IIIT

IIIT Islamic Institute of Information Technology is a TVEC Approved Institute in Madampe, Sri Lanka Islamic Institute of Information Technology

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு - 2026(Certificate Awarding Ceremony)மாதம்பை இஸ்லாஹிய்யாவின் துணை நிறுவனமான தகவல் தொழில்நுட்ப...
24/05/2026

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு - 2026
(Certificate Awarding Ceremony)

மாதம்பை இஸ்லாஹிய்யாவின் துணை நிறுவனமான தகவல் தொழில்நுட்பத்திற்கான இஸ்லாமிய நிறுவனத்தினால் (Islamic Institute of Information Technology -IIIT) இவ்வருடம் க.பொ.த (சாதாரண தரப்) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட 50 நாட்கள் தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவ (Leadership and Management Studies - LMS) வதிவிட கற்கைநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 23.05.2026 அன்று இஸ்லாஹிய்யா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இஸ்லாஹிய்யாவின் முதல்வர் கலாநிதி எம்‌. இஸட். எம். முபீர் (இஸ்லாஹி),
IIIT நிறுவனத்தின் முகாமையாளர் கலாநிதி ஏ.ஏ.எம். ஸாதிக் (இஸ்லாஹி) ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இஸ்லாஹிய்யா தொடர்பான அறிமுகத்தை கல்வி விவகாரப் பகுதியின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எம். நிஸாம்தீன் (இஸ்லாஹி)நிகழ்த்தினார்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற விங் கொமாண்டர் (Wing Commander) எம்.எச்.எம்.சீபா கலந்து சிறப்பித்தார்.

பல மாணவர்களை ஆன்மீகம் ஒழுக்கம், பண்பாடு, ஆளுமை ரீதியாக வழிகாட்டிய பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட IIIT நிறுவனத்தினால் நடாத்தப்படும் இந்த தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ (LMS) வதிவிடக் கற்கைநெறியின் நோக்கங்கள் மற்றும் இலக்குகளை தற்கால புதிய மறுசீரமைப்புடன் அஷ்ஷெய்க். ரிழ்வான் (இஸ்லாஹி) தெளிவுபடுத்தினார்.

இந்த 50 நாட்கள் வதிவிட செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்களில் கல்வி செயற்பாடுகள், தலைமைத்துவம், ஆன்மீக ரீதியாக அதிகூடிய திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பதக்கங்களும் அணிவித்து கெளரவிக்கப்பட்டது.

மாணவர்கள் 50 நாட்களும் கடந்து வந்த தங்களது நாட்களை தொகுத்து சுவாரஸ்யமான முறையில் தயார் செய்த ஆவண வீடியோ, குறுந்திரைப்படமும் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்கள் தங்களது மாணவர்களில் ஏற்பட்ட சாதகமான பல ஆளுமை ரீதியான மாற்றங்களினால் திருப்தியுற்று தங்களது பின்னூட்டல்களைத் தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தமை இந்த நிகழ்வின் விஷேட அம்சமாகும்.

இந் நிகழ்வில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், இஸ்லாஹிய்யா விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Annual Awarding Ceremony
23/05/2026

Annual Awarding Ceremony

மாதம்பை இஸ்லாஹிய்யாவின் புதிய மாணவர் அனுமதி 2026க.பொ.த (சாதாரண) பெறுபேறுகளுக்குப் பின் உயர்தர கலை, வர்த்தக துறையுடன் இணை...
16/05/2026

