17/05/2025
இன்றைய தினம் எமது கல்லூரியில் 2024ம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சையில் மாவட்ட ரீதியாக கணித பிரிவில் முதல் நிலை பெற்ற மாணவன் யோ.யதுசன், கலைப் பிரிவில் முதல் நிலையைப் பெற்ற மாணவி பா.தனுசியா, தொழில்நுட்பப்பிரிவில் இரண்டாம் நிலையைப் பெற்ற மாணவன் அ.சஜீபன் மற்றும் உயர் பெறுபேறுகளை பெற்ற மொத்தம் 18 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அன்னமலர் சுரேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் அவரோடு சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை விவசாய போதனாசிரியர் திரு. பாலசிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு முதன்நிலை பெற்ற மாணவர்களுக்கு தனது அன்பளிப்பினையும் வழங்கியிருந்தார். கதாநாயகர்களான மாவட்ட ரீதியில் சிறந்த நிலைகளைப் பெற்ற மாணவர்கள் பாண்ட் வாத்திய இசையோடு அழைத்துவரப்பட்டு பிரதம விருந்தினர்,சிறப்பு விருந்தினர்கள்,கல்லூரி முதல்வர் பிரதி முதல்வர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கச்செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் ,இன்றைய கதநாயகர்களுடைய பெற்றோர் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டு பிரதம விருந்தினர் அவர்களால் வெற்றிப் பதக்கம் அணிவிக்கப்பட்டு மாவட்ட ரீதியில் முதன்மை நிலைகளைப் பெற்ற மாணவர்களுக்கான நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் இன்றைய தினம் எமது கல்லூரியின் கல்லூரிக்கீதமானது இசையமக்கப்பட்டு இறுவெட்டாக வெளியீடு செய்யப்பட்டு கல்லூரிச் சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது. இந் நிகழ்வினை ஒழுங்குபடுத்திய அனைவருக்கும் கல்லூரிச் சமூகம் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது. Mu/ Mallavi Central College