02/05/2026
*பெற்றோர் கூட்டம் - 2026*
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ*
*அல்-ஈமான் பகுதி நேர ஹிப்ளு மத்ரஸா* சார்பாக கடந்த *01.05.2026, வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணியளவில்* மாணவர்களின் பெற்றோர்களுக்கான விசேட கூட்டம் ஒன்று காட்டுபாவா ஜும்மா பள்ளிவாசலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
*கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்:*
1. *விசேட பயான்:* குறித்த கூட்டத்தில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட ஆலிம் அவர்கள், "குர்ஆனிய கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பெற்றோரின் பங்களிப்பு" எனும் தலைப்பில் விசேட உரை நிகழ்த்தினார்கள்.
2. *பங்குபற்றுநர்கள்:* மத்ரஸா நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பெருந்திரளானோர் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தனர்.
3. *தீர்மானங்கள்:* கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் மத்ரஸாவின் வளர்ச்சிக்காக தங்களது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், தொடர்ச்சியான ஒத்துழைப்புகளையும் மென்மேலும் வழங்குவதாக ஏகமனதாக தீர்மானித்தனர்.
*பிரார்த்தனை:*
மறைந்த மர்ஹூம் *அஷ்-ஷைக் அத்ஹர் அஷ்ரபி* அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த அல்-ஈமான் பகுதி நேர ஹிப்ளு மத்ரஸா, கியாமத் நாள் வரைக்கும் நிலைத்து நின்று சமூகத்திற்கு சேவையாற்ற வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம்.
*இப்படிக்கு,*
*நிர்வாகம்,*
*அல்-ஈமான் பகுதி நேர ஹிப்ளு மத்ரஸா,*
*எருக்கலம்பிட்டி.*
*02.05.2026*