மாதம்பை இஸ்லாஹிய்யாவின் புதிய மாணவர் அனுமதி 2026
க.பொ.த (சாதாரண) பெறுபேறுகளுக்குப் பின் உயர்தர கலை, வர்த்தக துறையுடன் இணைந்து இஸ்லாமியக் கற்கைகளைத் தொடர விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
க.பொ.த (சாதாரண) தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி ஒரு வாரத்தில் நேர்முகப் பரீட்சை நடைபெறும்.
கற்கைநெறிகள்:
1. Licentiate in Arabic Language and Islamic Studies (Arts Stream)
காலம் - 05 வருடங்கள்
2. Diploma in Arabic Language and Islamic Studies (Commerce Stream)
காலம் - 03 வருடங்கள்
✅TVEC அங்கீகாரம் பெற்ற தகவல் தொழில்நுட்பச் சான்றிதழ் (IIIT).
✅அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைத் தொடரும் வாய்ப்பு.
✅மும்மொழிப் பாண்டித்தியம் மற்றும் சிறந்த ஆளுமை விருத்தி வழிகாட்டல்கள்.
கீழுள்ள லிங்க் மூலம் உங்களது முன்பதிவுகளை இப்போதே மேற்கொள்ளலாம்:
https://forms.gle/wH2s1XpNrJnEAZKy5
மேலதிக தொடர்புகளுக்கு:
077 376 3814
075 547 4726
076 261 0450

03/05/2026

Application Called for New Intake 2026

Islahiyyah Arabic College – A well-established institution combining Islamic and modern education since 1987. Madampe, Sri Lanka.

மாதம்பை இஸ்லாஹிய்யாவின் துணை நிறுவனமான தகவல் தொழில்நுட்பத்திற்கான இஸ்லாமிய நிறுவனத்தினால் (Islamic Institute of Informat...
06/04/2026

மாதம்பை இஸ்லாஹிய்யாவின் துணை நிறுவனமான தகவல் தொழில்நுட்பத்திற்கான இஸ்லாமிய நிறுவனத்தினால் (Islamic Institute of Information Technology - IIIT) சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடாத்தப்படும் 50 நாட்கள் தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவ கற்கைநெறியின் (Leadership & Management Studies -LMS) ஒன்பதாம் தொகுதி மாணவர்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 05.04.2026 அன்று இஸ்லாஹிய்யா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

IIIT நிறுவனத்தின் முகாமையாளர் கலாநிதி ஏ.ஏ. எம். ஸாதிக் (இஸ்லாஹி)அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வரவேற்புரையை இஸ்லாஹிய்யாவின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் நிஸாம்தீன் (இஸ்லாஹி) நிகழ்த்தினார்.

இந்த 50 நாட்கள் வதிவிட கற்கை நெறி தொடர்பான அறிமுகம் மற்றும் முக்கியத்துவத்தை அஷ்ஷெய்க் ரிழ்வான் (இஸ்லாஹி) அவர்கள் வழங்கினார்கள்.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கொட்டராமுல்லை அல்- ஹிறா பாடசாலையின் அதிபர் எம்.எச். பஸ்ரி அவர்கள் கலந்து கொண்டு தற்போதைய இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக உரையாற்றினார்.

இந் நிகழ்வில் 50 நாட்கள் வதிவிட கற்கைநெறிக்கு வருகை தந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், இஸ்லாஹிய்யா விரிவுரையாளர்கள், மாணவ தலைவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.

இந் நிகழ்வை அஷ்ஷெய்க் ஸ்ப்ரீன் (இஸ்லாஹி) சிறப்பாக நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

28/02/2026

What is Next After O/L?

O/L பரீட்சை நிறைவுற்றதும் என்ன செய்வதென்று யோசனையா?

கவலையை விடுங்கள்!

ரம்மியமான இஸ்லாமிய சூழலில் உங்களது தலைமைத்துவம் மற்றும் மேலாண்மைத் திறன்களை விருத்தி செய்து நவீன உலகிற்கு தகுதியுள்ளவராக உங்களை மாற்றக் காத்திருக்கின்றது,
மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் (Tertiary and Vocational Education Commission - TVEC ) அங்கீகாரமிக்க மூன்று தசாப்தங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்ட மாதம்பையில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பத்திற்கான இஸ்லாமிய நிறுவனம் (Islamic Institute of Information Technology - IIIT)

✅ பாதுகாப்பான இஸ்லாமிய சூழல்
✅ அனுபவம் வாய்ந்த வளவாளர்கள்
✅ மாணவர் நேய (Student Friendly) பசுமைச் சூழல்
✅ வசதியான விடுதிகள்
✅ TVEC அங்கீகாரமிக்க சான்றிதழ்கள்

IIIT நிறுவனம் மாதம்பை இஸ்லாஹிய்யாவுடன் இணைந்து நடாத்தும் 50 நாட்கள் வதிவிடப் பாடநெறி!

