி மாணவன் எம்.எஸ். ஸபிf அஹமட் தனது 17 ஆவது ஜுஸ்உவினை 09 நாட்களில் எமது உஸ்தாத்மார்களின் ஒத்துழைப்போடு திறன்பட மனனம் செய்து முடித்துள்ளார்.
அவரின் கல்விப் பணி சிறக்க உங்கள் மேலான பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.
ஹிப்ழ் பிரிவு,
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி,
மருதமுனை
21/05/2026
மருதமுனை அந்-நஹ்ழாவில் இலவச பல் வைத்திய சேவை!
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நடமாடும் பற்சுகாதார சேவைப் பிரிவின் ஏற்பாட்டில், இலவச பல் வைத்திய பரிசோதனை மற்றும் பல் வைத்திய சிகிச்சை சேவைகள் என்பன எமது அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியில் இன்று (21/05/2026) இடம்பெற்றன.
இவ் இலவச பல் வைத்திய சேவையூடாக எமது கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களும், உஸ்தாத்மார்களும் அதிகம் பயனடைந்திருந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.
அந்த வகையில் குறித்த இவ் இலவச வைத்திய சேவையினை எமது கல்லூரியில் ஏற்பாடு செய்வதற்கு அனுமதி வழங்கிய மதிப்பிற்குரிய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மதிப்பிற்குரிய கல்முனை பிரதேச செயலாளர் ஆகியோருக்கும், ஏனைய உத்தியோகத்தர்களுக்கும், இதனை நடாத்தித் தந்த வைத்தியர், தாதி மற்றும் ஏனைய ஊழியர்களுக்கும் எமது கல்லூரி சார்பாக உளப்பூர்வமான நன்றிகளையும், பிரார்த்தனைளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல்:
ஊடகப் பிரிவு
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை
17/05/2026
அல்ஹம்துலில்லாஹ்!
எமது கல்லூரி மாணவன் ஹிபதுல்லாஹ் ஹப்பாப் அஹமட் தனது முதலாவது ஜுஸ்உவினை எமது உஸ்தாத்மார்களின் ஒத்துழைப்போடு குறுகிய காலத்தில் திறன்பட மனனம் செய்து முடித்துள்ளார்.
அவரின் கல்விப் பணி சிறக்க உங்கள் மேலான பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.
ஹிப்ழ் பிரிவு,
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி,
மருதமுனை
16/05/2026
அல்ஹம்துலில்லாஹ்!
எமது கல்லூரி மாணவன் M.F. யூஸுப் தனது இரண்டாவது ஜுஸ்உவினை எமது உஸ்தாத்மார்களின் ஒத்துழைப்போடு 08 நாட்களில் திறன்பட மனனம் செய்து முடித்துள்ளார்.
அவரின் கல்விப் பணி சிறக்க உங்கள் மேலான பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.
HIFZH DIVISION,
AN-NAHLAH ARABIC COLLEGE,
MARUTHAMUNAI.
11/05/2026
அல்ஹம்துலில்லாஹ்!
எமது கல்லூரி மாணவன் முஹம்மது புஆத் யூனுஸ் அஹமட் தனது முதலாவது ஜுஸ்உவினை எமது உஸ்தாத்மார்களின் ஒத்துழைப்போடு குறுகிய காலத்தில் திறன்பட மனனம் செய்து முடித்துள்ளார்.
அவரின் கல்விப் பணி சிறக்க உங்கள் மேலான பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.
HIFZH DIVISION,
AN-NAHLAH ARABIC COLLEGE,
MARUTHAMUNAI.
11/05/2026
அல்ஹம்துலில்லாஹ்!
எமது கல்லூரி மாணவன் முஹம்மது முனீர் முஹம்மது அபாஸ் தனது முதலாவது ஜுஸ்உவினை எமது உஸ்தாத்மார்களின் ஒத்துழைப்போடு குறுகிய காலத்தில் திறன்பட மனனம் செய்து முடித்துள்ளார்.
அவரின் கல்விப் பணி சிறக்க உங்கள் மேலான பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.
HIFZH DIVISION,
AN-NAHLAH ARABIC COLLEGE,
MARUTHAMUNAI.
10/05/2026
அல்ஹம்துலில்லாஹ்!
எமது கல்லூரி மாணவன் முஹம்மது புழைல் யூஸுப் தனது முதலாவது ஜுஸ்உவினை எமது உஸ்தாத்மார்களின் ஒத்துழைப்போடு 18 நாட்களில் திறன்பட மனனம் செய்து முடித்துள்ளார்.
அவரின் கல்விப் பணி சிறக்க உங்கள் மேலான பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.
HIFZH DIVISION,
AN-NAHLAH ARABIC COLLEGE,
MARUTHAMUNAI.
08/04/2026
அல்குர்ஆன் ஹிப்ழ் அங்குரார்ப்பண நிகழ்வும், துஆ பிரார்த்தனையும்!
2026 புதிய கல்வியாண்டில் எமது மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் (ஹிப்ழ்) அல்குர்ஆன் மனனப் பிரிவில் புதிதாக இணைந்து கொண்ட மாணவர்கள் தமது 03 மாதகால அல்குர்ஆன் பயிற்சியை முடித்து, அல்ஹம்துலில்லாஹ் இன்று முதல் (08.04.2026) தமது அல்குர்ஆன் ஹிப்ழை ஆரம்பம் செய்கிறார்கள்.
அந்த வகையில் அம்மாணவர்களை உற்சாகமூட்டும் நிகழ்வும், விஷேட துஆ பிரார்த்தனையும் இன்று (08.04.2026) சுபஹ் தொழுகையைத் தொடர்ந்து எமது கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் M.C.M. பாஹிர் (தப்லீகி) அவர்களின் தலைமையில் எமது கல்லூரியில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் விஷேட அதிதிகளாக எமது கல்லூரியின் கௌரவ நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்ததோடு, மருதமுனை ஜம்மியதுல் உலமா சபையின் கௌரவ தலைவரும், எமது கல்லூரியின் பிரதித் தலைவருமான அல்ஹாபிழ், அஷ்ஷெய்க், A.R. பைசால் கியாஸ் (பலாஹி) அவர்களால் மாணவர்களுக்கான அல்குர்ஆன் ஹிப்ழ் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, மாணவர்கள், உஸ்தாத்மார்கள், நிர்வாகத்தினர், கல்லூரியின் ஆரம்ப ஸ்தாபகர்கள் மற்றும் நலன்விரும்பிகள், நன்கொடையாளர்களுக்காக விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
வல்ல அல்லாஹுத்தஆலா நமது நற்பணிகளை பொருந்திக் கொள்வானாக!
ஆமீன்
தகவல்:
ஊடகப் பிரிவு
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை