08/06/2026
வன்முறையற்ற எதிர்காலத்திற்காக ஒன்று திரள்வோம். என்ற கருப்பொருள் தாங்கிய மாணவர் விழிப்பூட்டல் நிகழ்வு இன்றைய தினம் எமது பாடசாலை அதிபர் M.S.ஸாஹிரின் SLPS-1 அவர்களின் தலமையில் மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் R.M.H.S.B. ஹேரத் அவர்களினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வு பிரதி அதிபர் M.A.M. ரமீஸ் ஆசிரியர் அவர்களினால் நெறிப்படுத்தப்பட்டது.
06/06/2026
வளமான கல்விச் சூழலை கட்டமைத்தல் என்ற கருப்பொருள் தாங்கி அதிபர் M.S.ஸாஹிரின் (SLPS-1) அவர்களின் வழிகாட்டுதலில் பெற்றோர்களுக்கான வழிகாட்டல் மற்றும் ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி செயலமர்வு ஆகிய நிகழ்வுகள் எமது பாடசாலையில் வெற்றிகரமாக இடம்பெற்றன. இந்நிகழ்வுகளுக்கான வளவாளராக கலந்து சிறப்பித்த அக்கரைபற்று ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் நாடறிந்த வளவாளர் Mr. M.A. தாஜஹான் (S.L.T.E.S.) அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றியனை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தோடு எமது பாடசாலையில் கடமையாற்றும் சிங்கள மொழிபேசும் ஆசிரியர்களுக்கான செயளமர்வு மஹியங்கனை ஆசிரியர் வாண்மைவிருத்தி நிலைய விரிவுரையாளர் திருமதி புஸ்பா (S.L.T.E.S.) அவர்களினால் நடாத்தப்பட்டது. இச்செயளமர்வில் அயல் பாடசாலைகளான ப/தம்பகொல்ல வித்யாலயம் மற்றும் ப/ரோஹன கனிஷ்ட வித்யாலயம் ஆகிய பாடசாலைகளின் ஆசிரியர்களும் பங்குபற்றினர்.
05/06/2026
வலயமட்ட கால்பந்தாட்டப் போட்டியில் முதலாம் இடத்தைப்பெற்று எம்பாடசாலைக்கு பெருமை சேர்த்த அன்புக்குரிய மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியை சுலோசனா ஜயமாலி அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!
05/05/2026
மாணவர் பாராளுமன்றத் தேர்தல்-2026
எமது பாடசாலை மாணவர் பாராளுமன்றத் தேர்தல் இன்றைய தினம் அதிபர் M.S. ஸாஹிரின் SLPS-1 அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஆசிரியர் M.B.M. ஆஷிக் (இஸ்லாஹி) தலமையிலான சமூக விஞ்ஞானக்குழுவினால் மிகவும் நேர்த்தியான முறையில் ஒருங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டது. இத்தேர்தலில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு வாக்களித்து மகிழ்ந்தனர்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர் பாராளுன்ற உறுப்பினர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பான மனம்நிறைந்த வாழ்த்துக்கள்!
17/03/2026
மாகாண மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் அதிக புள்ளிகள் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தரம் பத்தினை சேர்ந்த எமது பாடசாலை மாணவன் நஜாத் மொஹமட் ஸல்மி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதனை மகிழ்வோடு அறியத்தருவதோடு அம்மாணவனின் பெற்றோர் மற்றும் அம்மாணவனை முழுமையாக பயிற்றுவித்த கணிதப்பாடப் பொறுப்பாசிரியர் M.A.M. அக்ரம் sir அவர்களையும் பாடசாலை சமூகம் சார்பாக மனமார வாழ்த்துகின்றோம்.
12/02/2026
"அருள்மிகு ரமழானை அன்புடன் வரவேற்போம்" என்ற மகுடம் தாங்கிய விஷேட வழிகாட்டல் நிகழ்வு இன்றைய தினம் எமது பாடசாலையின் கௌரவ அதிபர் M.S.ஸாஹிரின் (S.L.P.S-1) அவர்களின் வழிகாட்டலில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வின் வளவாளர்களாக பங்கரகம்மன அல்ஹிக்மா குர்ஆன் மத்ரஸாவின் உஸ்தாத்மார்களான மௌலவி ஹாலித் (ஷரபீ), மௌலவி நவ்ஷாத் (ரஷாதி) மற்றும் மௌலவி ஹிதாயதுல்லாஹ் (புர்கானி) ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கிவைத்தனர். இந்நிகழ்வினை ஆசிரியர் M.B.M. ஆஷிக் (இஸ்லாஹி) நெறிப்படுத்தினார்.
30/01/2026
2026 புதிய கல்வியாண்டின் தரம் ஒன்றிற்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கௌரவ அதிபர் M.S.ஸாஹிரின் (S.L.P.S-1) அவர்களின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வை ஆரம்பப்பிரிவு பகுதித் தலைவர் ஆசிரியை நஜ்மா நிஸார் நெறிப்படுத்தியதோடு மாணவர்களின் கல்வி நடவடிக்கை துஆ பிரார்த்தனையோடு பங்கரகம்மனை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி ஹாலித் (ஷரஈ) அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
13/01/2026
Our respected Principal Mr.M.S.Zahirin (S.L.P.S) presenting a letter of appreciation to the SFRD Representative in gratitude for their generous contribution of school stationery to 65 flood-affected students.
We sincerely thank SFRD for their valuable support and commitment to education.