Diploma in Leadership and Management Studies (LMS) -2026

கற்கைநெறி முடிவில்,

✨ ஆங்கிலத்தை பேசுவதற்கான பயிற்சி - Spoken English
✨ Certificate in Information Technician
✨ வாழ்க்கை திறன்கள் தொடர்பான செயலமர்வுகள்
(Life Skills Management)
✨ இஸ்லாமியக் கற்கைகள்
(Islamic Studies)
✨ தனியாள் விருத்தி தொடர்பான செயன்முறை வழிகாட்டல்கள்
(Personality Development)
✨அல்குர்ஆனிய கற்கைகள்
(Alquranic Studies)
✨ செஞ்சிலுவைச் சங்கத்தினால் நடாத்தப்படும் முதலுதவிப் பயிற்சிப் பட்டறை (First Aid Workshop - Red Cross Society)

விரைவில் ஆரம்பிக்கப்படும் இவ் வதிவிட கற்கைநெறிக்கு குறிப்பிட்ட மாணவர்களே உள்வாங்கப்படவுள்ளதால்

♦️இன்றே பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்

📎கீழ்வரும் இணைப்பில் உள்ள Google Form இனைப் பூரணப்படுத்தி உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்!
https://forms.gle/Kkoyd64MAbK56haa6

விண்ணப்ப முடிவுத் திகதி : 15.03.2026

மேலதிக தொடர்புகளுக்கு!
வட்ஸ்அப் மற்றும் தொலைபேசி
077 734 5367

Our page (IIIT) :
https://www.facebook.com/share/15jMvAPh2K/

WE ARE HIRING: LECTURERS (60-DAY PROJECT)Join the IIIT team in Madampe! We are looking for qualified Lecturers for:1. IC...
26/02/2026

WE ARE HIRING: LECTURERS (60-DAY PROJECT)

Join the IIIT team in Madampe! We are looking for qualified Lecturers for:

1. ICT (Information & Communication Technology)
2. Spoken English

REQUIREMENTS:
Relevant academic or professional qualifications
Strong communication and presentation skills
Teaching experience is an advantage

Salary: Negotiable
Project Duration: 60 Days

Closing Date: 15.03.2026

HOW TO APPLY:
Email your CV to: [email protected]
For more details call: 076 701 5013

25/07/2025

NEW INTAKE 2025

23/07/2025

இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி மாதம்பை
புதிய மாணவர் பிரவேசப் பரீட்சை 2025

2025/2026 கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் ஜூலை மாதம் 29ம் திகதி செவ்வாய்க்கிழமை மாதம்பை இஸ்லாஹிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

நேர்முகப் பரீட்சை இன்ஷா அல்லாஹ் காலை 09.00 மணி தொடக்கம் ஆரம்பமாகும். எழுத்துப் பரீட்சை மதியம் 02.00 மணிக்கும் நடைபெறும்.

மேலதிக விபரங்களுக்கு
0770729665
0766593450
0767015013

எமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கம்
https://www.facebook.com/share/1FvLSFVx5Y/

Address

Old Town
Madampe
61230

Opening Hours

Monday 08:00 - 18:00
Tuesday 08:00 - 18:00
Wednesday 08:00 - 18:00
Thursday 08:00 - 18:00
Friday 08:00 - 18:00
Saturday 08:00 - 18:00
Sunday 08:00 - 18:00

Telephone

+94773171718

Alerts

Be the first to know and let us send you an email when IIIT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category